11) அல்லாஹ் அர்ஷ் என்னும் கதிரையில் இருக்கின்றானா?
அல்லாஹ் அர்ஷ் என்னும் கதிரையில் இருக்கின்றானா?
📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
♦️இவ்வுலகை படைத்து பரிபாலனம் செய்து கொண்டிருக்கும் ஏக இறைவனாகி அல்லாஹ் அர்ஷ் எனும் சிம்மாசனத்தின் மீது அமந்துள்ளான் என்ற கருத்தை திருக்குர்ஆன் கூறுவதாக வழிகேடர்கள் மக்கள் மத்தியில் பொய் பிரச்சாரம் செய்து வருவதை நம்மால் காணமுடிகிறது. இவைகளை பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
اَلرَّحْمٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوٰى
குர்ஆன் கூறுகிறது அர்ரஹ்மான் அர்ஷின் மீது (ஆட்சியை) அமைத்தான்.
சூரா தாஹா ஆயத் 5
اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ
குர்ஆன் கூறுகிறது நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான்.
சூரா அஃராப் ஆயத் 54 சூரா யூனுஸ் ஆயத் 3
اَللّٰهُ الَّذِىْ رَفَعَ السَّمٰوٰتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ
குர்ஆன் கூறுகிறது (இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள் பின்னர் அவன் அர்ஷின் மீது (ஆட்சியை) அமத்தான்.
சூரா ரஃது ஆயாத் 2
اۨلَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ
குர்ஆன் கூறுகிறது அவனே வானங்களையும், பூமியையும், அவற்றிற்கிடையிலுள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அவன் அர்ஷின் மீது (ஆட்சியை) அமைத்தான்.
சூரா புர்கான் ஆயத் 59
اَللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ
குர்ஆன் கூறுகிறது அல்லாஹ் தான் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கும் இடையிலிருப்பவற்றையும் ஆறு நாட்களில் படைத்துப்பின் அர்ஷின் மீது (ஆட்சியை) அமைத்தான்.
சூரா ஸஜதா ஆயத் 4
هُوَ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ
குர்ஆன் கூறுகிறது அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அர்ஷின் மீது (ஆட்சியை) அமைத்தான்.
சூரா ஹதீத் ஆயத் 4
♦️மேற்கூறிய ஆயத்துக்களில் (على العرش استوى) அலல் அர்ஷிஸ்தவா என்பதாகவும் (استوى على العرش) இஷ்தவா அலல் அர்ஷி என்பதாகவும் இடம் பெற்றுள்ளதை நம்மால் காணமுடிகிறது. “இஸ்தவா” என்ற சொல்லுக்கு (إستتم) இஸ்ததம்ம பூரணப்படுத்தினான், நிறைவு செய்தான் என்றும் பொருள் கொள்ள வேண்டும். அல்லது (استواء التدبير) நிர்வாக, ஆட்சியதிகார அமர்வென்று பொருள் கொள்ள வேண்டுமே தவிர ஒருவன் கதிரையில் அமர்வது போன்று அல்லாஹ் அர்ஷ் எனும் கதிரையில் அர்ந்தான் என்று அர்த்தம் கொல்வது ஷிர்கு இணைவைப்பாகும்.
وَلَمَّا بَلَغَ اَشُدَّهٗ وَاسْتَوٰٓى اٰتَيْنٰهُ حُكْمًا وَّعِلْمًا وَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ
குர்ஆன் கூறுகிறது இன்னும், அவர் வாலிபமடைந்து, (பக்குவ) நிலை பெற்றபோது, நாம் அவருக்கு ஞானத்தையும் கல்வியையும் அளித்தோம் – இவ்வாறே நல்லோருக்கு நாம் (நற்) கூலி வழங்குகிறோம்.
சூரா கஸஸ் ஆயத் 14
♦️இந்த ஆயத்தில் (استوى) என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இஸ்தவா என்ற சொல்லுக்கு இந்த இடத்தில் “அவர்” அமந்தார், இருந்தார் என்று பொருள் கொள்ள முடியாது. அதற்கு மாற்றமாக “அவர்” நிறைவு நிலையைப் பெற்றபோது- “அவரின் வாலிபம்” பூரண தன்மையை அடைந்த போது என்பதாகவே பொருள் கொள்ள வேண்டும்.
كَزَرْعٍ اَخْرَجَ شَطْئَـهٗ فَاٰزَرَهٗ فَاسْتَغْلَظَ فَاسْتَوٰى عَلٰى سُوْقِهٖ
குர்ஆன் கூறுகிறது “ஒரு பயிரைப் போன்றதாகும். அது தன் முளையை வெளிப்படுத்திப் பின்னர் அதைப் பலப்படுத்துகின்றது. பின்னர் அது கனமாகின்றது. பின்னர் அது தன் தண்டின் மீது பூரணமாகின்றது.
சூரா பத்ஹ் ஆயத் 29
♦️இந்த ஆயத்தில் (استوى) என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இஸ்தவா என்ற சொல்லுக்கு “அது தன் தண்டின் மீது” அமந்தது, இருந்தது என்று பொருள் கொள்ள முடியாது. அதற்கு மாற்றாக “அது தன் தண்டின் மீது” பூரணமாகின்றது என்பதாகவே பொருள் கொள்ள வேண்டும்.
قَدِ اسْتَوَى بِشْرٌ عَلَى الْعِرَاقِ
கவி வரிகள் :- பிஷ்ர் என்பவர் இறாக் நாட்டின் மீது ஆட்சி அதிகாரம் பெற்றார்.
ஆதாரம் :- பிதாயா வன் நிஹாயா 10,9 அல்யவாகீத் வல் ஜவாஹிர் 1,89
இந்த கவி வரிகளில் இடம் பெற்றுள்ள (استوى) என்ற சொல்லுக்கு “இறாக் நாட்டின் மீது” அமந்தார், இருந்தார் என்று பொருள் கொள்ள முடியாது. அதற்கு மாற்றமாக “இறாக் நாட்டின் மீது” ஆட்சி அதிகாரம் பெற்றார் என்பதாகவே பொருள் கொள்ள வேண்டும்.
♦️எனவே (استوى) இஸ்தவா என்ற சொல்லும் வெவ்வேறு கோணங்களில் அர்த்தம் செய்யப்படுள்ளது. குறிப்பாக (على العرش استوى) அலல் அர்ஷிஸ்தவா என்பதாகவும் (استوى على العرش) இஷ்தவா அலல் அர்ஷி என்பதாகவும் இடம் பெற்றுள்ள ஆயத்துக்களில் இடம் பெற்றுள்ள. “இஸ்தவா” என்ற சொல்லுக்கு அமந்தான், இருந்தான், உட்கார்ந்தான் என்ற பொருள் எந்த இடத்திலும் இடம் பெறவில்லை. இவ்வாறு இப்னு தைமிய்யா அப்துல் வஹ்ஹாப் நஜ்தி போன்ற வஹாபிஷ கிருமிகளை தவிர வேறு யாரும் இவ்வாறு பொருள் கொள்வதில்லை என்பதை நாம் ஆரம்பித்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
فَلَا تَضْرِبُوْا لِلّٰهِ الْاَمْثَالَ اِنَّ اللّٰهَ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ
குர்ஆன் கூறுகிறது ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு (படைப்புகளின் தன்மைகளைக் கொண்ட) உவமானம் கூற வேண்டாம், நிச்சயமாக அல்லாஹ்தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன், ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள்.
சூரா நஹ்ல் ஆயத் 74
♦️அல்லாஹ் படைப்புக்களுக்கு எந்தவிதத்திலும் ஒப்பானவன் கிடையாது. காரணம் அவனின் கட்டாயமான “ஸிபத்” பண்புகளில் ஒன்றுதான் (مخالفة للحوادث) முஹாலிபது லில் ஹவாதிஸ் “அவன்” படைப்புக்களுக்கு மாற்றமானவனாகும். நேரம் காலம் இடம் திசை இவையெல்லாம் படைப்புக்களுக்கு ஒப்பாகுமே தவிர படைப்பாளி அல்லாஹ்விற்கு ஒப்பானதல்ல. அர்ஷ் எனும் சிம்மாசனத்தில் அவன் உட்கார்ந்து இருக்கிறான் என்று கூறுவது முற்றிலும் தவறு. அவன் இவைகளை விட்டும் பரிசுத்தமானவனாகும். அல்லாஹ்வின் விஷயத்தில் படைப்புகளின் தன்மைகளைக் கொண்டு உவமானம் கூற வேண்டாம். நிச்சயமாக அவனே யாவற்றையும் நன்கு அறிபவன், நம்மால் அவனை அறிய முடியாது என்ற கருத்தை மேற்கூறப்பட்ட ஆயத்தை மூலமாக வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
عَنْ عَلِىُّ بْنُ أَبِى طَالِب رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ إنَّ اللّٰه خَلَقَ الْعَرْشَ إظْهَارًا لِقُدْرَتِهِ وَلَمْ يَتَّخِذْهُ مَكَانًا لِذَاتِهِ
அலி இப்னு அபூதாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக அல்லாஹ் அர்ஷை தனது வல்லமையை வெளிப்படுத்துவதற்காகவே படைத்துள்ளான். அவனுக்கு அதனை இடமாக அதாவது இருப்பதற்கு இடமாக எடுத்துக் கொள்வதற்கு அல்ல.
ஆதாரம் :- அல் பர்கு பைனல் பிறகி 333
♦️குறிப்பு :- மேற்கூறிய திருக்குர்ஆன் வசனங்களுக்கு ஸஹாபாக்கள் திருக்குர்ஆன் விரிவுரை இமாம்கள் பொருள் கொள்ளும் போது அல்லாஹ் அர்ஷின் மீது ஆதிக்கம் செலுத்தினான், ஆட்சி அதிகாரத்திற்கு உட்படுத்தினான், அதை பாதுகாத்தான் என்று பொருள் கொள்கிறார்களே தவிர அமந்தான், இருந்தான் என்று யாரும் பொருள் கொள்ளவில்லை. இவ்வாறு பொருள் கொள்ள முற்படுவது முற்றிலும் தவறானதாகும், அது ஈமானுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்பதை நாம் ஆரம்பித்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்