15) நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்

298

15) நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்

 

♦️பெயர் :- மூஸா (மோசே)

 

♦️பிறப்பு :- கிமு. 1527 ரமலான் பிறை 22 வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பிறந்தார்கள்.

 

♦️பிறந்த இடம் :- கிப்திகள் மற்றும் பனூ இஸ்ரவேலர்கள் என்ற இரு சமூகத்தார் வசித்து வந்த எகிப்து நாட்டில் பிறந்தார்கள்.

குறிப்பு :- அந்த காலகட்டத்தில் ஆண் குழந்தைகள் கொலை செய்யப்பட்டு வந்தது. அச்சமயம் யூகானிதா கிஜ்பீலு என்ற தச்சரை அணுகி ஒரு பலகை பெட்டியை தயார் செய்து அதில் குழந்தையை வைத்து நைல்நதியில் விட்டாள். அந்த பெட்டி ஆசியா அம்மையாரின் கைகளில் கிடைத்தது. அந்த குழந்தைதான் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆவார்கள்.

 

♦️தந்தை பெயர் :- இம்ரான்

 

♦️தாய் பெயர் :- யூகானிதாா

 

♦️தொழில் :- ஆடு மேய்த்தல்்

 

♦️சகோதரி :- மர்யம்

 

♦️சகோதரர் :- ஹாரூன்

 

♦️அத்தை :- ஆசியா அம்மையார்

 

♦️சகோதரர் மகன் :- யூஷஃ இப்னு நூன்

 

♦️அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசானின் பெயர் :- ஹிள்ரு

 

♦️நாட்டின் கொடிய அரசன் :- பிர்அவ்ன் ஆவான். இவன் கிப்திகளின் வம்சத்தைச் சேர்ந்தவன். பிர்அவ்ன் என்றால் சூரிய புத்திரன் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. இவன் மரணிக்கும் போது அவனுக்கு வயது 600 ஆகும்.

 

♦️குழப்பம் :- கிப்தி இனத்தைச் சார்ந்த கலானுக்கும், பனீ இஸ்ராயீல் இனத்தைச் சார்ந்த ஸாமிரிக்கும் சன்டை போனது. இடையில் ஸாமிரி வீதி வழியாக வந்த மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் உதவி கேட்ட கலானை நோக்கி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு குத்து விட்டார்கள். அந்த இடத்திலேயே அவன் மரணித்து விட்டான். இதனால் இனப் பிரச்சினை வந்தது. அதிக குழப்பங்கள் ஏற்பட்டன. இந்த நிகழ்வு நடைபெறும் போது அவர்களின் வயது 20 ஆகும்.

 

♦️உத்தரவு :- நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ்வின் உத்தரவு. மூஸாவே! நீர் ஊரை விட்டு வெளியேறி மத்யன் செல்லுமாறு கட்டளை வந்தது. உடனே எகிப்து நாட்டிலிருந்து மத்யனுக்கு புறப்பட்டார்கள். ஒன்பது நாள் வரைக்கும் பயணம் நீடித்தது.

 

♦️மனைவியர்:- ஸபூரா, ஜெப்ஸியா, துஸ்மா

 

♦️மாமனார் :- ஸுஹைப்

 

♦️தூர்சீனா மலை :- ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தங்கள் பிரதிநிதியாக நியமித்து விட்டு தூர்சீனா மலை சென்று அல்லாஹ்வுடன் நாற்பது நாட்கள் வரை நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

 

♦️ஆயுட்காலம் :- நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுமார் 120 அல்லது 150 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்கள்.

 

♦️மரணம் :- கிமு 1407

 

♦️கப்ரு :- நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் பலஸ்தீன் நாட்டிலுள்ள ஜருஸ்ஸலாம்” அரீஹா என்ற பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளது.

குறிப்பு :- மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அடைக்கப்பட்டிருக்கும் இடத்தை கஷிபுல் அஹ்மர் என்ற இடம் என்று இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டு கூறியுள்ளார்கள்.

 

♦️குர்ஆன் :- நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயர் குர்ஆனில் 136 இடங்களில் இடம் பெற்றுள்ளது.

 

WORLD ISLAM YSYR
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

 

Leave A Reply

Your email address will not be published.