10) மரணித்தவர்கள் நன்றாக செவியேற்பார்கள்
மரணித்தவர்கள் நன்றாக செவியேற்பார்கள்
📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِىْ دَارِهِمْ جٰثِمِيْنَ
குர்ஆன் கூறுகிறது (முன்னர் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்து அழிந்து விட்டனர். மேலும்
فَتَوَلّٰى عَنْهُمْ وَقَالَ يٰقَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسَالَةَ رَبِّىْ وَنَصَحْتُ لَـكُمْ وَلٰـكِنْ لَّا تُحِبُّوْنَ النّٰصِحِيْنَ
குர்ஆன் கூறுகிறது (அந்நேரத்தில் ஸாலிஹ் நபி) அவர்களிலிருந்து விலகிக் கொண்டு (அவர்களை நோக்கி) “என்னுடைய மக்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு என் இறைவனின் தூதையே எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசம் செய்தேன். எனினும் நீங்களோ நல்லுபதேசம் செய்பவர்களை நேசிக்கவில்லை என்று கூறினார்.
சூரா அஃராப் ஆயத் 78,79
இந்த வசனத்தின் தொடரில் அல்லாஹ்வின் வேதனை காரணமாக அழிக்கப்பட்ட கூட்டத்தை நோக்கி அதாவது மரணித்து கிடந்த சடலங்களை நோக்கி நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பேசினார்கள். காரணம் மரணித்தவர்கள் செவியேற்பார்கள் என்பதை முன்கூட்டியே நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அறிந்திருந்தார்கள் என்ற கருத்தை நம்மால் காண முடிகிறது.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ حَدَّثَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْعَبْدَ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ وَتَوَلَّى عَنْهُ أَصْحَابُهُ وَإِنَّهُ لَيَسْمَعُ قَرْعَ نِعَالِهِمْ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஓர் அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அவன் அவர்களின் செருப்பின் ஓசையைக்கூட செவியேற்பான்.
அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1374
உயிரோடு உள்ள மனிதர்களின் செருப்பின் ஓசையைக்கூட நிச்சயமாக மரணித்தவர்கள் செவியேற்பார்கள் என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
عَن ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَهُ قَالَ اطَّلَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَهْلِ الْقَلِيبِ فَقَالَ وَجَدْتُمْ مَا وَعَدَ رَبُّكُمْ حَقًّا فَقِيلَ لَهُ تَدْعُو أَمْوَاتًا فَقَالَ مَا أَنْتُمْ بِأَسْمَعَ مِنْهُمْ وَلَكِنْ لَا يُجِيبُونَ
(பத்ருப் போரில் கொல்லப்பட்ட எதிரிகளின் உடல்கள் ஒரு பாழுங் கிணற்றில் போடப்பட்டிருந்தன. அந்தக்) கிணற்றில் கிடந்தவர்களைப் பார்த்த இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘உங்களுடைய இறைவன் உண்மையாகவே வாக்களித்தவற்றை நீங்கள் அடைந்து கொண்டீர்களா?’ எனக் கேட்டார்கள். அதற்கு ‘மரணித்துவிட்டவர்களை அழைக்கிறீர்களே?’ என அவர்களிடம் கேட்கப்பட்டதும், ‘ இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் உங்களை விட (மரணித்தவர்கள்) நன்றாக செவியேற்பார்கள். ஆயினும் அவர்கள் (வெளிப்படையில்) பதிலளிக்க மாட்டார்கள்’ என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1370
இந்த ஹதீஸை கூர்ந்து கவனியுங்கள். வஹாபிஷ வாதிகள் சொல்வது போன்று இந்த நேரத்தில் மட்டும் தான் மரணித்தவர்கள் செவியேற்றார்கள் என்று கூறுவது முற்றிலும் தவறாகும். காரணம் உங்களை விட மரணித்தவர்கள் நன்றாக செவியேற்பார்கள் என்று கூறிய இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்தவர்கள் (வெளிப்படையில்) பதிலளிக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்கள்.
ஆக மொத்தத்தில் மரணித்த காஃபிர்களை அந்த நேரத்தில் செவியேற்க செய்த இறைவனுக்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழைப்புக்கு வெளிப்படையில் பதில் கொடுக்க செய்ய முடியாது என்றல்லவா அர்த்தமாகும்? தெளிவு பெறுங்கள். மேற்கூறிய ஹதீஸில் மரணித்தவர்கள் பொதுவாகவே செவியேற்பார்கள். வெளிப்படையில் பதில் தர மாட்டார்கள். இதைத்தான் மேற்கூறிய திருக்குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் தெளிவு படுத்துகிறது.
வஹாபிகளின் வாதம் :- மேற்கூறிய ஹதீஸை கேள்விபட்டவுடன் அதை உறுதி செய்துவிட்டு இந்த வசனத்தை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ஓதினார்கள்.
فَذُكِرَ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَرَأَتْ { إِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتَى } حَتَّى قَرَأَتِ الْآيَةَ
(நபியே!) மரணித்தவர்களை உங்களால் செவியேற்கச் செய்ய முடியாது’ என்னும் (திருக்குர்ஆன் 35:22) இறை வசனத்தை (இறுதிவரை) ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ஓதினார்கள்.
ஆதாரம் :- புஹாரி 3980
இதை காரணமாக வைத்து மரணித்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்பது வஹாபிஷ வாதிகளின் வாதமாகும். இது போன்ற வாதங்கள் முற்றிலும் தவறானவை காரணம் மேற்கூறிய வசனங்கள் மரணித்தவர்கள் செவியேற்பார்கள் என்ற கருத்தை தான் தருகிறது. இதனை நாம் முன்னைய பதிவில் தெளிவு படுத்தியுள்ளேம்.
ஆக இந்த வசனத்தை ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மேற்கூறிய ஹதீஸுடன் குறிப்பிட்டு சொன்னதன் நோக்கம் இந்த ஹதீஸில் இடம்பெறும் சம்பவத்தை மக்கள் தவறாக நினைத்து விடக்கூடாது. அதாவது மரணித்த காஃபிர்களை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த நேரத்தில் சுயமாக செவியேற்க செய்து அவர்களுடன் பேசினார்கள் என்று மக்கள் நினைத்து விடக்கூடாது என்ற நோக்கில் தான் இது போன்ற வசனங்களை கூறினார்களே தவிர மரணித்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்ற நோக்கில் அன்னை அவர்கள் இவ்வாறு கூறவில்லை என்ற கருத்தை நாம் வஹாபிஷ வாதிகளுக்கு ஞாபகம் ஊட்டிக் கொள்கிறோம்.
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلَّمَا كَانَ لَيْلَتُهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ مِنْ آخِرِ اللَّيْلِ إِلَى الْبَقِيعِ فَيَقُولُ السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَأَتَاكُمْ مَا تُوعَدُونَ غَدًا مُؤَجَّلُونَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தம் இறுதிநாட்களில்) என்னுடன் தங்கியிருந்த ஒவ்வோர் இரவின் பிற்பகுதியிலும் (மதீனாவிலுள்ள) பொது மையவாடிக்குச் செல்வார்கள். அங்கு (பின்வருமாறு கப்ருகளை நோக்கி) கூறுவார்கள். இந்த கப்ருஸ்தானங்களிலுள்ள இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் மீது சாந்தி பொழியட்டும்! நீங்கள் நாளை சந்திக்கப்போவதாக வாக்களிக்கப்பட்ட ஒன்று, தவணை அளிக்கப்பட்ட பின்னர் உங்களிடம் வந்துவிட்டது. நாங்கள் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக இருக்கிறோம் என்பார்கள்.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1773 இப்னு மாஜா 1546
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قُلْتُ كَيْفَ أَقُولُ لَهُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ قُولِي السَّلَامُ عَلَى أَهْلِ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَيَرْحَمُ اللَّهُ الْمُسْتَقْدِمِينَ مِنَّا وَالْمُسْتَأْخِرِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلَاحِقُونَ
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அவர்கள் கூறுகிறார்கள்.
நான் ” யா ரஸூலல்லாஹ்! (கப்ருஸ்தானங்களில் இருப்ப)வர்களுக்காக நாம் என்ன சொல்ல வேண்டும்?” என்று கேட்டேன்.
அதற்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். கப்ருஸ்தானங்களிலுள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்று விட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக இருக்கிறோம் என்று (கூறுங்கள் என்று கற்றுக்) கொடுத்தார்கள்.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1774 திர்மிதி 739 இப்னு மாஜா 1389
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ருகளை சந்திக்க சொல்லக்கூடியவர்களாகவும் மரணித்த மனிதர்களிடம் பேசக்கூடியவர்களாகவும் இருந்துள்ளார்கள். மேலும் மற்ற முஸ்லிம்களும் கப்ருகளை ஸியாரத் செய்ய சென்றால் கப்ருவாசிகளுடன் இவ்வாறு இவ்வாறு தான் பேச வேண்டும். இவ்வாறான வார்த்தைகளை கூறவேண்டும் என்றும் கற்றுக் கொடுத்தார்கள்.
ஆக இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த நேரத்தில் மட்டும் தான் பேசினார்கள் இந்த நேரத்தில் மட்டும் தான் மரணித்தவர்கள் செவியேற்பார்கள் என்று வஹாபிஷ வாதிகள் மீண்டும் மீண்டும் கூறுவார்கள் என்றால்! அவர்களை விடவும் பெரிய முட்டாள்கள் இந்த உலகத்தில் எவரும் இருக்க முடியாது. அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! மேற்கூறிய துஆக்களை கொண்டு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டும் கப்ரிலுள்ள மரணித்த மனிதர்களுடன் பேசவில்லை. கப்ருகளை ஸியாரத் செய்ய செல்லும் ஒவ்வொரு முஸ்லிம்களும் அந்த துஆக்களை மரணித்த கப்ருவாசிகளை நோக்கி கூறவேண்டும். இதன் மூலம் மரணித்தவர்கள் உங்களின் பேச்சுக்களை செவியேற்கிறார்கள் என்ற கருத்தையே இஸ்லாம் வழியுருத்திக் கூறியுள்ளது.
குறிப்பு :- மரணித்தவர்கள் செவியேற்பார்கள் என்று திருக்குர்ஆன் ஹதீஸ்கள் தெளிவான முறையில் கூறும்போது அவைகளை ஏற்றுக் கொள்ளாமல் வஹாபிஷ நச்சிக்கருத்துக்களை ஏற்ற நிலையில் மரணித்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்று அரைகுறையாக கூறும் அனைவரும் புறமுதுகு காட்டி சென்ற காஃபிர்களுக்கும் மரணித்தவர்களுக்கும் சமமானவர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்