1) நபி முஹம்மத் ﷺ அவர்களை குறித்து பேசிய மாற்று மத சில நவீன அறிஞர்கள்

75

1) நபி முஹம்மத் ﷺ அவர்களை குறித்து பேசிய மாற்று மத சில நவீன அறிஞர்கள்

 

உலகில் நூறு தலைவகளை பொறுக்கியெடுத்து அதில் முதல் இடத்தை இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கிய மைக்கேல் ஹார்ட் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறித்து இவ்வாறு கூறுகிறார்.

 

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்றில் தனித்து விளங்குகிறார், உலகம் சமயம் என அனைத்து துறைகளிலும் அவர் மகத்தான வெற்றிவாகை சூடினார். மேலும் அவர்கள் இஸ்லாத்தின் பக்கம் அழைத்த அவர்கள் அரசியல், இராணுவம், சமயம் என அனைத்திற்கும் தன்னை வழிகாட்டியாக நிலை நிறுத்தினார்கள்.

 

في كتابه ” الخالدون مائة أعظمهم محمد

நூல் :- alkhalidun miayat ‘aezamuhum muhamad

 

உலகில் மிகச்சிறந்த எழுத்தாளரான டால்ஸ்டாய் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பற்றி இவ்வாறு கூறுகிறார்.

 

அநாகரீகமான, மற்றும் ஷைத்தானிய சிந்தனைகளுக்கு ஆட்பட்டிருந்த அந்த மக்களை மகத்தான சமுதாயமாக மாற்றியதே அவர்களின் பெருமைக்கு போதுமானது.
அவர்களின் அறிவையும், ஞான கருத்துக்களையும் பார்க்கும் போது அவரின் மார்க்கம் ஒருநாள் உலகத்திற்கு தலைமை ஏற்கும்.

في كتابه” حِكَم النبي محمد

நூல் :- hikamun nabiu muhamad

 

நோபல் பரிசு பெற்ற மிகச்சிறந்த சிந்தனையாளர் தாமஸ் கார்லைல் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இவ்வாறு கூறினார்.

 

இஸ்லாம் பொய்யானது, முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) ஒரு மோசடிக்காரர் என்று ஒரு பெரிய பொய் மக்களுக்கு பரப்படுகிறது, ஆனால் உண்மையில் முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்) வாழ்க்கை உண்மை நிறைந்தது. இறக்க குணமும் பரிசுத்த தன்மையும் கண்ணியமும் நிறைந்தது. என்றார்.

 

في كتابه” الأبطال

நூல் :- al’abtal

 

குறிப்பு :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவு படுத்தியவர்கள் இவ்வுலகில் இகழப்பட்ட நிலையில் அழிந்து போனார்கள். அவர்களை புகழ்ந்து மக்கள் மத்தியில் உன்மையை வெளிப்படுத்திய யூத நஸாரா மற்றும் மாற்று மத அறிஞர்கள் அனைவரும் இவ்வுலகில் புகழப்பட்ட நிலையில் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்த நிலையில் இன்று வரை அவர்கள் பேசப்பட்டு வருகிறார்கள் என்பதை நம்மால் காணமுடிகிறது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.