1) நம்பிக்கையும் அவநம்பிக்கையும்

51

1) நம்பிக்கையும் அவநம்பிக்கையும்

 

எது நடந்தாலும் கடவுள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நடக்கிறது என்ற இறைநம்பிக்கை நவீன போலி தவ்ஹீத் வஹாபிஷ அமைப்புக்களிடம் இல்லாத காரணத்தால் தவறான வார்த்தைகளை இஸ்லாத்திற்கு முறனாக முன் வைத்து வருகிறார்கள்.

 

மவுன்ட் ரோட் தர்ஹாவின் கூரை இடிந்து விழுந்ததால்! அவுலியாக்கள் காப்பாற்ற வில்லையா என்ற கேள்வி அவநம்பிக்கை சாந்த கேள்வியாகும்.

 

காரணம் :- அவ்லியாக்கள் என்பவர்கள் அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்றவர்கள். அவன் நாடினால் அவர்களால் காப்பற்ற உதவி செய்ய முடியும். இல்லை என்றால் எந்த விதத்திலும் காப்பாற்ற உதவி செய்ய முடியாது. அவர்கள் கடவுள் அல்ல. அவர்களுக்கு சுய ஆற்றலும் கிடையாது. இதுவே அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவ முஸ்லிம்களின் ஆழமான நம்பிக்கையாகும்.

 

கேள்வி :- பாபர் மசூதி போன்ற பல மஸ்ஜிதுகள் இடிக்கப்பட்டது. நிலநடுக்கம் சுனாமி புயல் போன்ற காலநிலை மாற்றங்களால் பல மஸ்ஜிதுகள் பாதிக்கப்பட்ட போது ஏன் அல்லாஹ் காப்பாற்ற வில்லை?

 

நவீன தவ்ஹீத் வஹ்ஹாபிஷ வாதிகளின் பதில் :- அல்லாஹ் மஸ்ஜிதுகளில் இல்லை. அவன் அர்ஷ் எனும் சிம்மாசனத்தில் கதிரையில் உக்காந்து இருக்கிறான் என்று அவநம்பிக்கைக்கை சார்ந்த கருத்துருக்களை கூறுகிறார்கள்.

 

அப்படி என்றால் இறைஇல்லம் கஃபாவை யானை படை அழிக்க வந்தபோதும் அல்லாஹ் அர்ஷ் எனும் சிம்மாசனத்தில் கதிரையில் தானே இருந்தான்!🤭 அந்த நேரத்தில் பாதுகாக்க முடிந்த இறைவனுக்கு இந்த நேரத்தில் பல இறைஇல்லங்களை பாதுகாக்க முடியாமல் ஏன் போய் விட்டது?🤔 சற்று சிந்தித்துப் பாருங்கள்.

 

மாற்று மதத்தினர்கள் அவர்களின் கடவுள்களை ஓர் சிம்மாசனம் கதிரையில் உற்கார வைப்பது போல. அல்லாஹ்வும் அர்ஷ் எனும் சிம்மாசனத்தில் கதிரையில் உற்காந்து இருக்கிறான் என்று அவநம்பிக்கைக்கை கொள்ள வேண்டாம். அது உருவ வணங்கிகளின் நிலைப்பாடாகும்.

 

اَلرَّحْمٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوٰى‏

 

குர்ஆன் கூறுகிறது அர்ரஹ்மான் அர்ஷின் மீது (ஆட்சியை) அமைத்தான்.

சூரா தாஹா ஆயத் 5

 

إنَّ اللّٰه خَلَقَ الْعَرْشَ إظْهَارًا لِقُدْرَتِهِ وَلَمْ يَتَّخِذْهُ مَكَانًا لِذَاتِهِ

 

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக அல்லாஹ் அர்ஷை தனது வல்லமையை வெளிப்படுத்துவதற்காகவே படைத்துள்ளான். அவனுக்கு அதனை இடமாக அதாவது இருப்பதற்கு இடமாக எடுத்துக் கொள்வதற்கு அல்ல.

 

ஆதாரம் அல் பர்கு பைனல் பிரகி 333

 

அல்லாஹ்விற்கு கற்பனையில் உருவம் கற்பித்து அவனை அர்ஷ் எனும் சிம்மாசனத்தில் கதிரையில் உற்கார வைத்து வணங்குவது ஷிர்க் இணைவைப்பாகும். இதனால் தான் நவீன தவ்ஹீத் வஹ்ஹாபிஷ அமைப்புக்களை உருவ வணங்கிகள் என்று அழைக்கப்படுகிறது.

 

அடுத்து சுவர்த்தில் வைத்து நபி ஆதம் ஹல்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஷைத்தான் வழிகெடுக்கும் போது அல்லாஹ் எங்கிருந்தான்? அந்த நேரத்தில் ஏன் அவர்களை பாதுகாக்க வில்லை? ஒரு வேளை அந்த நிகழ்வு நடக்கும் போது அல்லாஹ் அர்ஷ் எனும் சிம்மாசனம் கதிரையில் தூங்கி கொண்டு இருந்தானா?. இல்லை சகோதரர்களே!. அல்லாஹ் அந்த நிகழ்வை நன்கறிந்தவனாகவும். அவ்வாறே அது நடக்க வேண்டும் என்று நாடியுள்ளான் அதே போன்று அதுவும் நடந்தது என்ற கருத்தையே! நபிமொழிகள் பறைசாற்றுகிறது.

 

மேலும் அல்லாஹ் தஹஜ்ஜத் நேரத்தில் என்னிடம் கேளுங்கள் நான் தருகிறேன் உங்கள் தேவைகளை நிறைவேற்றுகிறேன் என்று ஒவ்வொரு நாளும் கூறுகிறான் என்று நபிமொழிகள் பறைசாற்றுகிறது. அப்படி இருக்க இன்றைய காலகட்டத்தில் எத்தனையோ முஸ்லிம்கள் கொரோனா நோய் நீங்க வேண்டும் என்று தஹஜ்ஜத் நேரத்தில் அல்லாஹ்விடம் துஆ கேட்டுக் கொண்டுதான் இருப்பார்கள்! ஆனால் இன்னும் கொரோனா நோய் நீங்க வில்லை. இதை காரணமாக வைத்து அல்லாஹ்விற்கு சக்தி கிடையாது என்று தவ்ஹீத் அமைப்புக்கள் கூறுவார்களா?

 

முஸ்லிம்களே! அவநம்பிக்கைக்கை சார்ந்த சந்தேகங்களை விட்டும் விலகி நடங்கள். அல்லாஹ் படைப்பாளி. அவன் நாடினால் பாதுகாக்கவும் முடியும். அவன் நாடினால் அதனை அழிக்கவும் முடியும். எது நடந்தாலும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நடக்கிறது என்று இறைநம்பிக்கை கொள்ளுங்கள். அவனிடன் கேட்பது உங்கள் கடமை. கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் அவன் இஷ்டம். ஆக வஹாபிஷ வாதிகள் போன்று அவநம்பிக்கைக்கை கொள்ள வேண்டாம். இஸ்லாம் தெளிவான மார்க்கமாகும்.

 

அடுத்த வாதம் :- அவ்லியாக்களின் கப்ரு தர்ஹாக்கள் இருக்கும் இடங்களில் உள்ள சுவர்கள் இடிந்து விழுந்த காரணத்தால்! அவரும் நம்மைப் போல ஒரு சாதாரண மனிதர்.‌ அவர் அவ்லியா கிடையாது. அப்படி அவர் அவ்லியாவாக இருந்திருந்தால் அந்த சுவருகள் இடிந்து விழ வாய்ப்பில்லை என்பதாக அவநம்பிக்கைக்கை கொள்வது முற்றிலும் தவறு. காரணம்

 

لَمَّا سَقَطَ عَلَيْهِمُ الْحَائِطُ فِي زَمَانِ الْوَلِيدِ بْنِ عَبْدِ الْمَلِكِ أَخَذُوا فِي بِنَائِهِ

 

இப்னு அப்தில் மலிக்கின் (ஆட்சிக்) காலத்தின் போது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடக்கம் செய்யப்பட்ட அறையின் ஒரு சுவர் இடிந்து விழுந்தது.

 

ஆதாரம் புஹாரி 1390

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீபை சுற்றி இருக்கும் சுவர்கள் அப்துல் மலிகின் காலத்தில் இடிந்து விழுந்துள்ளது. ஆக இதை காரணமாக வைத்து. நபிமார்களின் கப்ரு தர்ஹாக்கள் இருக்கும் இடங்களில் உள்ள சுவர்கள் இடிந்து விழுந்த காரணத்தால்! அவரும் நம்மைப் போல ஒரு சாதாரண மனிதர் தான்.‌ அவர் நபி கிடையாது. அப்படி அவர் நபியாக இருந்திருந்தால் அந்த சுவருகள் இடிந்து விழ வாய்ப்பில்லை என்பதாக வஹ்ஹாபிஷ வாதிகள் கூறுவார்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.