12) அல்லாஹ் எங்கே இருக்கின்றான்

167

அல்லாஹ் எங்கே இருக்கின்றான்

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ‏

 

குர்ஆன் கூறுகிறது அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

சூரா இஹ்லாஸ் ஆயத் 4

 

♦️அல்லாஹ்விற்கு நிகரான எவரும் இல்லை அவனுக்கு ஒப்பாக எதுவும் இல்லையென்ற போது அல்லாஹ்விற்கு உருவம் கற்பித்தவாறு அதனை ஓர் இடத்தில் உட்கார வைக்க முற்படுவது இணைவைப்பாகும். உதாரணமாக நாம் ஓர் இடத்தில் உட்கார்ந்து இருப்பது போல். மாற்று மத ஆலயங்களில் சிலைகள் செய்து அதனை ஓர் இடத்தில் உட்கார வைத்திருப்பது போன்று நாமும் கற்பனையில் அல்லாஹ்விற்கு மனித உருவம் உருவம் கற்பித்தவாறு அதனை அர்ஷ் எனும் சிம்மாசனம் கதிரையில் உட்கார வைக்க முற்படுவது முற்றிலும் தவறு அது இணைவைப்பு என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

فَاَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللّٰهِ

 

குர்ஆன் கூறுகிறது நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் திசை (அங்கு அவனே) இருக்கிறான்.

சூரா பகரா ஆயத் 115

 

وَاِذَا سَاَلَـكَ عِبَادِىْ عَنِّىْ فَاِنِّىْ قَرِيْبٌ

 

குர்ஆன் கூறுகிறது (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன்” என்று கூறுவீராக.

சூரா பகரா ஆயத் 168

 

وَهُوَ اللّٰهُ فِى السَّمٰوٰتِ وَفِى الْاَرْضِ

 

குர்ஆன் கூறுகிறது இன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயகனாகிய) அல்லாஹ்வே இருக்கிறான்.

சூரா அன்ஆம் ஆயத் 3

 

لَا تَحْزَنْ اِنَّ اللّٰهَ مَعَنَا

 

குர்ஆன் கூறுகிறது “கவலைப்படாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்.

சூரா தவ்பா ஆயத் 40

 

وَاللّٰهُ مَعَكُمْ

 

குர்ஆன் கூறுகிறது அல்லாஹ் உங்களுடனேயே இருக்கின்றான்.

சூரா முஹம்மது ஆயத் 35

 

♦️எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் திசை (அங்கு அனனே) இருக்கிறான் என்றும். அல்லாஹ் சமீபமாக இருக்கிறான் என்றும். வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வே இருக்கிறான் என்றும். நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் என்றும் அல்லாஹ் உங்களுடனேயே இருக்கின்றான. என்றெல்லாம். மேற்கூறப்பட்ட ஆயத்துக்களில் குறிப்படப்பட்டுள்ளது. மேலும்

 

هُوَ الْاَوَّلُ وَالْاٰخِرُ

 

குர்ஆன் கூறுகிறது (யாவற்றுக்கும்) முந்தியவனும் அவனே; பிந்தியவனும் அவனே.

சூரா ஹதீத் ஆயத் 3

 

♦️யாவற்றுக்கும் முந்தியவன் அல்லாஹ் அவவே என்று குறிப்பிட்டு கூறப்படுகிறது. வானம், பூமி, அர்ஷ், குர்ஷி போன்ற படைக்களை படைப்பதற்கு முன்பே அல்லாஹ் இருக்கின்றான். அவனுக்கென்று ஓர் தனிப்பட்ட இருப்பிடம் அன்றும் இல்லை. இன்றும் இல்லை. அவைகளை விட்டும் அவன் தேவையற்றவனாவன். அவன் நாடிய பிரகாரம் நாடிய இடங்களில் இருப்பான். தெளிவான முறையில் கூறப்போனால் அவனுக்கு தனிப்பட்ட ஓர் இருப்பிடம் இல்லை. அவன் எங்கும் இருப்பான் என்பதை திருக்குர்ஆன் ஹதீஸ்களை மூலமாக வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

 

ஒவ்வொரு வஸ்துக்களிலும் சூழ்ந்தவனாக அல்லாஹ் இருக்கின்றான்

 

اَلَاۤ اِنَّهُمْ فِىْ مِرْيَةٍ مِّنْ لِّقَآءِ رَبِّهِمْ اَلَاۤ اِنَّهٗ بِكُلِّ شَىْءٍ مُّحِيْطٌ‏

 

குர்ஆன் கூறுகிறது அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பது குறித்துச் சந்தேகத்தில் இருக்கிறார்கள்; அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக அவன் எல்லாவற்றையும் சூழ்ந்து இருக்கிறான்.

சூரா ஹமீம் ஸஜதா ஆயத் 54

 

♦️ஏக இறைவன் அல்லாஹ்” மக்களின் சந்தேகங்களை குறிப்பிட்டது மட்டுமின்றி, அந்த சந்தேகங்களுக்குறிய தக்க பதிலையும் தெளிவான முறையில் மேற்கூறப்பட்ட ஆயத்தில் குறிப்பிட்டு கூறியுள்ளான்.

 

மக்களின் சந்தேகம் :- அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக அவர்கள் “மக்கள்” இறைவனைச் சந்திப்பது குறித்துச் சந்தேகத்தில் இருக்கிறார்கள்.

 

இறைவனின் பதில் :- அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக அவன் எல்லாவற்றையும் சூழ்ந்து இருக்கிறான்.

 

♦️ஏக இறைவன் அல்லாஹ் எங்கு இருக்கின்றான், அவனை நாம் சந்தித்தது கிடையாதே அப்படி இருக்கையில் அவனை எப்படி சந்திப்பது குறித்து மக்கள் சந்தேகத்தில் இருக்கிறார்கள். அவர்களை நோக்கி அல்லாஹ் கூறுகிறான். அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக அவன் எல்லாவற்றையும் சூழ்ந்து இருக்கிறான். மக்களே! அல்லாஹ்வை சந்திக்கும் விஷயத்தில் சந்தேகம் கொள்ளாதீர்கள். நீங்கள் எத்திசையை நோக்கிய போதிலும் அங்குள்ள வஸ்துக்கள் அது அல்லாத வஸ்துக்களிலும் அவனே சூழ்ந்து இருக்கின்றார்கள். என்ற கருத்துக்களை மேற்கூறப்பட்ட ஆயத்து நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.