17) நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை தரமட்டம் ஆக்குவது ஹராமாகும்

298

17) நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை தரமட்டம் ஆக்குவது ஹராமாகும்

 

📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عَنْ أَبِي الْهَيَّاجِ الْأَسَدِيِّ قَالَ قَالَ لِي عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ أَلَا أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ لَا تَدَعَ تِمْثَالًا إِلَّا طَمَسْتَهُ وَلَا قَبْرًا مُشْرِفًا إِلَّا سَوَّيْتَهُ

 

அலி இப்னு அபீதாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எனக்கு கூறினார்கள். என்னை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுப்பிய விடயத்தின் மீது நான் உன்னை அனுப்புகிறேன். விக்கிரகங்களை அழிக்காமல் விட்டு விடாதே (ஒட்டகத்திமிலை விடவும் அதிகளவில்) உயர்ந்துள்ள (நபிமார்கள் நல்லடியார்களின்) கப்றுகளை ஒழுங்கு படுத்தாமல் விட்டு விடாதே! என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- அபுல் ஹய்யாஜ் அல் அஸ்தீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 968, அபூ தாவூத் 3218 திர்மிதி 1049, நஸாயி 2031 அஹ்மது 657, 683, 741, 881, 889

 

عَنْ ثُمَامَةَ بْنَ شُفَيٍّ حَدَّثَهُ قَالَ كُنَّا مَعَ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ بِأَرْضِ الرُّومِ بِرُودِسَ، فَتُوُفِّيَ صَاحِبٌ لَنَا فَأَمَرَ فَضَالَةُ بْنُ عُبَيْدٍ بِقَبْرِهِ فَسُوِّيَ ثُمَّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُ بِتَسْوِيَتِهَا

 

நாங்கள் ஃபளாலா பின் உபைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ரோம் நாட்டிலுள்ள “ரோடிஸ்” தீவில் இருந்தோம். அங்கு எங்கள் நண்பர் ஒருவர் மரணித்து விட்டார். அப்போது ஃபளாலா பின் உபைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அவரது கப்ரை சீராக்கும் படி உத்தவிட்டார்கள். பின்னர் ” இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் கப்ரை ஒழுங்கு படுத்தும் படி உத்தரவிட்டதை நான் கேட்டுள்ளேன் எனக் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- ஸுமாமா இப்னு ஷுஃபை ரஹ்மத்துல்லாஹ். ஆதாரம் முஸ்லிம் 868, அபூ தாவூத் 3219

 

♦️இந்த ஹதீஸ்களில் ஷவ்வா என்ற அரபி சொல் இடம் பெற்றுள்ளது. இதற்கு தரைமட்டம் ஆக்குங்கள் என்ற அர்த்தம் திருக்குர்ஆன் ஹதீஸிலும் அரபு இலக்கிய கிதாபுகளிலும் இடம் பெறவில்லை. இன்னும் சிலர்கள் சமப்படுத்துதல் என்ற அர்த்தம் உள்ளது தானே எனக் கூறுகின்றனர்.

 

♦️சமம் என்றால் எது வரை என்ற கேள்வி எழும்? உதாரணமாக. பூமி வரை சமப்படுத்துங்கள் என்றால் இங்கு தரைமட்டம் என்ற அர்த்தம் கொடுப்பதில் குற்றம் இல்லை. ஒருவர் வீடு கட்டி விட்டு மேற்பகுதியை சமப்படுத்துங்கள் என்று கூறினால் வீட்டின் மேல் பகுதியை மட்டுமே சமப்படுத்த வேண்டுமே தவிர. தவ்ஹீத் ஜமாஅதினர்கள் போன்று வீட்டை முழுமையாக தரைமட்டம் ஆக்கிவிடக்கூடாது மேலும் சிங்கள மக்கள் புத்தர் சிலை வைக்க மலை மேற்பகுதியை சமப்படுத்துங்கள் என்று கூறினால் மலை மேற்பகுதியை சமப்படுத்த வேண்டுமே தவிர தவ்ஹீத் ஜமாஅத்தினர்கள் போன்று மலையை முழுமையாக தரைமட்டம் ஆக்கிவிடக்கூடாது என்ற கருத்தை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

♦️மேற்கூறிய ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள ஷவ்வா என்ற அரபி சொல்லுக்கு பூமி வரை சம்படுத்துதல் என்ற அர்த்தம் கிடையாது. தவ்ஹீத் ஜமாஅத்திர்கள் கூறுவது போன்று கப்ருகளை தரையில் இருந்து உயர்த்தக் கூடாது. அதனை தரைமட்டம் ஆக்குவது தான் அர்த்தம் என்றால். நாம் இதற்கு பிறகு முஸ்லிம்களின் கப்ருஸ்தானங்கள் இருக்கும் இடங்களை மய்யவாடி எனக் கூறாமல். அதற்கு மாற்றமாக விளையாட்டு மைதானங்கள். வெட்டவெளி என்று தான் கூறவேண்டும்.

 

♦️காரணம் பொது மய்யவாடிகளிலுள்ள கப்ருகள் அனைத்தும் தரைமட்டமாக இருந்தால் அங்கு கப்ருகள் இருக்கிறது என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது? இந்த இடத்தில் கப்ரு உள்ளது அதற்கு அருகில் கப்ரு இல்லை என்று எவ்வாறு அடையாளம் காண்பது? மேலும் பொது மய்யவாடிகளும் விளையாட்டு மைதானங்கள் போன்று தரைமட்டமாக இருந்தால் அங்கு சென்று கப்ருகளை அடையாளம் கண்டு ஸியாரத் செய்ய முடியாது. அதற்கு மாற்றமாக கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை தான் விளையாடி விட்டு வரவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அல்லாஹ் இது போன்ற மடத்தனமான நச்சு கருத்துக்களை விட்டும் முஸ்லிம்களை பாதுகாப்பானாக. ஆமீன்

 

♦️சற்று சிந்தித்துப் பாருங்கள் கப்ருகளை தரைமட்டம் ஆக்குவது நபிவழி என்று தவறாகக் கூறும் ஷவூதி அரேபியா, கட்டார், குவைத், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வாழும் வஹாபிஷ தவ்ஹீத் ஜமாஅத்தினர்களின் பொது மய்யவாடிகளுக்கு சென்று பார்வை இடுங்கள். ஜனாஸாவை அடக்கம் செய்து விட்டு தரையில் இருந்து ஒரு சான் அளவு கப்ரை உயர்த்துவார்கள். அதற்கு பின்னர் தலை மாட்டிலும் கால் மாட்டிலும் கல் அல்லது மீஷான் பலகையை அடையாளமாக நட்டுவதை நம்மால் காண முடிகிறது. தவ்ஹீத் சகோதரர்களே! உங்கள் ஜமாஅத்தினர்கள் ஜனாஸாக்களை அடக்கம் செய்து விட்டு தரையில் இருந்து ஒரு சான் அளவு கப்ரை மண்ணால் உயர்த்துவதற்கு பெயர்தான் தரைமட்டம் ஆக்குவதா? என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். நீங்களாவது உங்கள் உலமாக்களுக்கு படித்து கொடுப்பீர்கள் என்று நினைக்கிறோம்.

 

குறிப்பு :- மேற்கூறிய ஹதீஸில் உயரமான கப்ருகளை ஒழுங்கு படுத்துங்கள் என்ற அர்த்தம் கொடுக்க வேண்டுமே தவிர சமப்படுத்துங்கள், தரைமட்டம் ஆக்குங்கள் என்ற தவறான அர்த்தங்களை கொடுக்க கூடாது. மேலும் இஸ்லாத்தின் பார்வையில் முஸ்லிம் பொது மய்யவாடிகளாக இருந்தால்! அங்குள்ள பொது மக்களின் கப்ருகளை கற்களால் கட்டுவது கூடாது. அவைகள் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அடையளத்திற்காக வேண்டி பொது மய்யவாடிகளில் உள்ள கப்ருகளை தரையில் இருந்து ஒரு சான் அளவு மண்ணால் உயர்த்துவது அவசியமாகும். நபிமார்கள் நல்லடியார்களின் கப்ரு தர்ஹாக்களாக இருந்தால் அவைகளை அடையத்தற்காக வேண்டி ஒட்டகத்திமிலை போன்ற ஓர் அளவு கட்டுவதில் குற்றமில்லை. மேலும் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை தரைமட்டம் ஆக்குவது இஸ்லாத்தின் பார்வையில் ஹராம் தடை செய்யப்பட்டுள்ளது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.