11) நபி முஹம்மத் ﷺ அவர்களின் தாடி

140

நபி முஹம்மத் ﷺ அவர்களின் தாடி

 

عَنِ وَهْبٍ أَبِي جُحَيْفَةَ السُّوَائِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَأَيْتُ بَيَاضًا مِنْ تَحْتِ شَفَتِهِ السُّفْلَى العَنْفَقَةَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்திருக்கிறேன். அவர்களின் கீழுதட்டின் அடியிலுள்ள (தாடைக்கு மேலுள்ள) குறுந்தாடியில் நான் வெண்மையைக் கண்டேன்.

 

அறிவிப்பவர் :- அபூ ஜுஹைஃபா அஸ் ஸுவாயீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3545

 

عَنِ حَرِيزُ بْنُ عُثْمَانَ أَنَّهُ سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ بُسْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ صَاحِبَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَرَأَيْتَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ شَيْخًا؟ قَالَ كَانَ فِي عَنْفَقَتِهِ شَعَرَاتٌ بِيضٌ

 

நான் நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வயது முதிர்ந்தவளாக இருக்கும் நிலையில் அவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘(நான் அவர்களைப் பார்த்த போது) அவர்களின் கீழுதட்டின் அடியில் (தாடைக்க மேலே) உள்ள குறுந்தாடியில் வெள்ளை முடிகள் இருந்தன’ என்று பதிலளித்தார்கள்.

 

அறிவிப்பவர் :- ஹரீஸ் இப்னு உஸ்மான் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். ஆதாரம் புஹாரி 3546 அஹ்மது 17681, 17682, 17699

 

عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ…. فَتَوَفَّاهُ اللَّهُ وَلَيْسَ فِي رَأْسِهِ وَلِحْيَتِهِ عِشْرُونَ شَعْرَةً بَيْضَاءَ

 

(இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்க)ளின் தலையிலும் தாடியிலும் இருபது வெள்ளை முடிகள் கூட இல்லாத நிலையிலும் அல்லாஹ் அவர்களை மரணிக்கச் செய்தான்.

 

அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3548, 5900 முஸ்லிம் 2347 திர்மிதி 3623 அஹ்மது 13519

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.