11) உன்மையும் பொய்யும்

76

உன்மையும் பொய்யும்

 

சாந்தி சமாதானத்தின் தீர்க்கதரிசி நபி முஹம்மத் ﷺ அவர்கள் இவ்வுல மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்.

 

மக்களைச் சிரிக்க வைக்க பொய் சொல்லாதீர்கள்

 

عَنْ مُعَاوِيَةَ بْنِ حَيْدَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ وَيْلٌ لِلَّذِيْ يُحَدِّثُ بِالْحَدِيْثِ لِيُضْحِكَ بِهِ الْقَوْمَ فَيَكْذِبُ، وَيَلٌ لَهُ وَيْلٌ لَهُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மக்களைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய் சொல்பவனுக்கு நாசம் தான் உண்டாகும், அவனுக்கு நாசம் தான்! அவனுக்கு நாசம் தான்!

 

அறிவிப்பவர் :- முஆவியத் இப்னு ஹைதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூதாவூத் 4990 திர்மிதி 2315 தாரமீ 2744

 

உண்மை பேசுங்கள், பொய் பேசாதீர்கள்

 

عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ ْرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى البِرِّ، وَإِنَّ البِرَّ يَهْدِي إِلَى الجَنَّةِ وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يَكُونَ صِدِّيقًا وَإِنَّ الكَذِبَ يَهْدِي إِلَى الفُجُورِ وَإِنَّ الفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் ‘வாய்மையாளர்’ (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் ‘பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப்பட்டு விடுவார்.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 6094 முஸ்லிம் 2609 இப்னு மாஜா 46

 

பொய் சொல்லாதீர்கள், பொய் சாட்சியாளராக முன் நிட்காதீர்கள்

 

عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَا وَقَوْلُ الزُّورِ وَشَهَادَةُ الزُّورِ أَلَا وَقَوْلُ الزُّورِ وَشَهَادَةُ الزُّورِ فَمَا زَالَ يَقُولُهَا حَتَّى قُلْتُ لَا يَسْكُتُ

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ‘அறிந்து கொள்ளுங்கள் பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)’ என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் ‘அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?’ என்றேன்.

 

அறிவிப்பவர் :- அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 5976 அஹ்மது 20385

 

உண்மையை மறைக்க பொய் சொல்லாதீர்கள்

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَبْغَضَ الرِّجَالِ إِلَى اللَّهِ الْأَلَدُّ الْخَصِمُ

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மனிதர்களிலேயே அல்லாஹ்விடம் மிகவும் கோபத்துக்குரியவன், (உண்மையை மறுத்துப் பொய்மையை நிலைநாட்ட) கடுமையாகச் சச்சரவு செய்பவன் ஆவான்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். புகாரி 2484 முஸ்லிம் 2668 நஸாயி 5423

 

உன்மையை ஏற்றுக் கொள்ளுங்கள். மக்களை கேவலமாக பார்க்காதீர்கள்

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهَُ قَالَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ قَالَ رَجُلٌ إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا وَنَعْلُهُ حَسَنَةً قَالَ إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ الْكِبْرُ بَطَرُ الْحَقِّ وَغَمْطُ النَّاسِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எவருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்குமோ அவர் சுவர்க்கத்தில் நுழையமாட்டார்” என்றவுடன்” நபித்தோழர்களோடு அமர்ந்திருந்த ஒருவர் “அல்லாஹ்வின் தூதரே! தமது ஆடை அழகாக இருக்க வேண்டும் தமது செருப்பு அழகாக இருக்க வேண்டும் என்று ஒருவர் விரும்புகின்றார். இதுவும் தற்பெருமையாக கருதப்படுமா? என்று வினவினார். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அல்லாஹ் அழகானவன்; அழகையே விரும்புகின்றான். உண்மையில், தற்பெருமை என்பது உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதும், மக்களைக் கேவலமாக எண்ணுவதும் தான்” என்று பதிலளித்தார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 91 அபூதாவூத் 4092 அஹ்மது 4058

 

நம்பகத்தன்மையுடையோராக இருங்கள், வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்

 

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ مَا خَطَبَنَا نَبِيُّ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلاَّ قَالَ لاَ إِيمَانَ لِمَنْ لاَ أَمَانَةَ لَهُ وَلاَ دِينَ لِمَنْ لاَ عَهْدَ لَهُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த உரை நிகழ்த்தினாலும் “நம்பகத்தன்மை இல்லாதவனிடத்தில் ஈமான் இருக்காது. வாக்குறுதியை நிறைவேற்றாதவனிடத்தில் இறைநெறி மார்க்கம் இருக்காது என்று குறிப்பிடாமல் இருக்க மாட்டார்கள்.

 

அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மது 12383, 13199

 

உன்மை பேசுங்கள், நற்குணத்தோடு நடந்து கொள்ளுங்கள், பிறரின் அருட்கொடைகளைக் கண்டு ஏங்காதீர்கள்

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعٌ إِذَا كُنَّ فِيكَ فَلاَ عَلَيْكَ مَا فَاتَكَ مِنَ الدُّنْيَا حِفْظُ أَمَانَةٍ وَصِدْقُ حَدِيثٍ وَحُسْنُ خَلِيقَةٍ وَعِفَّةٌ فِي طُعْمَةٍ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். என்னிடம் “நான்கு நற்பண்புகள் உம்மிடம் இருக்குமானால் இந்த உலகில் எது உம்மிடம் இல்லை என்றாலும் அது பற்றி கவலை கொள்ள உமக்குத் தேவையில்லை. நம்பகத்தன்மையை பேணுவது. உண்மை பேசுவது. நற்குணத்தோடு நடந்து கொள்வது. பிறரின் அருட்கொடைகளைக் கண்டு ஏங்குவதில் இருந்தும் தவிர்ந்து வாழ்வது என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மத் 6652 இப்னு அபீஷைபா 2683

 

உள்ளத்திலிருந்து நயவஞ்சக பண்புகளை நீக்குங்கள்

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍ رَضِيَ اللَّهُ عَنْهَُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا وَمَنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا إِذَا اؤْتُمِنَ خَانَ وَإِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا عَاهَدَ غَدَرَ وَإِذَا خَاصَمَ فَجَر

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான். பேசினால் பொய்யே பேசுவான். ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான். விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 34 முஸ்லிம் 58

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.