8) நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்
8) நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்
♦️பெயர் :- இஸ்மாயில் (இஸ்மவேல்)
♦️சிறப்பு பெயர் :- தபீயுல்லாஹ்
♦️பிறப்பு :- கிமு. 1911
♦️தந்தை பெயர் :- இப்ராஹீம்
♦️தாய் பெயர் :- ஹாஜரா
♦️பட்டம் :- அல்லாஹ்வின் தூதர்
♦️ஜம்ஜம் ஊற்று :- ஒரு வயதாக இருக்கும் நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இருக்கும் போது இவர்களையும், இவர்களின் அன்னையையும் பாரான் பள்ளத்தாக்கில் தம் இல்லத்தின் அருகில் விட்டு வருமாறு நபி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அல்லாஹ் கட்டளையிட்டான். பின்னர் புனித இடமான மக்காவை வந்தடைந்ததும் மூன்று நாட்கள் தங்கி விட்டு பின்னர். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மாத்திரம் சிரியா சென்றார்கள். குழந்தை தாகத்தால் அழ ஆரம்பித்தது. அன்னை ஹாஜரா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அங்கும் இங்கும் ஓடி அழைத்தார்கள். பின்னர் பிள்ளை இருக்கும் இடத்திற்கு வந்தபோது குழந்தை காலை உதறிய இடத்தில் நீர்ச்சுனை ஒன்று பொங்கி ஓடிக் கொண்டிருந்ததது. இதனை கண்ட அன்னை அவர்கள் அங்கு வந்து தண்ணீரை அருந்திய பிறகு நாளை வேண்டும் என்பதற்காக மண்ணை வைத்து அணைபோல் கட்டி ஜம் ஜம் (நில், நில்) என்று கூறினார்கள். அதுவே ஜம்ஜம் தண்ணீர் ஆகும்.
இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறக்கும் போது நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வயது 86 ஆகும்.
♦️சகோதரர் :- இஸ்ஹாக்
♦️மனைவியர் :- உமாரத், ஷைய்யிதா
♦️பிள்ளைகள் :- நபாயூத், கைதார், அத்பாஈல், மிபுஷாம், மிஷ்மாஃ, தூமா, மீஷா, ஹுதத், தீமா, யதூர், நஃபீஸ், கிதுமான்.
♦️தொழில் :- வேட்டையாடுதல், துணி வியாபாரம்
♦️தலைமை :- இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களின் வாழ்நாள் வரை மக்கா நகரின் தலைவராகவும் இறையில்லமான கஅபாவின் நிர்வாகியாகவும் இருந்தார்கள். இவர்களுக்குப் பின் இவர்களின் மகன் கிதார் மக்காவில் தங்கி கஃபாவின் ஊழியத்தை செய்து வந்தார்.
♦️போதனை :- நபி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மரணத்திற்கு பின்னர் 47 ஆண்டுகள் வாழ்ந்து இவ்வுலகில் ஓரிறை வணக்கத்தைப் போதித்து வந்தார்கள்.
♦️ஆயுட்காலம் :- 137 ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.
♦️மரணம் :- கிமு. 1774
♦️கப்ரு :- நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் ஈராக் நாட்டிலுள்ள பாக்தாத்தில் அனீக் என்ற ஊரில் அமைந்துள்ளது.
குறிப்பு : பிரபலமான கருத்து நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஷவூதி அரேபியா நாட்டிலுள்ள மக்கா நகரில் தான் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. அல்லாஹ் நன்கறிந்தவன்.
♦️குர்ஆன் :- நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயர் குர்ஆனில் 12 இடங்களில் இடம் பெற்றுள்ளது.
WORLD ISLAM YSYR
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்