10) கேள்வி :- இறைத்தூதர் ﷺ அவர்கள் ஏனைய மணைவியர்களை விட ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டினார்களா?
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ مَا غِرْتُ عَلَى أَحَدٍ مِنْ نِسَاءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا غِرْتُ عَلَى خَدِيجَةَ، وَمَا رَأَيْتُهَا، وَلَكِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ ذِكْرَهَا وَرُبَّمَا ذَبَحَ الشَّاةَ ثُمَّ يُقَطِّعُهَا أَعْضَاءً ثُمَّ يَبْعَثُهَا فِي صَدَائِقِ خَدِيجَةَ، فَرُبَّمَا قُلْتُ لَهُ كَأَنَّهُ لَمْ يَكُنْ فِي الدُّنْيَا امْرَأَةٌ إِلَّا خَدِيجَةُ فَيَقُولُ إِنَّهَا كَانَتْ وَكَانَتْ وَكَانَ لِي مِنْهَا وَلَدٌ
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போல் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வேறெந்த மனைவியின் மீதும் ரோஷப்பட்டதில்லை. நான் அவர்களை பார்த்ததில்லை. ஆனால், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை அதிகமாக நினைவு கூர்ந்து (புகழ்ந்து பேசி) வந்தார்கள். அவர்கள் சில வேளைகளில் ஆட்டை அறுத்து அதைப் பால துண்டுகளாகப் பிரித்த, பிறகு அதை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் தோழிகளிடையே (பங்கிட) அனுப்பி விடுவார்கள். சில வேளைகளில் நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், ‘உலகில் கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லாததைப் போல் நடந்து கொள்கிறீர்களே!’ என்று கேட்டதுண்டு. அப்போது அவர்கள், ‘அவர்கள் (புத்திசாலியாக) இருந்தார்கள்; (சிறந்த குணமுடையவராக) இருந்தார்கள். (இப்படி, இப்படியெல்லாம் இருந்தார்கள்) மேலும், எனக்கு அவர் வாயிலாகத்தான் பிள்ளைச் செல்வம் கிடைத்தது’ என்று பதில் கூறினார்கள்.
நூல் ஆதாரம் :- புஹாரி 3828 முஸ்லிம் 2435
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை விட அதிகமாக அக்கரை காட்டிய மனைவி அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் என்பதை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள் என்ற செய்தியை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ أَقْرَعَ بَيْنَ نِسَائِهِ فَطَارَتِ الْقُرْعَةُ لِعَائِشَةَ وَحَفْصَةَ وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ بِاللَّيْلِ سَارَ مَعَ عَائِشَةَ يَتَحَدَّثُ
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயணம் மேற்கொள்ள விரும்பினால் தம் துணைவியரிடையே சீட்டுக் குலுக்குவார்கள். (யாருடைய பெயர் வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துச் செல்வார்கள்.) (ஒரு முறை) என்னுடைய பெயரும் ஹஃப்ஸாவின் பெயரும் (குலுக்கலில்) வந்தது. இரவு நேரப் பயணத்தில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுடன் பேசிக்கொண்டே வருவார்கள்.
நூல் ஆதாரம் :- புஹாரி 5211
عَنْ قَتَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ حَدَّثَهُمْ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَطُوفُ عَلَى نِسَائِهِ فِي اللَّيْلَةِ الْوَاحِدَةِ، وَلَهُ يَوْمَئِذٍ تِسْعُ نِسْوَةٍ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரே இரவில் தம் எல்லா துணைவியரிடமும் (சரிசமமாக) சென்று விட்டு வந்து விடுவார்கள். அப்போது அவர்களுக்கு ஒன்பது துணைவியர்கள் இருந்தனர்.
நூல் ஆதாரம் :- புஹாரி 5215
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا انْصَرَفَ مِنَ الْعَصْرِ دَخَلَ عَلَى نِسَائِهِ فَيَدْنُو مِنْ إِحْدَاهُنَّ فَدَخَلَ عَلَى حَفْصَةَ فَاحْتَبَسَ أَكْثَرَ مِمَّا كَانَ يَحْتَبِسُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அஸ்ர் தொழுகை முடிந்தவுடன் தம் துணைவியரிடம் செல்வார்கள். அப்போது அவர்களில் சிலருடன் நெருக்கமாக இருப்பார்கள். அவ்வாறே (ஒருநாள்) தம் துணைவியாரான ஹஃப்ஸாவிடம் சென்று வழக்கமாகத் தங்கும் நேரத்தைவிட அதிக நேரம் தங்கினார்கள்.
நூல் ஆதாரம் :- புஹாரி 5216
மேற்கூறிய ஹதீஸ்கள் பிரகாரம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனைவியர்களை பயணம் கூட்டிச் செல்ல விரும்பினாலும் சரி அவர்களுடைய வீடுகளுக்கு இரவு பகலில் செல்வதாக இருந்தாலும் சரி சரிசமமாக வாழ்ந்து காட்டிச் சென்றவர்கள் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ஆக அவர்கள் ஏனைய மணைவிமார்களை விட ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் விஷயத்தில் அக்கரை காட்டினார்கள் என்று கூறுவது முற்றிலும் தவறாகும்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில சமயங்களில் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டில் தங்கியதன் காரணம் பற்றி கீழ் கானும் ஹதீஸ்கள் தெளிவு படுத்துகிறது.
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ سَوْدَةَ بِنْتَ زَمْعَةَ وَهَبَتْ يَوْمَهَا لِعَائِشَةَ، وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْسِمُ لِعَائِشَةَ بِيَوْمِهَا وَيَوْمِ سَوْدَةَ
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். (இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியாரான) சவ்தா பின்த் ஸம்ஆ ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், (இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) தம்மிடம் தங்கும் நாளை எனக்கு அன்பளிப்பாக (விட்டு)க் கொடுத்தார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னுடைய நாளையும் ‘சவ்தா’ அவர்களின் நாளையும் எனக்கே ஒதுக்கி வந்தார்கள்.
நூல் ஆதாரம் :- புஹாரி 5212
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَسْأَلُ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ أَيْنَ أَنَا غَدًا؟ أَيْنَ أَنَا غَدًا؟ يُرِيدُ يَوْمَ عَائِشَةَ فَأَذِنَ لَهُ أَزْوَاجُهُ يَكُونُ حَيْثُ شَاءَ فَكَانَ فِي بَيْتِ عَائِشَةَ حَتَّى مَاتَ عِنْدَهَ
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த நோயில் மரணித்தார்களோ அந்த நோயின் போது, ‘நாளை நான் எங்கே இருப்பேன்? நாளை நான் எங்கே இருப்பேன்?’ என்று என்னுடைய (முடிவு வரும்) நாளை மனத்தில் எண்ணியவாறு கேட்டுக்கொண்டிருந்தார்கள். எனவே, அவர்களின் (மற்ற) துணைவியர், தாம் விரும்பிய இடத்தில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாங்கிக் கொள்ளலாம் என அவர்களுக்கு அனுமதியளித்தனர். எனவே இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (விரும்பியபடி) தாம் மரணிக்கும் வரை என்னுடைய வீட்டிலேயே தங்கி இருந்தார்கள்.
நூல் ஆதாரம் :- புகாரி 5217
மேற்கூறிய ஹதீஸ்களை கூர்ந்து கவனிக்கும் போது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் வீட்டில் அதிகம் தங்குவதற்கு மற்ற மனைவியர்களின் அனுமதியை பெற்ற பின்னர் தான் அங்கு தங்கினார்கள். காரணம் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டுக்கு அருகில் மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசல் இருப்பதனால். அவர்கள் ஐந்து நேரத்திற்கும் தொழுகை நடத்த சென்றுவர இலேசாக இருந்தது. மேலும் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டுக்கு அருகில் ஜன்னதுல் பக்கீ பொது மய்யவாடி இருந்த காரணத்தால்! இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவு நேரங்களில் கப்ருகளை ஸியாரத் செய்ய இலேசாக இருந்தது. இவைகளை காரணமாக வைத்து தான் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகில் இருந்த படியே அதிகமான ஹதீஸ்களை இஸ்லாமிய சட்டதிட்டங்களை மருத்துவ துறைகளை கற்றுக் கொண்டார்கள் என்ற விஷயமும் தெளிவாகிறது.
குறிப்பு :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணம் செய்ததில் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மட்டுமே கன்னியர் மற்றவர்கள் அனைவரும் விதவைகள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஆக ஏனைய மணைவிமார்களை விட ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு மட்டும் தான் அக்கரை காட்டினார்கள். அவர்களின் வீட்டில் மட்டுமே தங்கினார்கள். மற்ற மனைவியர்களின் வீடுகளில் தங்கவில்லை என்று கூறுவது முற்றிலும் தவறு. இதுவெல்லாம் அப்பட்டமான பொய் என்பது தெளிவாகிறது. எனவே இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏனைய மணைவிமார்களை போன்று தான் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடனும் சரிசமமாக நடந்து கொண்டார்கள் என்ற நற்செய்திகளை மேற்கூறிய ஹதீஸ்களை மூலாதாரமாக வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்