12) கணவனும் மனைவியும்

77

கணவனும் மனைவியும்

 

சாந்தி சமாதானத்தின் தீர்க்கதரிசி நபி முஹம்மத் ﷺ அவர்கள் இவ்வுல மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்.

 

கணவனோடு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழுங்கள்

 

عَنْ أُمِّهِ، قَالَتْ سَمِعْتُ أُمَّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا تَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ ‏أَيُّمَا امْرَأَةٍ مَاتَتْ وَزَوْجُهَا عَنْهَا رَاضٍ دَخَلَتِ الْجَنَّةَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எந்த பெண் தன்கணவனுடன் (எந்த கோபமும் இன்றி)முழு மன மகிழ்சியோடு (வாழ்ந்து) மரணித்து இருந்தால் அவள் கண்டிப்பாக சொர்கமே செல்வாள்.

 

அறிவிப்பவர் :- உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 1854, திர்மிதி 1161

 

மனைவியுடன் நல்ல முறையில் வாழ்ந்து நல்லவர் என்ற பட்டத்தை பெற்றுக் கொள்ளுங்கள்

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ ْرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا وَخِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நல்ல குணம் உள்ளவர் மட்டுமே ஈமானில் முழுமை பெற்றவர். உங்களை உங்கள் மனைவிமார்கள் நல்லவர் என்று அங்கீகாரம் வழங்கினால் மட்டுமே நீங்கள் நல்லவர்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 1162 தாரமீ 2834 அஹ்மது 7402

 

கணவருடன் நல்ல முறையில் வாழ்ந்து சிறந்தவள் என்ற பட்டத்தை பெற்றுக் கொள்ளுங்கள்

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ قِيلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ النِّسَاءِ خَيْرٌ؟ قَالَ الَّتِي تَسُرُّهُ إِذَا نَظَرَ وَتُطِيعُهُ إِذَا أَمَرَ وَلَا تُخَالِفُهُ فِي نَفْسِهَا وَمَالِهَا بِمَا يَكْرَهُ

 

பெண்களில் சிறந்தவர் யார்? என்று இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள். அவன் (கணவன்) அவளைப் பார்த்தாள் அவள் அவனை மகிழ்விப்பாள். அவன் கட்டளையிட்டால் கட்டுப்படுவாள். அவன் விரும்பாததை தன் விஷயத்திலும் தன் பொருளாதாரத்திலும் அவனுக்கு மாறு செய்யமாட்டாள் என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் நஸாயி 3231 அஹ்மது 9658

 

உங்கள் மனைவியருக்கு அடிக்காதீர்கள்

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَجْلِدُ أَحَدُكُمْ امْرَأَتَهُ جَلْدَ الْعَبْدِ ثُمَّ يُجَامِعُهَا فِي آخِرِ الْيَوْمِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போல அடிக்க வேண்டாம். (ஏனெனில்,) பிறகு அதே நாளின் இறுதியில் (இரவில்) அவளுடனேயே (நாணமில்லாமல்) உறவு கொள்வீர்கள்.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு ஸம்ஆ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 5204 தாரமீ 2266

 

கஞ்சத்தனம் காட்டுபவர்களே! உங்கள் மனைவி பிள்ளைகளை பசியில் ஆழ்த்தி விடாதீர்கள். உங்கள் பணத்தை உங்களுக்கு தெரியாமல் அவர்கள் எடுத்தாலும் அதில் குற்றமில்லை

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ جَاءَتْ هِنْدُ بِنْتُ عُتْبَةَ بْنِ رَبِيعَةَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ مِسِّيكٌ فَهَلْ عَلَيَّ حَرَجٌ أَنْ أُطْعِمَ مِنَ الَّذِي لَهُ عِيَالَنَا؟ فَقَالَ لَا حَرَجَ عَلَيْكِ أَنْ تُطْعِمِيهِمْ بِالْمَعْرُوفِ

 

ஹிந்த் பின்த்து உத்பா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, யா ரஸூலல்லாஹ்! (என் கணவர்) அபூ சுஃப்யான் மிகவும் கஞ்சனாக இருக்கிறார். அவரின் பணத்திலிருந்து (அவருக்குத் தெரியாமல் எடுத்து) எங்கள் குழந்தை குட்டிகளுக்கு உணவளிப்பதால் என் மீது குற்றம் ஏதும் உண்டா?’ என்று கேட்டதற்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘நியாயமான அளவிற்கு (உன் கணவனின் பணத்தை எடுத்து) அவர்களுக்கு உணவளிப்பதால் உன் மீது குற்றம் எதுவும் இல்லை’ என்று பதிலளித்தார்கள்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2211 நஸாயி 5420 அஹ்மது 24117

 

உங்கள்  மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளை அறிந்து கொள்ளுங்கள்

 

عَنْ حَكِيمِ بْنِ مُعَاوِيَةَ الْقُشَيْرِيِّ عَنْ أَبِيهِ قَالَ قُلْتُ : يَا رَسُولَ اللهِ مَا حَقُّ زَوْجَةِ أَحَدِنَا عَلَيْهِ؟ قَالَ : أَنْ تُطْعِمَهَا إِذَا طَعِمْتَ وَتَكْسُوَهَا إِذَا اكْتَسَيْتَ أَوِ اكْتَسَبْتَ وَلاَ تَضْرِبِ الْوَجْهَ وَلاَ تُقَبِّحْ وَلاَ تَهْجُرْ إِلاَّ فِي الْبَيْتِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (வந்து) யா ரஸுலல்லாஹ்! எங்களில் ஒருவர் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று நான் கேட்ட போது, “நீ சாப்பிடும் போது அவளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். நீ உடை உடுத்தும் போது அவளுக்கும் உடை கொடுக்க வேண்டும். முகத்தில் அடிக்கக் கூடாது. அவளை நீ மனம் நோகச் செய்யக் கூடாது. வீட்டிற்குள்ளேயே தவிர (வேறு இடங்களில் அவள் மீது) வெறுப்பைக் காட்டக் கூடாது.

 

அறிவிப்பவர் :- முஆவியா இப்னு ஹைதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூதாவூத் 2142

 

நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் ஊட்டுகிற ஒரு கவளம் உணவுக்கும் நற்பலன் நன்மைகள் உண்டு

 

عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّهُ أَخْبَرَهُ : أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللهِ إِلاَّ أُجِرْتَ عَلَيْهَا حَتَّى مَا تَجْعَلُ فِي فِي امْرَأَتِكَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் ஊட்டுகிற ஒரு கவளம் உணவாயினும் சரி, அதற்கும் நற்பலன் உண்டு.

 

அறிவிப்பவர் :- ஸயீத் இப்னு அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 56 அஹ்மது 1546

 

தன் மனைவியை வீட்டிற்குள் அடிமை படுத்தி வைக்க வேண்டாம்

 

وَكَانَ يَوْمَ عِيدٍ يَلْعَبُ السُّودَانُ بِالدَّرَقِ وَالْحِرَابِ فَإِمَّا سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَإِمَّا قَالَ تَشْتَهِينَ تَنْظُرِينَ فَقُلْتُ نَعَمْ فَأَقَامَنِي وَرَاءَهُ خَدِّي عَلَى خَدِّهِ وَهُوَ يَقُولُ دُونَكُمْ يَا بَنِي أَرْفِدَةَ حَتَّى إِذَا مَلِلْتُ قَالَ حَسْبُكِ قُلْتُ نَعَمْ قَالَ فَاذْهَبِي

 

ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, “நீ பார்க்க ஆசைப்படுகின்றாயா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) “அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்த போது, “உனக்குப் போதுமா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். “அப்படியானால் செல்” என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 950, 2907

 

உங்கள் மனைவியே! சிறந்த செல்வமாகும்

 

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ الدُّنْيَا مَتَاعٌ، وَخَيْرُ مَتَاعِ الدُّنْيَا الْمَرْأَةُ الصَّالِحَةُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1467

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.