11) கேள்வி :- இறைதூதர் ﷺ அவர்களை போன்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் சிறுமியை திருமணம் செய்தார்களா? 

114

  ام كلتوم بنت علي بن ابي طالب زوجة عمر بن الخطاب رضي الله عنهم 

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகள் உம்மு குல்சூம் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ஹிஜ்ரி ஆறாம் ஆண்டில் பிறந்தார்கள்.   உம்மு குல்சூம் ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கும் கலிபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் திருமணம் வைபவம் நடந்தது ஹிஜ்ரி பதினேழாம் ஆண்டில்.

நூல் ஆதாரம் :- தஹபி” அஸ்ஸீரா அஃலாமின் நுபலா 3/500 

உம்மு குல்சூம் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ஹிஜ்ரி ஆறில் பிறந்து ஹிஜ்ரி பதினேழாம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்கள். ஆக மொத்தத்தில் உம்மு குல்சூம் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் திருமணம் முடிக்கும் போது அவர்களுக்கு பதினொரு வயதாகும்.

   عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ إذا بلقت الجارية تشع. سنين فهي امرأة 

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். ஒரு பெண்பிள்ளை ஒன்பது வயதை அடையும் போது, அவள் பருவம் அடைந்த ஒரு பெண்ணாக ஆகிறாள்.

நூல் ஆதாரம் :-  ஜாமிஉத் திர்மிதி 11/1109 

மேற்கூறிய கருத்து பிரகாரம் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சிறுமியை திருமணம் முடிக்க வில்லை அதற்கு மாற்றமாக பருவ வயதை எத்திய பதினொரு வயது வாலிபப் பெண் உம்மு குல்சூம் ரலியல்லாஹு அன்ஹா அவர்களை தான் திருமணம் முடித்தார்களே அன்றி வேறில்லை. ஆக சிறுமிகளை திருமணம் முடிப்பதை இஸ்லாத்தை தடை செய்யப்பட்டுள்ளது என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பு :- இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைய காலகட்டத்தின் நடைமுறை படி அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை சிறுவயதில் திருமணம் செய்து கொண்டார்கள். அதன் பின்னர் இஸ்லாமிய சட்டம் இறைவசனம் இறங்கிய பின்னர், அன்னை அவர்கள் பருவ வயதை எத்திய பின்னரே இஸ்லாமிய முறைப்படி அவர்களுடன் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமண பந்தத்தில் இணைந்தார்கள். ஆக அன்றைய காலகட்டத்தில் நடைமுறையிலிருந்த சிறுவர் சிறுமியர்களை திருமணம் செய்யும் கலாச்சார நடைமுறையை முற்றாக இஸ்லாம் தடை செய்தது மட்டுமின்றி பவரு வயதை எத்திய வாலிப ஆண்கள் பெண்கள் திருமணம் செய்ய பூர்ண அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்களை துல்லியமாகவும் ஒவ்வொரு பகுதிவுகளாகவும் மேற்கூறப்பட்டுள்ளது என்பதை மீண்டும் ஞாபகம் ஊட்டுக் கொள்கிறோம்.

WORLD ISLAM YSYR ✍️      அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.