15) நபி முஹம்மத் ﷺ அவர்களின் கண்கள்
நபி முஹம்மத் ﷺ அவர்களின் கண்கள்
مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغٰى
குர்ஆன் கூறுகிறது (நபியின்) பார்வை விலகவும் இல்லை; கடக்கவும் இல்லை!
சூரா அந்நஜ்ம் ஆயத் 17
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ هَلْ تَرَوْنَ قِبْلَتِي هَا هُنَا فَوَاللَّهِ مَا يَخْفَى عَلَيَّ خُشُوعُكُمْ وَلَا رُكُوعُكُمْ إِنِّي لَأَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். “நான் கிப்லாத் திசையில் மட்டும் பார்க்கிறேன் என்று நீங்கள் கருதுகிறீர்களா? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் அடக்கமாக இருப்பதும் உங்களின் ருகூவும் எனக்குத் தெரியாமலிருப்பதில்லை. நிச்சயமாக என்னுடைய முதுகுக்குப் பின்புறம் உங்களை நான் பார்க்கிறேன்.
அறிவிப்பவர் :- அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 418, 741 முஸ்லிம் 424 அஹ்மது 8024
عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَشْكَلَ الْعَيْنِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண் விரிந்த கண்ணாக இருந்தது.
قَالَ قُلْتُ لِسِمَاكٍ مَا أَشْكَلُ الْعَيْنِ؟ قَالَ طَوِيلُ شَقِّ الْعَيْنِ
நான் சிமாக் ரஹ்மத்துல்லாஹ் அவர்களிடம் விரிந்த கண் (அஷ்கலுல் ஐன்) என்றால் என்ன? என்று கேட்டதற்கு நீளமான கண் பிளவு என்றார்கள்.
அறிவிப்பவர் :- ஜாபிர் இப்னு ஸம்ரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2339 திர்மிதி 3646, 3647 அஹ்மது 20912, 20986
عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ فِي سَاقَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حُمُوشَةٌ وَكَانَ لَا يَضْحَكُ إِلَّا تَبَسُّمًا وَكُنْتُ إِذَا نَظَرْتُ إِلَيْهِ قُلْتُ أَكْحَلُ الْعَيْنَيْنِ وَلَيْسَ بِأَكْحَلَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மெல்லிய கெண்டைக்கால் உடையவர்கள். அவர்களது சிரிப்பு புன்முறுவலாகத்தான் இருக்கும். அவர்களைப் பார்த்தால் கண்ணில் ‘சுர்மா’ இட்டதைப் போல் இருக்கும். ஆனால், சுர்மா இடவில்லை.
அறிவிப்பவர் :- ஜாபிர் இப்னு ஸம்ரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 3645 அஹ்மது 20917
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்