15) அல்லாஹ்வின் உருவம் ரூபம் என்பதற்கு அல்லாஹ்வின் பண்பு என்று பொருள்படுமா?

148

அல்லாஹ்வின் உருவம் ரூபம் என்பதற்கு அல்லாஹ்வின் பண்பு என்று பொருள்படுமா?

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَجْمَعُ اللَّهُ النَّاسَ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُ مَنْ كَانَ يَعْبُدُ شَيْئًا فَلْيَتَّبِعْهُ فَيَتَّبِعُ مَنْ كَانَ يَعْبُدُ الشَّمْسَ الشَّمْسَ وَيَتَّبِعُ مَنْ كَانَ يَعْبُدُ الْقَمَرَ الْقَمَرَ وَيَتَّبِعُ مَنْ كَانَ يَعْبُدُ الطَّوَاغِيتَ الطَّوَاغِيتَ وَتَبْقَى هَذِهِ الْأُمَّةُ فِيهَا مُنَافِقُوهَا فَيَأْتِيهِمُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى فِي صُورَةٍ غَيْرِ صُورَتِهِ الَّتِي يَعْرِفُونَ فَيَقُولُ أَنَا رَبُّكُمْ فَيَقُولُونَ نَعُوذُ بِاللَّهِ مِنْكَ هَذَا مَكَانُنَا حَتَّى يَأْتِيَنَا رَبُّنَا فَإِذَا جَاءَ رَبُّنَا عَرَفْنَاهُ فَيَأْتِيهِمُ اللَّهُ تَعَالَى فِي صُورَتِهِ الَّتِي يَعْرِفُونَ فَيَقُولُ أَنَا رَبُّكُمْ  فَيَقُولُونَ : أَنْتَ رَبُّنَا فَيَتَّبِعُونَهُ

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் மறுமை நாளில் மனிதர்களை ஒன்று கூட்டி, ”(உலகத்தில்) யார் எதை வழிபட்டுக் கொண்டிருந்தாரோ அவர் அதைப் பின்தொடர்ந்து செல்லட்டும்” என்று கூறுவான். ஆகவே, சூரியனை வழிபட்டுக்கொண்டிருந்தவர்கள் சூரியனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். சந்திரனை வழிபட்டுக் கொண்டிருந்தவர்கள் சந்திரனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். ஷைத்தான்(களான தீயசக்தி)களை வழிபட்டுக்கொண்டிருந்தவர்கள் அவற்றைப் பின்தொடர்ந்து செல்வார்கள். இறுதியில் இந்தச் சமுதாயத்தார் மட்டும் எஞ்சியிருப்பார்கள். அவர்களிடையே நயவஞ்சகர்களும் இருப்பார்கள். அப்போது இறைவன் அவர்களிடம், அவர்கள் அறிந்திராத ஒரு ரூபத்தில் வந்து, ”நான் உங்கள் இறைவன்” என்பான். உடனே அவர்கள், ”உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக் கோருகிறோம். எங்கள் இறைவன் எங்களிடம் வரும்வரை நாங்கள் இங்கேயே இருப்போம். எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம்” என்பர். அப்போது அவர்கள் அறிந்துகொள்ளும் ரூபத்தில் அவர்களிடம் இறைவன் வந்து, ”நான் உங்கள் இறைவன்” என்பான். அதற்கு அவர்கள், ”நீயே எங்கள் இறைவன்” என்று கூறியவாறு அவனைப் பின் தொடர்ந்து செல்வார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 299

 

மறுமை நாளில் அல்லாஹ் இரு ரூபத்தில் வருவான் என்றும். மக்கள் அறியாத ஒரு ரூபத்தில் அல்லாஹ் வரும் போது. அந்த மக்கள் நீ எங்கள் இறைவன் கிடையாது என்று உருதியாக கூறினார்கள் என்றும். மக்கள் அறிந்து கொள்ளும் மற்ற ரூபத்தில் அல்லாஹ் வரும் போது. அந்த மக்கள் நீயே எங்கள் இறைவன் என்று உருதியாகக் கூறினார்கள் என்று மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

♦️அல்லாஹ்வின் உருவம், ரூபத்தை இந்த உலகில் வாழ்ந்து மறைந்த. வாழ்ந்து மறையப்போகிற எந்த விதமான மக்களும் காணாத போது. மறுமை நாளில் மக்கள் அறிந்து கொள்ளும் ரூபத்தில் அல்லாஹ் வருவான் என்றும் அவன் வரும் போது அல்லாஹ்வின் ரூபத்தை நாங்கள் அறிந்து கொள்வோம் என்றும் மக்கள் எதனைக் காரணமாக வைத்து கூறினார்கள் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.

 

♦️அல்லாஹ்வின் ரூபம் என்பதற்கு அல்லாஹ்வின் பண்புகள் என்று பொருள் கொள்ள வேண்டும். காரணம் அல்லாஹ்வின் பண்புகளை தான் முஃமீன்களான மக்கள் அறிந்து வைத்துள்ளார்களே தவிர. மாற்று மதத்தவர்கள் போன்று பல விதமான விக்ரக சிலைகளின் ரூபத்தை காஃபிர்கள் அறிந்து வைத்திருப்பது போன்று முஃமீன்களான மக்கள் அல்லாஹ்வின் ரூபம் இவ்வாறு தான் என்று ஓர் வடிவ அமைப்பை அறிந்து வைக்கவில்லை. இவ்வாறு அறிந்து வைப்பார்கள் சிலை வணங்கிகள் உருவ வணங்கிகள் என்று இஸ்லாம் பறைசாற்றுகிறது. ஆகவே அல்லாஹ்வின் ரூபம் என்பதற்கு அல்லாஹ்வின் பண்புகளிலிருந்து வெளிப்படும் உருவம் அற்ற சுய ரூபத்தை குறிக்கும் என்று மாற்றுப் பொருள் வழிந்துரை அர்த்தம் செய்வது அவசியமாகும்.

 

♦️உருவம், வடிவம், தோற்றம் இவைகளை நாம் கண்களால் பார்க்க முடியும். அதுபோல இன்னும் சில உருவம், வடிவம், தோற்றம் உள்ளது. இவைகளை நம்முடைய கண்களால் பார்க்க முடியாது. ஆனால் உள்ளத்தால் உணர்ந்து கொள்ள முடியும். உதாரணமாக :- கணவில் வெவ்வேறு கோணங்களில் உண்டான உருவத்தை நாம் உள்ளத்தால் உணர்ந்து பார்க்கிறோம். அதற்கு நிஜ உருவம் இல்லை. அது போன்று சூரிய ஒளி அது அல்லாத வெவ்வேறு ஒளிக்கதிர்களை நாம் பார்க்கிறோம். அதற்கு உருவம் இல்லை. அது போன்று நாம் காணல் நீரை பார்க்கிறோம். ஆனால் அதற்கு உருவம் இல்லை. அது போன்று காற்று வீசுவதை பார்க்கிறோம். ஆனால் அதற்கு உருவம் இல்லை. அது போன்று தான் மறுமை நாளில் முஃமீன்களான மக்கள் அல்லாஹ்வை பார்ப்பார்கள். உருவம் அற்ற அவனின் ரூபம் பண்புகளை அவர்கள் பார்ப்பார்கள் என்ற நற்செய்திகளை நாம் ஞாபகத்தில் வைத்திருப்பது அவசியமாகும்.

 

♦️குறிப்பு :- மறுமையில் நாம் அல்லாஹ்வின் பண்புகளை பார்ப்போம் என்று திருக்குர்ஆன் வசனங்கள். 2:46, 2:223, 2:249, 3:77, 6:31, 6:154, 10:7, 10:11, 10:15, 10:45, 11:29, 13:2, 18:105, 18:110, 29:5, 29:23, 30:8, 32:10, 33:44, 41:54, 75:23, அதே போன்று மறுமையில் நாம் அல்லாஹ்வின் பண்புகளை காண முடியும் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கூறியுள்ள பல நபிமொழிகள் புஹாரி 554, 573, 806, 4581, 4851, 6574,7434, 7435, 7436, 7438, 7440 முஸ்லிம் 297, 299, 301 போன்ற பல ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

♦️எனவே மேற்கூறிய ஹதீஸிற்கு சரியான அர்த்தம் :- அல்லாஹ்விற்கு பல பண்புகள் உள்ளது. மறுமை நாளில் மக்கள் அறிந்து கொள்ள முடியாத பண்புகளில் இறைவன் வரும் போது அவர்கள் அல்லாஹ்வை அறிந்து கொள்ள மாட்டார்கள். மக்கள் அறிந்து கொள்ளும் பண்புகளில் இறைவன் வரும் போது அவர்கள் அல்லாஹ்வை அறிந்து கொள்வார்கள். அந்த பண்புகளை வைத்து அடையாளம் கண்டு கொள்வார்கள் என்று மாற்றுப் பொருள் வழிந்தது அர்த்தம் செய்வது அவசியமாகும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.