11) நபி முஹம்மத் ﷺ அவர்களை குறித்து பேசிய மாற்று மத சில நவீன அறிஞர்கள்
11) நபி முஹம்மத் ﷺ அவர்களை குறித்து பேசிய மாற்று மத சில நவீன அறிஞர்கள்
ஜி.கெல்லட் என்பவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறித்து இவ்வாறு கூறுகிறார்
நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறையைக் காட்டிலும் ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலேயே வேறு எங்கும் இல்லை. அவரைப் போல உலகின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது என்கிறார்.
சுப்ரமணிய பாரதியார் என்பவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறித்து இவ்வாறு கூறுகிறார்
முஹம்மது நபியிடம் கலங்காத நெஞ்சுடைய ஞானதீரமும் அழியாத நம்பிக்கை யும் இருந்தன. ஆதலால் அவருக்கு, எடுத்த காரியம் யாவினும் வெற்றி, எங்கும் வெற்றி, எதனிலும் வெற்றி. இடையிடையே நான் என் மனத்திற்குள் முஹம்மது நபி அவர்களைப் பற்றிச் சித்திரம் போட்டுப் பார்ப்பது வழக்கம். நடுப் பாலைவனத்தில் நள்ளிரவிலே தனி மணல்வெளியிலே, ஒட்டகை யின் மீது தனியாக ஏறிக் கொண்டு போகிறார். கேள்வி யாலும் நெடுங்காலத்து பக்தி யாலும், நிகரற்ற அன்பினா லும், ஞானத்தாலும் பக்குவப்பட்ட அவருடைய ஹ்ருதயம் அப்படிப் பட்ட இடத்தில் அல்லாவை நாடுகிறது. அங்கு ஞான ஒளி வீசிற்று. நபி அல்லாவைக் கண்டார் என்று கூறுகிறார்.
கிப்பன் என்பவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறித்து இவ்வாறு கூறுகிறார்
அறம் செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக திட்டவட்டமாக வரையறுத்துக் கூறிய ஒரே ஒரு சட்டமேதையாக விளங்குபவர் முஹம்மது நபி ஒருவரே.
குறிப்பு :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவு படுத்தியவர்கள் இவ்வுலகில் இகழப்பட்ட நிலையில் அழிந்து போனார்கள். அவர்களை புகழ்ந்து மக்கள் மத்தியில் உன்மையை வெளிப்படுத்திய யூத நஸாரா மற்றும் மாற்று மத அறிஞர்கள் அனைவரும் இவ்வுலகில் புகழப்பட்ட நிலையில் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்த நிலையில் இன்று வரை அவர்கள் பேசப்பட்டு வருகிறார்கள் என்பதை நம்மால் காணமுடிகிறது.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்