12) மரணித்த நபிமார்கள் மறைந்த வன்னம் உயிருடன் இருக்கிறார்கள்

308

மரணித்த நபிமார்கள் மறைந்த வன்னம் உயிருடன் இருக்கிறார்கள்

 

📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ فَنَبِيُّ اللَّهِ حَيٌّ يُرْزَقُ

 

هذا الحديث صحيح أخرجه سعيد بن منصور وابن أبي شيبة وأحمد في مسنده وابن عاصم في الصلاة له وأبو داود والنسائي في سننهم والطبراني في معجمه وابن خزيمة في صحاحهم والبيهقي في حياة الأنبياء وشعب الإيمان وغيرهما من تصانيفه ورد طرق كثيرة جمعها الحافظ المنذري في جزء مخصوص وقال في الترغيب والترهيب رواه ابن ماجه بإسناد جيد ورواه ابن حبان في صحيحه والحاكم وصححه

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நபிமார்கள் கப்ரிலில் (மறைந்த வன்னம்) உயிருடன் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய உடம்பை மண் தின்னாது. அவர்கள் கப்ரில் (சுவர்க்க) உணவுகள் வழங்கப்படுகிறது என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ தர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 1637

 

நபிமார்கள் கப்ரிலில் மறைந்த வன்னம் உயிருடன் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய உடம்பை மண் தின்னாது. அவர்கள் கப்ரில் சுவர்க்க உணவுகள் வழங்கப்படுகிறது.

 

عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيَاتِي خَيْرٌ لَكُمْ تُحَدِّثُونَ وَنُحَدِّثُ لَكُمْ وَوَفَاتِي خَيْرٌ لَكُمْ تُعْرَضُ عَلَيَّ أَعْمَالُكُمْ فَمَا رَأَيْتُ مِنَ خَيْرٍ حَمِدْتُ اللَّهَ عَلَيْهِ وَمَا رَأَيْتُ مِنَ شَرٍّ اسْتَغْفَرْتُ اللَّهَ لَكُمْ

 

رواه الحافظ أبو بكر البزار في مسنده ورجاله رجال الصحيح ذكره الحافظ ابن كثير في البداية وقال السيوطي في الخصائص الكبرى وسنده صحيح

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். என் வாழ்வும் உங்களுக்கு நன்மையானதே நீங்கள் என்னோடு பேசினீர்கள் நான் உங்களோடு பேசிக்கொண்டிருந்தேன். என் மரணமும் உங்களுக்கு நன்மையானதே. உங்கள் அமல்கள் எனக்கு எடுத்துக்காட்டப்படுகிறது. அது நல்லதாக இருந்தால் அவருக்காக அல்லாஹ்வை நான் புகழ்கிறேன். அது தீயதாக இருந்தால் உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் பாவமன்னிப்பு தேடுகிறேன்.

 

அறிவிப்பவர் :- இப்னு மஸ்வூது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பஸ்ஸார் 1702 மஜ்மவுஸ் ஸவாயித் 1425

 

عَنْ أَبِى هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ أَحَدٍ يُسَلِّمُ عَلَىَّ إِلاَّ رَدَّ اللَّهُ عَلَىَّ رُوحِى حَتَّى أَرُدَّ عَلَيْهِ السَّلاَمَ

 

رواه الإمام أحمد وأبو داود قال الحافظ ابن حجر وَرُوَاته ثِقَات وقال الشيخ مشهور بن حسن إسناده حسن

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எவரேனும் ஒருவர் என் மீது ஸலாம் சொன்னால் நான் அவருக்குப் பதில் ஸலாம் சொல்வதற்காக அல்லாஹ் எனக்கு எனது ரூஹைத் திருப்புகிறான் என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூ தாவூத் 2041 அஹ்மது 10815

 

عَنْ اِبْنِ مَسْعُوْد رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُوْلِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ لِلَّهِ مَلَائِكَةً سَيَّاحِينَ فِي الْأَرْضِ يُبَلِّغُونِي مِنْ أُمَّتِي السَّلَامَ

 

قال الحاكم صحيح وأقره الذهبي وقال الهيثمي رجاله رجال الصحيح قال الحافظ العراقي الحديث متفق عليه دون قوله سياحين وقال ابن القيم وهذا إسناد صحيح

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்விற்கு மண்ணுலகில் சுற்றிவரும் மலக்குகள் இருக்கிறார்கள். என் உம்மத்தினர் கூறும் ஸலாமை அவர்கள் என்னிடம் எத்திவைக்கின்றார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் நஸாயி 1282 பஸ்ஸார்” முஸ்னத் 5/308

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَلَّى عَلَيَّ عِنْدَ قَبْرِي سَمِعْتُهُ وَمَنْ صَلَّى عَلَيَّ نَائِيًا أَبْلَغْتُهُ

 

قال الحافظ السخاوي في القول البديع وسنده جيد كما أفاده شيخنا أي الحافظ ابن حجر وقد أصاب الحافظ في حكمه فإسناد الحديث رجاله رجال الصحيح

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எவரேனும் என் கப்ரு ரவ்ளா (மண்ணரைக்கு) அருகில் இருந்து கொண்டு என் மீது ஸலவாத் ஓதினால் அதை நான் என் காதால் கேட்கிறேன். எவரேனும் தூரத்தில் இருந்து கொண்டு என் மீது ஸலவாத் ஓதினால் அது எனக்கு எத்திவைக்கப்படுகிறது.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் பைஹகி” ஸுஃபுல் ஈமான் 1481

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது நாங்கள் சொல்லக்கூடிய ஸலாம் ஸலவாத்துக்கள் மட்டுமின்றி நம்முடைய நல்லமல்கள் கூட இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கப்ருஸ்தானங்களில் எடுத்துக் காட்டப்படுகிறது என்ற கருத்தை நம்மால் காண முடிகிறது.

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ﻳَﻘُﻮﻝُ ﻭَﺍﻟَّﺬِﻱ ﻧَﻔْﺲُ ﺃَﺑِﻲ ﺍﻟْﻘَﺎﺳِﻢِ ﺑِﻴَﺪِﻩِ ﻟَﻴَﻨْﺰِﻟَﻦَّ ﻋِﻴﺴَﻰ ﺍﺑْﻦُ ﻣَﺮْﻳَﻢَ ﺇِﻣَﺎﻣًﺎ ﻣُﻘْﺴِﻄًﺎ ﻭَﺣَﻜَﻤًﺎ ﻋَﺪْﻻ ﻓَﻠَﻴَﻜْﺴِﺮَﻥَّ ﺍﻟﺼَّﻠِﻴﺐَ ﻭَﻟَﻴَﻘْﺘُﻠَﻦَّ ﺍﻟْﺨِﻨْﺰِﻳﺮَ ﻭَﻟَﻴُﺼْﻠِﺤَﻦَّ ﺫَﺍﺕَ ﺍﻟْﺒَﻴْﻦِ ﻭَﻟَﻴُﺬْﻫِﺒَﻦَّ ﺍﻟﺸَّﺤْﻨَﺎﺀَ ﻭَﻟَﻴُﻌْﺮَﺿَﻦَّ ﻋَﻠَﻴْﻪِ ﺍﻟْﻤَﺎﻝُ ﻓَﻼ ﻳَﻘْﺒَﻠُﻪُ ﺛُﻢَّ ﻟَﺌِﻦْ ﻗَﺎﻡَ ﻋَﻠَﻰ ﻗَﺒْﺮِﻱ ﻓَﻘَﺎﻝَ ﻳَﺎ ﻣُﺤَﻤَّﺪُ ﻷُﺟِﻴﺒَﻨَّﻪُ

 

أخرجه أبو يعلى في مسنده أخبره أنه سمع أبا هريرة يقول سمعت رسول الله صلى الله عليه وسلم فذكره قلت و هذا إسناد جيد رجاله كلهم ثقات رجال و صحح له ابن حبان و الحاكم و البوصيري و مشاه المنذري فانظر الحديث من كتابي صحيح الترغيب والترهيب والحديث قال الهيثمي ورجاله رجال الصحيح

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அபுல் காஸிமின் உயிர் யாருடைய கையில் இருக்கிறதோ அவனின் மீதாணையாக, ‘ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (வானத்திலிருந்து) நீதமான நேர்மையான இமாமாக இறங்கி வந்து, சிலுவைகளை உடைப்பார்கள், மேலும் பன்றிகளை கொல்லுவார்கள், மேலும் மக்களுக்கு மத்தியில் சீர்திருத்தம் செய்வார்கள், மேலும் விரோதம் குரோதம் போன்ற கசடுகளை போக்குவார்கள் மற்றும் பொருட்களை புறக்கணிப்பார்கள். அதை வாங்க ஒருவரும் (அந்நேரத்தில் ஏழைகள்) இருக்கமாட்டார்கள். இறுதியாக என்னுடைய கப்ரு ரவ்ளாவிற்கு வந்து, முஹம்மதே! என்று என்னை அழைத்தால் அவர்களுடைய அழைப்பிற்கு நான் பதில் கூறுவேன் என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் மஜ்மவுஸ் ஸவாயித் 13813, அபூ யஃலா 6584

 

என்னுடைய கப்ரு ரவ்ளாவிற்கு வந்து என்னை அழைத்தாள் அதற்கு நான் பதில் கொடுப்பேன் என்ற கருத்தை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழியுருத்திக் கூறியுள்ளதை நம்மால் காண முடிகிறது.

 

عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَمَّا كَانَ أَيَّامُ الْحَرَّةِ لَمْ يُؤَذَّنْ فِي مَسْجِدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثًا وَلَمْ يُقَمْ وَلَمْ يَبْرَحْ سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ الْمَسْجِدَ وَكَانَ لَا يَعْرِفُ وَقْتَ الصَّلَاةِ إِلَّا بِهَمْهَمَةٍ يَسْمَعُهَا مِنْ قَبْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

 

ஹர்ரத் போர் காலகட்டத்தில் மஸ்ஜிதுன் நபவியில் மூன்று நாட்கள் பாங்கும் சொல்லப்படவில்லை, ஜமாஅத் தொழுகையும் நடைபெறவில்லை. அச்சமயம் ஸயீது இப்னு அல்முஸய்யப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் இருந்தார்கள். (இந்த மூன்று நாட்களாக) தொழுகையின் நேரத்தை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு ஷரீபில் இருந்து வரும் கனைப்புச் சப்தத்தை வைத்தே அறிந்து கொண்டார்கள்.

 

அறிவிப்பவர் :- ஸயீது இப்னு அப்தில் அஸீஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தாரமீ 93

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரில் இருந்து வெளிப்படும் சத்தத்தை வைத்து தொழுகை நேரத்தை ஸயீது இப்னு அல்முஸய்யப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிந்து கொண்டார்கள் என்ற கருத்து நபிமார்கள் கப்ருகளில் மறைந்த வன்னம் உயிருடன் இருக்கிறார்கள் என்ற கருத்துக்களை உறுதி செய்கிறது.

 

عَنْ عَلِيِّ ابْن أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَمَّا حَضَرَتْ أَبَا بَكْرٍ الْوَفَاةُ أَقْعَدَنِي عِنْدَ رَأْسِهِ وَقَالَ لِي يَا عَلِيُّ إِذَا أَنَا مِتُّ فَغَسِّلْنِي بِالْكَفِّ الَّذِي غَسَّلْتَ بِهِ رَسُولَ اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَحَنِّطُونِي وَاذْهَبُوا بِي إِلَى الْبَيْتِ الَّذِي فِيهِ رَسُولُ اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَأْذِنُوا فَإِنْ رَأَيْتُمُ الْبَابَ قَدْ يُفْتَحَ فَادْخُلُوا بِي وَإِلا فَرُدُّونَي إِلَى مَقَابِرِ الْمُسْلِمِينَ حَتَّى يَحْكُمُ اللَّه بَيْنَ عِبَادِهِ قَالَ فَغُسِّلَ وَكُفِّنَ وَكُنْتُ أَوَّلَ مَنْ يَأْذَنُ إِلَى الْبَابَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّه هَذَا أَبُو بَكْرٍ مُسْتَأْذِنٌ فَرَأَيْتُ الْبَابَ قَدْ تُفْتَحُ وَسَمِعْتُ قَائِلا يَقُولُ ادْخَلِوا الْحَبِيبَ إِلَى حَبِيبِهِ فَإِنَّ الْحَبِيبَ إِلَى الْحَبِيبِ مُشْتَاقٌ

 

அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மரணம் நெருங்கிய சமயத்தில், என்னை தனது தலைமாட்டில் உட்காரவைத்துக் கொண்டு, அலியே! நான் மரணத்து விட்டால், இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குளிப்பாட்டிய கையைக்கொண்டு என்னை குளிப்பாட்டி, எனக்கு வாசனைத்தூள் போட்டு, என்னை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு ரவ்ளாவிற்கு எடுத்துச் சென்று, (இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகில் அடக்கம் செய்ய) எனக்கு அனுமதி கேட்பீராக! ரவ்ளாவின் கதவு திறக்கப்பட்டால் என்னை உள்ளே கொண்டு சென்று(அடக்கம் செய்து) விடுவீராக! இல்லையெனில் முஸ்லிம்கள் அடக்கப்படும் (பொதுக்) கப்ருஸ்தானில் அடக்கம் செய்து விடுவீராக! தனது அடியாருக்காக தீர்ப்பு வழங்கும் (கியாமத் நாள்) வரை (நான் பொதுக் கப்ருஸ்தானிலியே இருந்து விடுகிறேன்) என்றார்கள். (அவ்வாறே அவர்கள் மரணித்த பின்னர்) குளிப்பாட்டப்பட்டு, கஃபனிடப்பட்டார்கள். பின்னர் (அலியாகிய) நானே! முதலில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்ளாவின் வாசற்படியில் (நின்றுக்கொண்டு) யா ரஸூலல்லாஹ்! இதோ அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உங்களோடு (அடக்கம் செய்யப்பட) அனுமதி கேட்கிறார்கள் என்றேன். உடனே இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு ரவ்ளாவின் கதவைப் பார்த்தேன். கதவு திறக்கப்பட்டது. ‘நண்பரை அவருடைய நண்பரோடு சேர்த்து விடுங்கள் எனெனில், நண்பர் நண்பரோடு சேருவதைத்தான் விரும்புவார் என சப்தம் வந்தது எனக் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு அஸாகிர்” தாரீக் திமஷ்க் 30666

 

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பேச்சை கப்ரிலிருந்து கொண்ட இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செவிமடுத்தது மட்டுமின்றி அவர்களின் கேள்விக்கு அற்புதங்களை வைத்து பதில் கொடுத்துள்ளார்கள் என்ற கருத்தை நம்மால் காண முடிகிறது.

 

குறிப்பு :- மரணித்த நபிமார்கள் ரஸூல்மார்கள் கப்ருகளிலும் சரி அது அல்லாத இடங்களிலும் சரி அவர்கள் மறைந்த வன்னம் உயிருடன் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு சுவர்க்கத்து உணவுகள் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு நம்முடைய செயல்கள் எடுத்துக் காட்டப்படுகிறது என்ற கருத்தை நம்மால் காண முடிகிறது.

 

மரணித்த நல்லடியார்கள் மறைந்த வன்னம் உயிருடன் இருக்கிறார்கள்

 

وَلَا تَقُوْلُوْا لِمَنْ يُّقْتَلُ فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتٌ بَلْ اَحْيَآءٌ وَّلٰـكِنْ لَّا تَشْعُرُوْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிந்து (எதிரி களால்) வெட்டப்பட்டவர்களை மரணித்தவர்கள் எனக் கூறாதீர்கள். மாறாக, (அவர்கள்) உயிரோடு இருக்கிறார்கள். ஆனால் (அதை) நீங்கள் உணர்ந்துகொள்ள மாட்டீர்கள்.

 

சூரா பகரா ஆயத் 154

 

وَلَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتًا  بَلْ اَحْيَآءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُوْنَۙ‏

 

குர்ஆன் கூறுகிறது (முஃமின்களே!) அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்து) வெட்டப்பட்டோரை இறந்து விட்டவர்களென நீங்கள் ஒருபோதும் எண்ண வேண்டாம். அவர்கள் தம் இறைவனிடத்தில் நிச்சயமாக உயிரோடு இருக்கின்றார்கள். (அன்றி) அவர்களுக்கு உணவும் அளிக்கப்படுகிறது.

 

சூரா ஆல இம்ரான் ஆயத் 169

 

இஸ்லாத்தின் எதிரிகளான காஃபிர்களுடன் போராடி அவர்களின் வாளால் வெட்டப்பட்ட நிலையில் ஷஹீதாகிய வீர தியாகிகளான ஷுஹதாக்கள் தங்களுடைய கப்ருகளில் மறைந்த வன்னம் உயிருடன் இருக்கிறார்கள்.

 

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اَعْدَى عَدُوِّكَ نَفْسُكَ الَّتِيْ بَيْنَ جَنْبَيْكَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உனது எதிரிகளில் உனக்கு மிகப்பெறும் எதிரி உனது இரு விலாக்களுக்குமிடையே உள்ள நப்ஸ் என்ற மனோ இச்சை தான் என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பைஹகி” அஸ்சுஃதுல் கபீர் 343

 

عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الْمُجَاهِدُ مَنْ جَاهَدَ نَفْسَهُ

 

قال الترمذي وفي الباب عن عقبة بن عامر وجابر وحديث فضالة حديث حسن صحيح وروى الحديث أيضًا ابن حبان في صحيحه وراه البزار والطبراني في الكبير باختصار ورجال البزار ثقات وصححه والحاكم وذكره الهيثمي في مجمع الزوائد

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யார் தனது நப்ஸ் மனோ இச்சையை எதிர்த்துப் போரிட்டவனே! போராளியாவான்.

 

அறிவிப்பவர் :- புழாலத் இப்னு உபைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 1621, அஹ்மது 23951, 23965

 

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجَعْنَا مِنَ الْجِهَادِ الْاَصْغَرِ اِلَى الْجِهَادِ الْاَكْبَرِ قَالُوا وَمَا الْجِهَادُ الْاَكْبَرُ يَا رَسولَ الله جِهَادُ النَّفْسِ

 

إسناده ضعيف وقول بعض السلف ومعناه صحيح

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நாம் சிறிய போரை முடித்து விட்டு பெரிய போருக்குத் திரும்பியுள்ளோம் என்று கூறினார்கள். அச்சமயம் ஸஹாபாக்கள். யா ரஸூலல்லாஹ்! பெரிய போரென்றால் எது என்று கேட்டார்கள். அதற்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நப்ஸ் என்ற மனோ இச்சையுடன் போராடுவதே பெரிய யுத்தம் என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பைஹகி” அஸ்சுஃதுல் கபீர் 373

 

அல்லாஹ்வின் மார்க்க விஷயத்திற்கு எதிராக செயல்படும் நப்ஸ் என்ற மனோ இச்சையுடன் ஒவ்வொருவரும் போரிட வேண்டும். அதில் முழுமையாக வெற்றி பெற்றவர்கள் அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்ற நல்லடியார் என்ற பட்டமும் தன் நப்ஸ் எனும் விரோதியை வெற்றி கொண்ட போர்வீரர் என்ற பட்டமும் கிடைக்கப்பெறும், அதே நிலையில் வீரமரணம் அடைந்து விட்டாள் உயர்வான ஷஹீத் என்ற பட்டத்தையும் அவர்கள் பெற்றுக் கொல்கிறார்கள்.

 

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ ضَرَبَ بَعْضُ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خِبَاءَهُ عَلَى قَبْرٍ وَهُوَ لاَ يَحْسِبُ أَنَّهُ قَبْرٌ فَإِذَا فِيهِ إِنْسَانٌ يَقْرَأُ سُورَةَ تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ حَتَّى خَتَمَهَا فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللهِ إِنِّي ضَرَبْتُ خِبَائِي عَلَى قَبْرٍ وَأَنَا لاَ أَحْسِبُ أَنَّهُ قَبْرٌ فَإِذَا فِيهِ إِنْسَانٌ يَقْرَأُ سُورَةَ تَبَارَكَ الْمُلْكِ حَتَّى خَتَمَهَا فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هِيَ الْمَانِعَةُ هِيَ الْمُنْجِيَةُ تُنْجِيهِ مِنْ عَذَابِ القَبْرِ

 

رواه الترمذي وقال هذا حديث حسن

 

ஸஹாபாப் பெருமக்களில் ஒருவர் பிரயானத்திற்கு செல்லும் போது ஒரு இடத்தில் இளைப்பாருவதற்காக வேண்டி ஓர் கப்ரின் மீது அது கப்ரு என்று அறியாமல் கூடாரம் அமைத்து அதில் இருந்தார்கள். அச்சமயம் கப்ருக்குள் ஒரு மனிதர் தபாரக்கல்லதீ சூராவை ஓதிக் கொண்டிருக்கும் விஷயம் பிறகு தான் தெறியவந்தது. இவ்விஷயத்தை பற்றி இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அறிவித்த போது சூரத்துல் முல்க் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் மனிதனைக் காப்பற்றக்கூடியது என்று இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 2890, மிஷ்காத் 187

 

அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்ற நல்லடியார்கள் கப்ருகளில் மறைந்த வன்னம் உயிருடன் இருப்பது மட்டுமின்றி தங்களது கப்ருகளில் அல்லாஹ்வின் வேதங்களையும் ஓதி வருகிறார்கள் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

குறிப்பு :- இஸ்லாத்தின் எதிரிகளான காஃபிர்களுடன் போராடி அவர்களின் வாளால் வெட்டுப்பட்ட நிலையில் ஷஹீதாகியவர்கள் கப்ரில் மறைந்த வன்னம் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை போல நப்ஸ் எனும் மனோ இச்சையை வீழ்த்தி அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்று வீரமரணம் அடைந்த இறைநேசர்கள் அனைவரும் ஷஹீதாகிய வீர தியாகிகள் என்றே பொருள் கொள்ளப்படும். அவர்கள் அனைவரும் தங்களுடைய கப்ருகளில் மறைந்த வன்னம் ஹயாத்துடன் இருக்கிறார்கள். இதில் நபிமார்கள், ரஸூல்மார்கள், அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்ற அவ்லியாக்கள், நல்லடியார்கள் அனைவரும் அடங்குவார்கள் என்ற கருத்தை திருக்குர்ஆன் ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.