ஷபாஅத் ஷுஹ்ரா எனும் சிறிய பரிந்துரை பற்றிய ஆய்வுத் தொகுப்பு
ஷபாஅத் ஷுஹ்ரா எனும் சிறிய பரிந்துரை பற்றிய ஆய்வுத் தொகுப்பு
📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
மறுமை நாளில் ஷபாஅத் எனும் பரிந்துரையானது, அல்லாஹ்வின் அனுமதி பெற்று அவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடியார்களும் அது அல்லாத அமல்களும் ஏகத்துவ கலிமாவை மொழிந்த அடியார்களுக்காக வேண்டி அல்லாஹ்விடம் பரிந்து பேசுவதாகவும். இவை ஷபாஅத் குப்ரா என்றும் ஷபாஅத் ஷுஹ்ரா என்றும் இரு விதமாக பார்க்கப்படுகிறது. ஷபாஅத் குப்ரா எனும் மாபெரும் பரிந்துரை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே பிரயோத்திகமாக கொடுக்கப்பட்டது. இது பற்றி முன்பு பார்த்தோம், அடுத்து ஷபாஅத் ஷுஹ்ரா எனும் சிறிய பரிந்துரை ஏனைய நபிமார்கள், நல்லடியார்கள், மலக்குகள், அது அல்லாத சாலிஹான நல்லமல்கள் என்பனவும் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு மறுமை நாளில் செய்யும் பரிந்துரையாகும்.
وَاتَّقُوْا يَوْمًا لَّا تَجْزِىْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَيْــٴًـــا وَّلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ
குர்ஆன் கூறுகிறது இன்னும், ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
சூரா பகரா ஆயத் 48
மறுமையில் ஷபாஅத் பரிந்துரை செய்பவர்கள் எவரும் இல்லை என்று இன்னும் சில இறைவசனங்கள். சூரா பகரா 123, 254 சூரா அன்ஆம் ஆயத் 51, 70 94 சூரா ஸுஃரா ஆயத் 100 சூரா சஜதா ஆயத் 4 சூரா யாஸீன் ஆயத் 23
நபிமார்கள் நல்லடியார்கள் அது அல்லாத எவர்களும் மறுமையில் அல்லாஹ்வின் அனுமதி இன்றி சுயமாக ஷபாஅத் பரிந்துரை செய்ய முடியாது என்ற கருத்தை மேற்கூறிய இறைவசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهٗۤ اِلَّا بِاِذْنِهٖ
குர்ஆன் கூறுகிறது அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்?
சூரா பகரா ஆயத் 255
يَوْمَٮِٕذٍ لَّا تَنْفَعُ الشَّفَاعَةُ اِلَّا مَنْ اَذِنَ لَـهُ الرَّحْمٰنُ وَرَضِىَ لَـهٗ قَوْلًا
குர்ஆன் கூறுகிறது அந்நாளில் அர்ரஹ்மான் எவரை அனுமதித்து, எவருடைய பேச்சை உவந்து கொள்கிறானோ, அவர்களைத் தவிர வேறு எவருடைய ஷஃபாஅத்து (பரிந்துரையும்) பலனளிக்காது.
சூரா தாஹா ஆயத் 109
وَلَا تَنْفَعُ الشَّفَاعَةُ عِنْدَهٗۤ اِلَّا لِمَنْ اَذِنَ لَهٗ
குர்ஆன் கூறுகிறது அன்றியும், அவன் எவருக்கு அனுமதி கொடுக்கிறானோ அவர்களைத் தவிர, அவனிடத்தில் எந்த பரிந்துரையும் பயனளிக்காது.
சூரா ஸபா ஆயத் 23
وَكَمْ مِّنْ مَّلَكٍ فِى السَّمٰوٰتِ لَا تُغْنِىْ شَفَاعَتُهُمْ شَيْــٴًــــا اِلَّا مِنْ بَعْدِ اَنْ يَّاْذَنَ اللّٰهُ لِمَنْ يَّشَآءُ وَيَرْضٰى
குர்ஆன் கூறுகிறது வானங்களில் எத்தனை மலக்குகள் இருக்கின்றனர்? எனினும், அல்லாஹ் விரும்பி, எவரைப்பற்றித் திருப்தியடைந்து, அவன் அனுமதி கொடுக்கின்றானோ அவரைத் தவிர வேறெவரின் பரிந்துரையும் எந்தப் பயனுமளிக்காது.
சூரா நஜ்ம் ஆயத் 26
وَلَا يَشْفَعُوْنَۙ اِلَّا لِمَنِ ارْتَضٰى
குர்ஆன் கூறுகிறது அவர்கள் யாருக்கும் பரிந்துரை செய்வதில்லை; எவருக்காகப் பரிந்துரை செய்வதை அல்லாஹ் விரும்புகின்றானோ அவர்களுக்காகத் தவிர!
சூரா அன்பியா ஆயத் 28
மறுமை நாளில் சுயமாக எவர்களும் பரிந்துரை செய்ய மாட்டார்கள், இருப்பினும் எவர்களுக்கு அல்லாஹ் பரிந்துரை செய்ய நாடுகிறானோ அவர்களை தவிர என்ற மேற்கூறிய இறைவசனங்கள் அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர்கள் அவனின் அனுமதி கொண்டு ஷபாஅத் பரிந்துரை செய்வார்கள் என்ற கருத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
♦️1) இவ்வுலகில் மரணிவர்களுக்காக வேண்டி செய்யும் ஷபாஅத் பரிந்துரை
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ مَيِّتٍ تُصَلِّي عَلَيْهِ أُمَّةٌ مِنَ الْمُسْلِمِينَ يَبْلُغُونَ مِائَةً كُلُّهُمْ يَشْفَعُونَ لَهُ إِلَّا شُفِّعُوا فِيهِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மரணித்த ஒருவருக்கு நூறுபேர் கொண்ட முஸ்லிம் குழுவினர் (இறுதித்) தொழுகை தொழுது, அவர்களில் ஒவ்வொருவரும் அவருக்காக பரிந்துரை செய்தால் அவர்களின் பரிந்துரை ஏற்கப்படாமல் இருப்பதில்லை.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 947 இப்னு மாஜா 1489 திர்மிதி 1029 நஸாயி 1991
மரணித்த சகோதர சகோதரிகளுக்காக நாம் ஒன்றினைந்து செய்யக்கூடிய தூஆக்கள் பரிந்துரைகள் நிச்சயம் இறைவனிடம் அங்கிகரிக்கப்படுவது மட்டுமின்றி அதற்குறிய கூலி வெகுமதிகளை கப்ருகளிலும் நாளை மறுமை நாளிலும் அவர்கள் பெற்றுக் கொள்வார்கள் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.
♦️2) மறுமை நாளில் மலக்குமார்கள், நபிமார்கள், ஸுஹதாக்கள், உலமாக்கள், ஸாலிஹீன்கள், முஃமின்களின் ஷபாஅத் பரிந்துரை
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ… فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ : شَفَعَتِ الْمَلَائِكَةُ وَشَفَعَ النَّبِيُّونَ وَشَفَعَ الْمُؤْمِنُونَ وَلَمْ يَبْقَ إِلَّا أَرْحَمُ الرَّاحِمِينَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (மறுமையில்) அல்லாஹ் கூறுவான் மலக்குமார்கள் ஷபாஅத் பரிந்துரைத்து விட்டார்கள், இறைத்தூதர்களும் ஷபாஅத் பரிந்துரைத்து விட்டார்கள், முஃமின்களும் ஷபாஅத் பரிந்துரைத்து விட்டார்கள். தற்ப்போது கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன் மட்டுமே எஞ்சியிருக்கிறான் என்று கூறிவிட்டு (அவன் நாடிய பலர்களை நரகில் இருந்து விடுவிப்பான் என்று ஹதீஸ் நீண்டு கொண்டே செல்கிறது)
அறிவிப்பவர் :- அபூ ஸயித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 7439 முஸ்லிம் 183 அஹ்மது 11898
அல்லாஹ் அவன் நாடிய நரகவாசிகளை விடுவிக்க முன்னர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மாபெரும் ஷபாஅத் பரிந்துரை முடிந்து விடும், ஏனைய மலக்குமார்கள, நபிமார்கள், முஃமின்களின் ஷபாஅத் பரிந்துரைகளும் முடிந்து விடும் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.
عَنْ عُثْمَانَ بْنِ عَفَّان رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشْفَعُ يَوْمَ الْقِيَامَةِ ثَلَاثَةٌ : الْأَنْبِيَاءُ ثُمَّ الْعُلَمَاءُ ثُمَّ الشُّهَدَاءُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஷபாஅத் ஷுஹ்ரா) மறுமை நாளில் மூன்று சாரார்கள் ஷபாஅத் பரிந்துரை செய்வார்கள், நபிமார்கள், அடுத்து உலமாக்கள், அடுத்து ஸுஹதாக்களாகும்.
அறிவிப்பவர் :- உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 4313
ثُمَّ تُشَفَّعُ الْمَلَائِكَةُ وَالنَّبِيُّونَ وَالشُّهَدَاءُ وَالصَّالِحُونَ وَالْمُؤْمِنُونَ فَيُشَفِّعُهُمُ اللَّهُ، ثُمَّ يَقُولُ أَنَا أَرْحَمُ الرَّاحِمِينَ
ஹாகிம் ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெறும் ஹதீஸில் மலக்குமார்கள், நபிமார்கள், ஸுஹதாக்கள், ஸாலிஹீன்கள், முஃமின்கள் (அனைவரும்) ஷபாஅத் பரிந்துரை செய்வார்கள் என்ற செய்திகள் இடம் பெற்றுள்ளது.
ஆதாரம் :- ஹாகிம் 8808
عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَدْخُلَنَّ الْجَنَّةَ قَوْمٌ مِنَ الْمُسْلِمِينَ قَدْ غَرِقُوا فِي النَّارِ بِرَحْمَةِ اللَّهِ وَشَفَاعَةِ الشَّافِعِينَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்களில் இருந்து ஒரு கூட்டம் நகரிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் ரஹ்மத் கருணையைக் கொண்டும், மேலும் பரிந்துரையாளர்களின் ஷபாஅத் பரிந்துரையைக் கொண்டும் சுவர்க்கம் நுழைவார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் மஜ்மவுஸ் ஷவாயித் 4565
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மாபெரும் ஷபாஅத் பரிந்துரை முடிந்த பின்னர் ஏனைய மலக்குமார்கள், நபிமார்கள், மார்க்கக் கல்வியை கற்றுக் கொண்ட உலமாக்கள், காஃபிர்களுடன் போராடி ஸஹீதான ஸுஹதாக்கள், ஸாலிஹான மனிதர்கள், இறைநம்பிக்கையார்கள் அனைவரும் மறுமை நாளில் ஷபாஅத் பரிந்துரை செய்வார்கள் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
♦️3) மறுமை நாளில் அல்லாஹ்வின் பாதையில் வீர மரணம் அடைந்த ஸஹீதுகளின் ஷபாஅத் பரிந்துரை
عَنْ أَبَا الدَّرْدَاءَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُشَفَّعُ الشَّهِيدُ فِي سَبْعِينَ مِنْ أَهْلِ بَيْتِهِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் பாதையில் வீர மரணம் அடைந்த ஒருவர் அவர்களுடைய குடும்பத்திலுள்ள எழுபது நபர்களுக்காக வேண்டி (அல்லாஹ்விடம்) ஷபாஅத் பரிந்துரை செய்வார்கள்.
அறிவிப்பவர் :- அபூ தர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூதாவூத் 2522
மறுமையில் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு அல்லாஹ்வின் பாதையில் வீர மரணம் அடைந்த ஸஹீதுகள் அவர்களுடைய குடும்பத்திலுள்ள எழுபது நபர்களுக்காக வேண்டி அல்லாஹ்விடம் ஷபாஅத் பரிந்துரை செய்வார்கள் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.
♦️4) மறுமை நாளில் குழந்தைகளின் ஷபாஅத் பரிந்துரை
عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النِّسَاءَ قُلْنَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اجْعَلْ لَنَا يَوْمًا. فَوَعَظَهُنَّ وَقَالَ أَيُّمَا امْرَأَةٍ مَاتَ لَهَا ثَلَاثَةٌ مِنَ الْوَلَدِ كَانُوا حِجَابًا مِنَ النَّارِ قَالَتِ امْرَأَةٌ وَاثْنَانِ؟ قَالَ وَاثْنَانِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பெண்கள் (வந்து) எங்களுக்கும் ஒரு நாள் (உபதேசத்திற்காக) ஒதுக்குங்களேன் எனக் கேட்டார்கள். அதற்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களுக்கு (ஒருநாள்) உபதேசம் செய்தார்கள். அதில் ‘ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் மரணித்து விட்டதால் அவர்கள் அப்பெண்ணை நரகத்திலிருந்து காக்கும் திரையாக ஆகிவிடுவார்கள்’ எனக் கூறியதும் ஒரு பெண் இரண்டு குழந்தைகள் இறந்தால்? எனக் கேட்டதற்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு குழந்தை மரணித்தாலும் தான் என்றார்கள்.
அறிவிப்பவர் :-அபூ ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1249
பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளை ஒழுங்கு முறைப்படி பராமரித்து கொள்ளுங்கள், அவர்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு உங்களுக்காக பரிந்துரை செய்வார்கள். இன்றும் சில ஹதீஸ்களில் இறைவன் பெற்றோர்களை சுவர்க்கத்தில் நுழைவிக்கும் வரை அவர்களுக்காக அவர்களின் குழந்தைகள் ஷபாஅத் பரிந்துரை செய்வார்கள் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்களும் அது அல்லாத சில ஹதீஸ்களும் நமக்கு தெளிவு படுத்துகிறது.
♦️5) மறுமை நாளில் ஸலிஹான மனிதர் ஒருவரின் ஷபாஅத் பரிந்துரை
عَنِ الْحَارِثِ بْنِ أُقَيْشٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وآلِهِ وَسَلَّمَ إِنَّ الرَّجُلَ مِنْ أُمَّتِي لَيَدْخُلُ الْجَنَّةَ، فَيَشْفَعُ لِأَكْثَرَ مِنْ مُضَرَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக ஒரு மனிதருடைய ஷபாஅத் பரிந்துரையைக் கொண்டு முளர் (கோத்திரத்தில்) உள்ளவர்களை விட அதிகளவானவர்கள் சுவர்க்கம் புகுவார்கள்.
அறிவிப்பவர் :- ஹாரிஸ் இப்னு உகைஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஹாகிம் 244, 247
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الْجَدْعَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَيَدْخُلَنَّ الْجَنَّةَ بِشَفَاعَةِ رَجُلٍ مِنْ أُمَّتِي أَكْثَرُ مِنْ بَنِي تَمِيمٍ قَالُوا يَا رَسُولَ اللَّهِ، سِوَاكَ؟ قَالَ سِوَايَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஒரு மனிதருடைய ஷபாஅத் பரிந்துரையைக் கொண்டு பனூ தமீம் கோத்திரத்தில் உள்ளவர்களை விட அதிகளவானவர்கள் சுவர்க்கம் புகுவார்கள். அதற்கு ஸஹாபக்கள் “உங்களை விடுத்து (வேறொருவரைக் கொண்டா) யா ரஸுலுல்லாஹ்? எனக் கேட்டனர். அதற்கு அவர்கள் (ஆம்) என்னை விடுத்து (வேறொருவரைக் கொண்டு தான்)எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு அபில் ஜத்ஆ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 4316 திர்மிதி 2438 தாரமீ 2850, அஹ்மது 15857, 15858, 22215, 23105 மஜ்மவுஸ் ஷவாயித் 4587
அந்த மனிதர் யார்?
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ جَلَسْتُ إِلَى رَهْطٍ أَنَا رَابِعُهُمْ بِإِيلِيَاءَ، فَقَالَ أَحَدُهُمْ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ لَيَدْخُلَنَّ الْجَنَّةَ بِشَفَاعَةِ رَجُلٍ مِنْ أُمَّتِي أَكْثَرُ مِنْ بَنِي تَمِيمٍ…. مَنْ هَذَا ؟ قَالُوا : ابْنُ أَبِي الْجَذْعَاءِ
فقال رجل :- هو عبد الله بن أبي الجذعاء رضي الله عنه
ஆதாரம் :- அஹ்மது 15857 ஹாகிம் 244
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ سَيَكُونُ فِي أُمَّتِي رَجُلٌ يُقَالُ لَهُ أُوَيْسُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَرَنِيُّ وَأَنَّ شَفَاعَتَهُ فِي أُمَّتِي مِثْلَ رَبِيعَةَ وَمُضَرَ
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الْجَدْعَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ يَقُولُ يَدْخُلُ الْجَنَّةَ بِشَفَاعَةِ رَجُلٍ مِنْ أُمَّتِي أَكْثَرُ مِنْ بَنِي تَمِيمٍ قَالَ الثَّقَفِيُّ قَالَ هِشَامٌ سَمِعْتُ الْحَسَنَ يَقُولُ إِنَّهُ أُوَيْسٌ الْقَرَنِيُّ
فقال رجل :- هو أويس القرني رضي الله عنه
ஆதாரம் :- ஹாகிம் 245, 5775, 5783
மேற்கூறிய ஹதீஸ்களை கூர்ந்து கவனிக்கும் போது மறுமை நாளில் ஒரு மனிதர் ஷபாஅத் பரிந்துரை செய்வார் என்பதாகக் கூறப்பட்ட அந்த மனிதரின் பெயர் :- அப்துல்லாஹ் இப்னு அபில் ஜத்ஆ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் என்று திர்மிதி, அஹ்மது போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது. மேலும் ஹாகிம், மிஷ்காத் போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் அந்த மனிதர் தாபீன்களில் சிறந்தவர் என்று வர்னிக்கப்படும் உவைஸ் அல் கர்னி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
♦️6) சாலிஹான அமல்கள், குறிப்பாக அஹ்லு பைத்தினர்களின் ஷபாஅத் பரிந்துரை
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ الشُّفَعَاءُ خَمْسَةٌ الْقُرْآنَ وَالرَّحِمِ وَالْأَمَانَةُ وَنَبِيُّكُمْ وَأَهْلِ بَيْتِهِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (மறுமை நாளில்) ஷபாஅத் பரிந்துரை செய்யக் கூடியவை ஐந்து. திருக்குர்ஆன், உறவினர்களை சேர்ந்து நடத்தல், அமானத், உங்களது நபி, உங்களது நபியின் குடும்பத்தினர்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் கன்சுல் உம்மால் 39041
♦️7) மறுமை நாளில் சாலிஹான அமல்களின் ஷபாஅத் பரிந்துரை
عَنْ أَبُو أُمَامَةَ الْبَاهِلِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ اقْرَءُوا الْقُرْآنَ فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لِأَصْحَابِهِ، اقْرَءُوا الزَّهْرَاوَيْنِ الْبَقَرَةَ وَسُورَةَ آلِ عِمْرَانَ فَإِنَّهُمَا تَأْتِيَانِ يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُمَا غَمَامَتَانِ أَوْ كَأَنَّهُمَا غَيَايَتَانِ أَوْ كَأَنَّهُمَا فِرْقَانِ مِنْ طَيْرٍ صَوَافَّ تُحَاجَّانِ عَنْ أَصْحَابِهِمَا اقْرَءُوا سُورَةَ الْبَقَرَةِ، فَإِنَّ أَخْذَهَا بَرَكَةٌ وَتَرْكَهَا حَسْرَةٌ وَلَا تَسْتَطِيعُهَا الْبَطَلَةُ (السَّحَرَةُ)
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். குர்ஆனை ஓதி வாருங்கள். ஏனெனில் குர்ஆன் ஓதி வருபவர்களுக்கு அது மறுமையில் முன் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு ஒளிச்சுடர்களான அல்பகரா மற்றும் ஆல இம்ரான் ஆகிய இரு சூராக்களையும் ஓதி வாருங்கள். ஏனெனில் அவை மறுமை நாளில் நிழல் தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும். அல்பகரா அத்தியாயத்தை ஓதிவாருங்கள். அதைக் கையாள்வது வளம் சேர்க்கும். அதைக் கை விடுவது இழப்பைத்தரும். இந்த சூரத்திற்கு முன் சூனியக்காரர்கள் செயலிழந்து போவார்கள்.
அறிவிப்பவர் :- அபூ உமாமா அல்பாஹிலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1910
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَجِيءُ الْقُرْآنُ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُ يَا رَبِّ حَلِّهِ فَيُلْبَسُ تَاجَ الْكَرَامَةِ ثُمَّ يَقُولُ يَا رَبِّ زِدْهُ فَيُلْبَسُ حُلَّةَ الْكَرَامَةِ، ثُمَّ يَقُولُ يَا رَبِّ ارْضَ عَنْهُ، فَيَرْضَى عَنْهُ فَيُقَالُ لَهُ اقْرَأْ وَارْقَ وَيُزَادُ بِكُلِّ آيَةٍ حَسَنَةً
மறுமை நாளில் திருக்குர்ஆன் வரும். அச்சமயம் அது, இறைவா! இந்த (நபருக்கு) ஆடை அணிவிப்பாயாக! என்று கூறும். உடனே அவருக்கு கண்ணியமான கிரீடம் அணிவிக்கப்படும். மீண்டும் என் இரட்சகனே! இவருக்கு மேலும் வழங்குவாயாக! என்று கூறும். உடனே அவருக்கு கண்ணியமான ஆடை அணிவிக்கப்படும். மீண்டும் அது, இரட்சகனே! இவரை நீ பொருந்திக் கொள்வாயாக! என்று கூறும், அப்போது நீர் ஓதுவீராக! உயர்ந்து செல்வீராக! ஒவ்வொரு வசனத்திற்கும் ஒரு நன்மை அதிகரிக்கப்படும் என்று அவருக்குக் கூறப்படும்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 2915
இறைவேதம் திருக்குர்ஆனை நல்ல முறையில் ஓதி வாருங்கள், அது மறுமை நாளில் ஷபாஅத் பரிந்துரை செய்வது மட்டுமின்றி அது மறுமை நாளில் நிழல் தரும், அவைகளின் பரிந்துரை மூலம் கண்ணியமான கிரீடம் அணிவிக்கப்படும், இன்னும் சில ஹதீஸ்களில் திருக்குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழ்கள் அவர்களின் குடும்பத்திலுள்ள குறிப்பிட்ட நபர்களுக்காக வேண்டி ஷபாஅத் பரிந்துரை செய்ய முடியும் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்களும் அது அல்லாத சில ஹதீஸ்களும் நமக்கு தெளிவு படுத்துகிறது.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ يَقُولُ الصِّيَامُ أَيْ رَبِّ مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهَوَاتِ بِالنَّهَارِ فَشَفِّعْنِي فِيهِ وَيَقُولُ الْقُرْآنُ مَنَعْتُهُ النَّوْمَ بِاللَّيْلِ فَشَفِّعْنِي فِيهِ قَالَ فَيُشَفَّعَانِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். திருக்குர்ஆன், நோன்பு ஆகிய இரண்டும் மறுமை நாளில் ஓர் அடியாருக்கு ஷபாஅத் பரிந்துரை செய்யும். நோன்பு சொல்லும், இறைவா! நான் அவரை பகல் பொழுதுகளில் அவரது உணவு மற்றும் ஆசாபாசத்தை விட்டும் தடுத்தேன். அவருக்காக ஷபாஅத் பரிந்துரை செய்ய எனக்கு அனுமதி கொடு. குர்ஆன் சொல்லும், ‘நான் இரவில் தூங்குவதை விட்டும் அவரை தடுத்தேன். அவருக்காக ஷபாஅத் பரிந்துரை செய்ய எனக்கு அனுமதி கொடு. அவைகளது பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படும்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மது 6626
🔶திருக்குர்ஆனை நல்ல முறையில் ஓதிக் கொள்ளுங்கள், நோன்பை நல்ல முறையில் பிடித்துக் கொள்ளுங்கள், அது அல்லாத சாலிஹான அமல்களை நல்ல முறையில் செய்து வாருங்கள். அவைகள் மறுமையில் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு ஷபாஅத் பரிந்துரை செய்யும் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
🔶குறிப்பு :- ஷபாஅத் குப்ரா எனும் மாபெரும் ஷபாஅத் பரிந்துரை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே பிரயோத்திகமாக கொடுக்கப்பட்டது. இந்த ஷபாஅத் முடிய முன்னர் எந்த ஒரு நபியோ எந்த ஒரு ரஸூலோ எந்த ஒரு ஸாலிஹான அமல்களோ இறைவனிடம் ஷபாஅத் பரிந்துரை செய்ய முடியாது. ஷபாஅத் குப்ரா எனும் மாபெரும் ஷபாஅத் பரிந்துரை முடிந்த பின்னர் தான் ஷபாஅத் ஷுஹ்ரா எனும் சிறிய பரிந்துரை ஏனைய நபிமார்கள், நல்லடியார்கள், மலக்குகள், அது அல்லாத சாலிஹான நல்லமல்கள் என்பனவும் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு மறுமை நாளில் ஷபாஅத் பரிந்துரை செய்யும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
Facebook :- யா சைஹு யா ரிபாயி
Facebook pages manager :- அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்