14) மறுமை நாளில் பூரண சந்திரனை பார்ப்பது போன்று அல்லாஹ்வை பார்க்க முடியுமா?

172

மறுமை நாளில் பூரண சந்திரனை பார்ப்பது போன்று அல்லாஹ்வை பார்க்க முடியுமா?

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّکُمْ مُّلٰقُوْهُ وَ بَشِّرِ الْمُؤْمِنِيْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!.

சூரா பகரா ஆயத் 223

 

♦️அல்லாஹ்வை மறுமை நாளில் சந்திப்போம் என்று திருக்குர்ஆன் உருதியாகக் கூறுகிறது. அவனை எந்த அமைப்பில் சந்திப்போம்? எவ்வாறு சந்திப்போம் என்ற கேள்விகளுக்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்கள் பதிலாக அமைந்துள்ளதை நம்மால் காண முடியும்.

 

عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَخْبَرَهُ أَنَّ نَاسًا قَالُوا لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَارَسُولَ اللَّهِ هَلْ نَرَى رَبَّنَا يَوْمَ الْقِيَامَةِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ تُضَارُّونَ فِي رُؤْيَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ ؟ قَالُوا لَا يَا رَسُولَ اللَّهِ قَالَ هَلْ تُضَارُّونَ فِي الشَّمْسِ لَيْسَ دُونَهَا سَحَابٌ؟ قَالُوا لَا يَارَسُولَ اللَّهِ قَالَ : فَإِنَّكُمْ تَرَوْنَهُ

 

மக்களில் சிலர் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ”யா ரஸூலல்லாஹ்! மறுமையில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று கேட்டார்கள். அதற்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”பௌர்ணமி இரவில் முழு சந்திரனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?” என்று கேட்டார்கள். மக்கள், ”(சிரமம்) இல்லை; யா ரஸூலல்லாஹ்!” என்று பதிலளித்தார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?” என்று கேட்டார்கள். மக்கள், ”(சிரமம்) இல்லை; யா ரஸூலல்லாஹ்!” என்று பதிலளித்தார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இவ்வாறுதான் (மறுமையில்) இறைவனை நீங்கள் காண்பீர்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 299

 

♦️சூரிய சந்திரனை பார்ப்பது போன்று மறுமையில் அல்லாஹ்வை காண்பீர்கள் என்று குறிப்பிட்டு கூறப்படுவதன் காரணம். சூரிய சந்திர உருவத்தில் அல்லாஹ் இருப்பான் என்பதற்காக அல்ல. இவ்வுலகில் உள்ள மனிதர்கள் எந்த சிரமமும் இல்லாமல் பார்க்கக்கூடிய ஒன்று தான் மேகங்கள் மறைக்காத சூரியனும் பௌர்ணமி நேரத்தில் தோன்றும் சந்திரனுமாகும். எனவே இவைகளை காண்பது போன்று மறுமை நாளில் எந்த சிரமமும் இன்றி அல்லாஹ்வை நீங்கள் காண்பீர்கள் என்ற கருத்தை மேற்கூறப்பட்ட ஹதீஸ் நமக்கு தெறிவு படுத்துகிறது.

 

காண்பீர்கள் என்பது ஏதாவது ஒரு தோற்றத்தை அதாவது ரூபத்தை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. ரூபம் என்பது உருவ வடிவில் உள்ளது போன்று. உருவம் அற்ற வடிவிலும் உள்ளது.

 

♦️உதாரணமாக :- இந்த மனிதரின் சுய ரூபம் இப்போது தான் விளங்குகிறது என்று பிரச்சினை வரும் போதும் சன்டை பிடிக்கும் போதும் நம்மில் பலன்கள் கூறுவதுண்டு. இங்கு ரூபம் என்று கூறியது அவருடைய உடல் ரூபத்தை அல்ல. அதற்கு மாற்றமாக அவருடைய செயல் வடிவிலுள்ள சுய ரூபம் அதாவது அவனுடைய பண்புகளில் இருந்து வெளிப்பட்ட உருவம் அற்ற ரூபத்தை குறிக்கும். இது போண்று தான் மறுமை நாளில் அல்லாஹ்வின் பண்புகளில் இருந்து வெழிப்படும் உருவம் அற்ற ரூபத்தை முஃமீன்கள் அனைவரும் காண்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.