3) நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்

66

3) நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்

 

♦️பெயர் :- நூஹ் (நோவா)

குறிப்பு :- ஸாகுப் என்றோ ஸகுன் என்றோ கூறப்படுகிறது. அரபியில் நூஹா, நூஹ் என்று அழைக்கப்படுகிறது

 

♦️இயற் பெயர் :- அப்துல் கஃப்பார்

 

♦️பிறப்பு :- கிமு. 3993

 

♦️சிறப்பு பெயர் :- ஷைஹுல் முர்ஸலீன், கபீருல் அன்பியா, நஜீயுல்லாஹ், அபூ அன்பியா

 

♦️தந்தை பெயர் :- லாமக்

 

♦️தாய் பெயர் :- பன்யூஸ்

 

♦️பட்டம் :- அல்லாஹ்வின் தூதர்

 

♦️பேரர் :- நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பேரர் ஆவார்கள்.

 

♦️மனைவிமார்கள் :- உம்ரா, அஜ்வத், வஹாலிஆ

 

♦️பிள்ளைகள் :- கன்ஆன், ஹாம், ஸாம், யாம்

 

♦️தொழில் :- தச்சுத் தொழில்

 

♦️நபித்துவம் :- 40ம் வயதில்

 

♦️ஏகத்துவ பிரச்சாரம் :- 950 ஆண்டுகள்

 

🔶1) நூஹ் நபியின் கப்பல் :- கப்பலை கட்டி முடிக்க 1 லச்சத்தி 24 ஆயிரம் மரத்திலான பலகைகள் தேவைப்பட்டன. ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உதவியை கொண்டு அந்த கப்பலை முழுமையாக கட்டி முடித்தார்கள்.

 

🔶2) நூஹ் நபியின் கப்பல் :- கப்பலின் நீளம் 1980 அடிகள். அகலம் 990 அடிகள். சுமார் மூன்று தட்டுகள் இருந்தன. இதில் நம்பிக்கை கொண்ட மக்களும் அது அல்லாத மற்ற ஜீவராசிகளும் ஏறிக் கொண்டன.

 

🔶3) நூஹ் நபியின் கப்பல் :- கூபாவில் இருந்து வெளிப்பட்டது பின்னர் ஜூதி மலையில் நிர்த்தாட்டப்பட்டது. மேலும் அந்த கப்பல் முஹர்ரம் பிறை 10 ஆஷுரா தினத்தில் ஜூதி என்ற மலையில் கரை ஒதுங்கியது.

 

♦️ஆயுட்காலம் :- நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் 1450 ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.

 

♦️மரணம் :- கிமு. 3043

 

♦️கப்ரு :- நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் லெபனான் நாட்டிலுள்ள கர்க் என்ற ஊரில் அமைந்துள்ளது.

குறிப்பு :- நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் துருக்கி, ஈரான், சிரியா பலஸ்தீன் போன்ற நாடுகளிலும் அமைந்துள்ளது என்பதாகக் கூறப்படுகிறது. அல்லாஹ் நன்கறிந்தவன்.

 

♦️குர்ஆன் :- நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயர் குர்ஆனில் 43 இடங்களில் இடம் பெற்றுள்ளது.

 

WORLD ISLAM YSYR
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.