10) நபி முஹம்மத் ﷺ அவர்களை புகழ்ந்து மௌலிது ஓதுவதன் மூலம் கிடைக்கப்பெறும் நன்மைகள்
10) நபி முஹம்மத் ﷺ அவர்களை புகழ்ந்து மௌலிது ஓதுவதன் மூலம் கிடைக்கப்பெறும் நன்மைகள்
📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்
எழுத்தாசிரியர் :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : إِنَّ مِنَ الشِّعْرِ حِكْمَةً
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் நிச்சயமாக கவிதைகளிலும் ஞானம் (ஹிக்மத்) உண்டு
அறிவிப்பவர் :- உபை இப்னு கஹ்ப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 6145 அபூதாவூத் 5010, 5012 திர்மிதி 2844, 2845 இப்னு மாஜா 3755, 3756 தாரமீ 2746, அஹ்மது 2424, 2473, 2814, 2859, 21154, 21155, 21156, 21158, 21159
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِحَسَّانَ اِنَّ رُوْحَ الْقُدُسِ لاَيَزَالُ يُؤَيَّدُكَ مَانَفَحْتَ عَنِ اللهِ وَرَسُوْلِهِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கூறினார்கள், நீங்கள் இறைவனுக்காகவும் இறைத்தூதருக்காவும் (மௌலிது) கவிபாடும் காலமெல்லாம் பரிசுத்த ஆன்மா(வான ஜிப்ரயில் அலைஹிஸ்ஸலாம்) உங்களைப் பலப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2490 அபூ தாவூத் 5015 திர்மிதி 2846 அஹ்மது 18642, 24437
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَتْ فَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لِحَسَّانَ إِنَّ رُوحَ الْقُدُسِ لَا يَزَالُ يُؤَيِّدُكَ، مَا نَافَحْتَ عَنِ اللَّهِ وَرَسُولِهِ وَقَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ هَجَاهُمْ حَسَّانُ، فَشَفَى وَاشْتَفَى قَالَ حَسَّانُ هَجَوْتَ مُحَمَّدًا فَأَجَبْتُ عَنْهُ وَعِنْدَ اللَّهِ فِي ذَاكَ الْجَزَاءُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம், நீங்கள் இறைவனுக்காகவும் இறைத்தூதருக்காவும் (மௌலிது கவிபாடும்) காலமெல்லாம் பரிசுத்த ஆன்மா(வான ஜிப்ரயில் அலைஹிஸ்ஸலாம்) உங்களைப் பலப்படுத்திக் கொண்டே இருப்பார்கள் என்று கூறியதை நான் கேட்டேன். மேலும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், குறைஷியருக் கெதிராக ஹஸ்ஸான் வசைக்கவி பாடினார். நம்மையும் திருப்திப்படுத்தினார். தாமும் திருப்தி கொண்டார்” என்று கூறினார்கள்.
ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (ஹுதைபியாவில்) பாடிய கவி வருமாறு (இறை மறுப்பாளர்களே!) முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் குறைவுபடுத்தி நீங்கள் கவி பாடுகிறீர்கள். அதற்குப் பதிலாக அவர்களை நான் புகழ்ந்து பாடுவேன். அதற்குரிய நற்கூலி (நன்மை) இறைவனிடம் உண்டு.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். ஆதாரம் முஸ்லிம் 2490
மேற்கூறிய ஹதீஸை கூர்ந்து கவனிக்கும் போது ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்ந்து கவி பாடுவதனால் அதற்குறிய நற்கூலி (நன்மை) இறைவனிடம் உண்டு என்ற கவி வரிகளை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்னிலையில் வைத்து தான் பாடியுள்ளார்கள் என்ற கருத்து புலனாகின்றது.
ﻋَﻦ ﺍﻧَﺲِ ﺑﻦِ ﻣَﺎﻟِﻚٍ رَضِيَ اللَّهُ عَنْهُ ﺍَﻥَّ ﺍﻟﻨَّﺒِﻲُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ﻣَﺮَّ ﺑِﺒَﻌْﺾِ ﺍﻟْﻤَﺪِﻳْﻨَﺔِ ﻓَﺎَﺫَﺍ ﻫُﻮَ ﺑِﺠَﻮَﺍﺭِ ﻳَﻀْﺮِﺑْﻦَ ﺑِﺪُﻓِّﻬِﻦَّ ﻭَﻳَﺘَﻐَﻨَّﻴْﻦَ ﻭَﻳَﻘَﻠْﻦَ ﻧَﺤْﻦُ ﺟَﻮَﺍﺭِ ﻣِﻦْ ﺑَﻨِﻲ ﺍﻟﻨَّﺠَّﺎﺭِ ﻳَﺎﺣَﺒَّﺬَﺍ ﻣُﺤَﻤَّﺪٌﺍ ﻣِﻦْ ﺟَﺎﺭِ ﻓَﻘَﺎﻝَ ﺍﻟﻨَّﺒِﻲُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ﻳَﻌْﻠَﻢُ ﺍﻟﻠﻪ ﺍِﻧِّﻲْ ﻷْﺣُﺒُّﻜُﻦَّ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவின் ஒரு (தெரு) பகுதிக்குச் சென்றார்கள். அங்கே சில சிறுமிகள் தஃப் அடித்து (மௌலிது) கவி பாடிக் கொண்டிருந்தார்கள். (அவற்றில் ஒன்று) நாங்கள் பனூ நஜ்ஜார் குடும்பத்தைச் சார்ந்த சிறுமிகள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறந்த அண்டை வீட்டுக்காரர் ஆவார்கள். (இதைக் கேட்ட) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், திண்ணமாக நான் உங்களை நேசிக்கிறேன். (இதை) அல்லாஹ் அறிகிறான் என்றார்கள்.
அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 1889
اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا
குர்ஆன் கூறுகிறது நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். ஆகவே, நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் கூறிக் கொண்டிருங்கள்.
சூரா அஹ்ஜாப ஆயத் 56
மௌலிது ஓதுவதன் மூலம் இறைவனிடம் இருந்து நற்கூலி நன்மை கிடைக்கிறது மேலும் மலக்குகளின் உதவி கிடைக்கிறது, மேலும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசம் கிடைக்கிறது. மேலும் ஸலாம் ஸலவாத்து கூரும் வாய்ப்புக்கள் அதிகம் கிடைக்கிறது. இவையெல்லாம் நம்மைகளை அள்ளித்தரும் நற்காரியங்களாகும்.
عَنْ جَرِيرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ أَبِيهِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً فَلَهُ أَجْرُهَا وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே,யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டு” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :- ஜரீர் இப்னு அப்தில்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1017, திர்மிதி 2675, இப்னு மாஜா 203 நஸாயி 2554 தாரமீ 529, 531 அஹ்மது 19156, 19174, 19183, 19200, 19202, 19206 தப்ரானி 2372
ஓர் இடத்தில் மௌலிது ஓதுவதன் மூலம் இனபந்தங்கள் ஒன்று சேர்கிறது, ஸலவாத்து ஸலாம் அதிகளவில் கூறப்படுகிறது, உணவளிக்கப்படுகிறது, அன்னதானம் செய்யப்பட்டுகிறது இவையெல்லாம் நன்மைகளை அள்ளித்தரும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸுன்னத்தாகும். இது போன்ற ஸுன்னத்துக்களை மௌலிது சபைகளில்
நடைமுறைப் படுத்துபவர்களுக்கும், அதன்படி செயல்படுபவர்களுக்கும் நன்மையும் உண்டு என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.
இடை குறிப்பு :- திருக்குர்ஆனை ஓதினால் ஒரு எழுத்துக்கு இத்தனை நன்மைகள் என்று ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் நபிமார்கள் நல்லடியார்களை புகழ்ந்து மௌலிது ஓதுவதன் மூலம் அந்த சபைகளில் கழந்து மேற்கூறிய ஸுன்னத்தான அமல்களை செய்வதன் மூலம் எத்தனை நன்மைகள் கிடைக்கப்பெறும் என்பதை எவரும் மட்டிட முடியாது என்பதை நாம் இங்கு ஞாபகம் ஊட்டிக் கொள்கிறோம்.
குறிப்பு :- மௌலிது சபைகளில் சந்தனக் குச்சி, சாம்ரானி, பூ, பன்னீர், அத்தர், போன்ற வாசனைப் பொருட்கள் பயன் படுத்தப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம் அதிகமான மக்கள் அந்த சபைகளுக்கு வருகை தருகிறார்கள். அதிகமானோர் ஒன்று சேரும் இடங்களில் வாசனை பொருட்கள் பயன் படுத்துவது நபிவழியாகும். இதனை தவறாக புரிந்தோர்கள் இன்னும் விமர்சனம் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அல்லாஹ் யாவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்