11) நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்

92

11) நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்

 

♦️பெயர் :- யூசுப் (யோசேப்பு)

 

♦️பிறப்பு :- கிமு. 1745

 

♦️பிறந்த இடம் :- கானான்

 

♦️தந்தை பெயர் :- யாகூப்

 

♦️தாய் பெயர் :- ராஹிலா

 

♦️சகோதரர்கள் :- புன்யாமின் மற்றும் 10 பேர்கள் இருந்தனர்.

குறிப்பு :- நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் தந்தை யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மிக நெருங்கி இருப்பதை கண்டுகொண்ட மூத்த சகோதரர்கள் 10 பேரும் ஆரம்பத்தில் அவர்களை முழுமையாக வெறுத்தார்கள். பின்னர் அந்த பத்து பெரும் தங்கள் குற்றங்களை ஒத்து கொண்டு அனைவரும் ஒன்றினைந்தார்கள்.

 

♦️தொழில் :- நிதி அமைச்சு

குறிப்பு :- நிதி அமைச்சு பொறுப்பில் இருந்து கொண்டு தொழில்களில் விவசாய தொழிலுக்கு முன்னுரிமை கொடுத்தவர்கள். அதனை ஊக்குவித்தவர்கள்.

 

♦️மனைவியர் :- அசைனா, ராயிலா சுலைஹா

 

♦️பட்டம் :- அல்லாஹ்வின் தூதர்

 

♦️சேவை :- இஸ்லாத்தை போதித்தார், அரச சபையில் நிதி அமைச்சராகவும் இருந்தார்.

 

♦️நபித்துவ சிறப்பு :- எந்த ஒரு நபிக்கும் நான்கு தலைமுறையாக நபித்துவத்தை கொடுத்ததில்லை. நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களை தவிர.

காரணம் நபி இபுராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகன் இஸ்ஹாக், நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகன் யாகூப், நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகன் நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆவார்.

 

♦️மொழி :- சாவகம்

 

♦️அழகு :- அழகு என்ற அந்த தோற்றத்தை அல்லாஹ் இரண்டாகப் பிரித்து அதில் ஒன்றை நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் மற்ற ஒன்றைத்தான் நாம் இவ்வுலகில் அழகு என்று எதனை கூறுகிறோமோ அதன் அனைத்திற்கும் பங்கிட்டு வழங்கியுள்ளான். அவர்களின் வரலாறும் அழகிய முறையில் தான் அமைந்துள்ளது.

 

♦️ஆயுட்காலம் :- 110 ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.

 

♦️மரணம் :- கிமு 1635

 

♦️கப்ரு :- நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் பலஸ்தீன் நாட்டிலுள்ள நாப்லீஸ் என்ற ஊரில் அமைந்துள்ளது.

 

♦️குர்ஆன் :- நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயர் குர்ஆனில் 27 இடங்களில் இடம் பெற்றுள்ளது.

 

WORLD ISLAM YSYR
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.