1) நபி முஹம்மத் ﷺ அவர்களின் இரத்தம்

149

நபி முஹம்மத் ﷺ அவர்களின் இரத்தம் 

 

عَنْ عَبْدُ اللهِ بنُ الزُّبَيْرِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّمَ وَهُوَ يَحتَجِمُ ، فَلَمَّا فَرَغَ قَالَ يَا عَبدَ اللَّهِ اذهَب بِهَذَا الدَّمِ فَأَهرِقهُ حَتَّى لا يَرَاهُ أَحَدٌ فَلَمَّا بَرَزَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّمَ عَمَدَ إِلَى الدَّمِ فَشَرِبَهُ فَقَالَ يَا عَبدَ اللَّهِ مَا صَنَعتَ؟ قَالَ جَعَلتُهُ فِي أَخفَى مَكَانٍ ظَنَنتُ أَنَّهُ يَخفَى عَلَى النَّاسِ قَالَ لَعَلَّكَ شَرِبتَهُ قَالَ نَعَم

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரத்தம் குத்தி எடுத்தார்கள். எடுத்த குருதியை எடுத்துச் சென்று எவர் பார்வையிலும் படாத இடத்தில் மறைத்து விடுமாறு அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பணித்தார்கள். நான் அதனை எடுத்துச் சென்று மறைவிடத்தில் குடித்து விட்டேன்.குருதியை என்ன செய்தீர்? என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடம் விசாரித்தார்கள். மனிதருக்கு மறைவாக உள்ள ஓர் இடத்தில் அதனை (பத்திரமாக) வைத்துள்ளேன் என்றார். குருதியைக் குடித்து விட்டீர்களா? என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். ஆமாம் (நாயகமே! நான் அதனைக் குடித்து விட்டேன் என்றார். எதற்காகக் குடித்தீர்கள் என்று கேட்க. தாங்கள் குருதியை நரகம் தீண்டாது என்பதை திட்டமாக நான் அறிந்திருந்தேன். அதன் பறக்கத்தால் என்னை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவே குடித்தேன் என்று அடக்கத்துடன் விடை சொன்னதும், நரக நெருப்பு உம்மைத் தொடாது என்று கூறிய இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் பாசத்தால் என் தலையை வருடினார்கள்)

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஷறஹு ஷிபா 1/162

 

احتجم النبي صلى الله عليه و سلم ثم قال لي خذ هذا الدم فادفنه من الدواب والطير أو قال الناس والدواب قال فتغيبت به فشربته قال ثم سألني فأخبرته أني شربته فضحك

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரத்தம் குத்தி எடுத்து விட்டு பிறகு என்னிடம் “இந்த இரத்தத்தை எடுத்து பறவைகள் அல்லது மக்கள் மற்றும் கால் நடைகளின் (கண்ணில்படாதவாறு) புதைத்து விடுங்கள்” என்று கூறினார்கள். எனவே நான் தனியே சென்று அதைக் குடித்து விட்டேன். பிறகு இறைத்தூதர் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் இதைப் பற்றிக் கேட்ட போது நான் அதைக் குடித்தேன் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெரிவித்தேன் அவர்கள் சிரித்தார்கள்.

 

அறிவிப்பவர் :- சபீனா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் பைஹகி” அஸ்ஸுனன் அல் குப்ரா 7/67

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.