13) நபி முஹம்மத் ﷺ அவர்களின் பேச்சு

136

நபி முஹம்மத் ﷺ அவர்களின் பேச்சு

 

مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوٰى‏

 

குர்ஆன் கூறுகிறது (நம்முடைய தூதராகிய) உங்களுடைய தோழர் வழி தவறி விடவுமில்லை; தவறான வழியில் செல்லவுமில்லை.

 

وَمَا يَنْطِقُ عَنِ الْهَوٰى

 

குர்ஆன் கூறுகிறது அவர் தன் (மனோ இச்சை) இஷ்டப்படி எதனையும் பேசுவதும் இல்லை.

 

اِنْ هُوَ اِلَّا وَحْىٌ يُّوْحٰىۙ

 

குர்ஆன் கூறுகிறது இது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி (வேறு) இல்லை.

சூரா நஜ்ம் ஆயத் 2,3,4

 

عَنْ مَسْرُوقٍ قَالَ دَخَلْنَا عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو حِينَ قَدِمَ مَعَ مُعَاوِيَةَ إِلَى الْكُوفَةِ فَذَكَرَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَمْ يَكُنْ فَاحِشًا وَلَا مُتَفَحِّشًا وَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ أَخْيَرِكُمْ أَحْسَنَكُمْ خُلُقًا

 

முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (இராக்கில் உள்ள) கூஃபாவுக்கு வந்தபோது நாங்கள் அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நினைவுகூர்ந்து, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை என்று கூறிவிட்டு, நற்குணங்கள் வாய்ந்தவரே உங்களில் மிகவும் சிறந்தவர் என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

 

அறிவிப்பவர் :- மஸ்ரூக் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். ஆதாரம் புஹாரி 6029 முஸ்லிம் 2321 திர்மிதி 1975 அஹ்மது 6504, 6818

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاحِشًا وَلَا مُتَفَحِّشًا وَكَانَ يَقُولُ إِنَّ مِنْ خِيَارِكُمْ أَحْسَنَكُمْ أَخْلَاقًا

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே’ என்று அவர்கள் கூறுவார்கள்.

 

அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3559, 3759 அஹ்மது 7035

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.