13) அல்லாஹ் தினம்தோறும் ஏழாம் வானத்திலிருந்து முதலாம் வானத்திற்கு இறங்குகின்றானா?
அல்லாஹ் தினம்தோறும் ஏழாம் வானத்திலிருந்து முதலாம் வானத்திற்கு இறங்குகின்றானா?
📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ يَقُولُ : مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நமது இரட்சகன் ஒவ்வொரு இரவும் முதல் வானத்திற்கு இரவில் மூன்றாவது பகுதி இருக்கும் போது இறங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனைக்கு நான் பதிலளிக்கிறேன், யாரனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன், யாரேனும் பாவமன்னிப்பு தேடினால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1145 முஸ்லிம் 168, 758, 1261 இப்னு மாஜா 1366
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : يَنْزِلُ اللَّهُ إِلَى السَّمَاءِ الدُّنْيَا كُلَّ لَيْلَةٍ حِينَ يَمْضِى ثُلُثُ اللَّيْلِ الأَوَّلُ فَيَقُولُ أَنَا الْمَلِكُ أَنَا الْمَلِكُ مَنْ ذَا الَّذِى يَدْعُونِى فَأَسْتَجِيبَ لَهُ مَنْ ذَا الَّذِى يَسْأَلُنِى فَأُعْطِيَهُ مَنْ ذَا الَّذِى يَسْتَغْفِرُنِى فَأَغْفِرَ لَهُ فَلاَ يَزَالُ كَذَلِكَ حَتَّى يُضِىءَ الْفَجْرُ
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ், ஒவ்வோர் இரவிலும் இரவின் முதல் மூன்றிலொரு பகுதி முடியும் போது கீழ் வானத்திற்கு இறங்கிவந்து, ‘நானே அரசன்; நானே அரசன்! என்னிடம் பிரார்த்திப்பவர் எவருமுண்டா? அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னிடம் கேட்பவர் எவரும் உண்டா? அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர் எவரும் உண்டா? அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுகிறான். ஃபஜ்ர் வெளிச்சம் வரும் வரை இவ்வாறு கூறிக்கொண்டிருக்கிறான்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1387
♦️ஆரம்ப ஹதீஸில் (ينزل ربنا) என்ற அரபு வாசகமும் அதற்கடுத்த ஹதீஸில் (ينزل الله) என்ற அரபு வாசகமும் இடம் பெற்றுள்ளது. எங்கள் ரப்பு இறங்குகிறான். எங்கள் அல்லாஹ் இறங்குகிறான் என்று பொருள் கொள்ளப்படுகிறது. அதையடுத்து (أنا الملك أنا الملك) என்ற அரபு வாசகமும் இடம் பெற்றுள்ளது. நானே அரசன்! நானே அரசன்! என்று கூறுவதாக இடம் பெற்றுள்ளது.
♦️மேற்கூறிய ஹதீஸ்களை மூலாதாரமாக வைத்துக்கொண்டு மனிதர்களாகிய நாம் மலைகளின் மேல் பகுதியில் இருந்து கீழ் இறங்குவதை போல. மேல் மாடியில் இருந்து கீழ் இறங்குவதை போல. அரசின் சபையில் இருந்து கீழ் இறங்குவதை போல. அல்லாஹ் மேல் வானில் இருந்து கீழ் வானத்திற்கு இறங்கின்றான் என்று சில மடயர்கள் மக்கள் மத்தியில் பேசி வருவதை நம்மால் காணமுடிகிறது.
இறங்குதல் என்பது :- மேலிருந்து கீழ் நோக்கி இறங்குவதை குறிக்கும். அதே போன்று தன் மனோ நிலையை மாற்றி இறக்கத் தன்மைக்கு (இறங்கிக் கொள்வது) மாறிக் கொள்வதைக் குறிக்கும். என்பதை அனைவரும் சர்வ சாதாரணமாக புரிந்து கொள்ளலாம்.
உதாரணமாக :- மேல் மாடியில் இருந்து கீழ் நோக்கி வருவது. மலை உச்சியில் இருந்து கீழ் நோக்கி வருவது. இதற்கு இறங்குதல் என்று கருதப்படுகிறது. அதேபோல் கடன் கொடுத்தவன் கடனை திருப்பி கேற்கும் போது கோபம் கொள்கிறான். கடனாளியின் கஷ்டத்தை அவன் உணரும் போது கடன் கொடுத்தவன் மனம் மாறுகிறான். தந்தை தன் பிள்ளையிடம் கோபம் கொள்கிறார் அந்த பிள்ளை அழுவதை பார்த்தவுடன் இறக்க தன்மைக்கு வருகிறார். மனம் மாறுகிறார். இதற்கு மனம் இறங்குதல் என்று கருதப்படுகிறது. ஆக இறங்குதல் என்பது இருவிதமாக பயன்படுத்தப் படுவதை நம்மால் காண முடிகிறது.
♦️குரிப்பு :- எங்களுடைய இரச்சகன் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்குகின்றான் என்பதன் அர்த்தம். அல்லாஹ் அவனுடைய இறக்கத் தன்மையை வெளிப்படுத்துகிறான், அதாவது அவனுடைய அருள் ரஹ்மத்தை கொண்டு சூழ்ந்தவனாக அவன் இருக்கிறான். அச்சமயம் நானே அரசன்; நானே அரசன்! என்று கூறுகிறான் இதன் அர்த்தம். ஆட்சி அதிகம் நீங்கள் கேற்பதை நிறைவேற்றும் அதிகாரமும். அள்ளித்தரும் தகுதியுள்ளவன் நானே! என்கிறான். அதன் பின்னர் என்னிடம் பிரார்த்திப்பவர் எவருமுண்டா? அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்று பஜ்ர் உதயமாகும் வரை காத்திருக்கிறான் என்ற கருத்தையே மேற்கூறப்பட்ட ஹதீஸ்கள் கூறுகிறதே தவிர வேறில்லை. எனவே ஷவூதி மன்னர் மாடியில் ஏரி இறங்குவதை போல அல்லாஹ்வும் ஏழாம் வானிலிருந்து முதல் வானத்திற்கு இறங்குகிறான் என்று தமிழ் புராண கதைகளை கூறுவதை நிருத்திக் கொள்ளுங்கள். இந்த வழிகேட்டை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக. ஆமீன்
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்