17) நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்

94

17) நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்

 

♦️பெயர் :- தாவூத் (டேவிட்)

 

♦️பிறப்பு :- கிமு. 1041

 

♦️தந்தை பெயர் :- அய்ஷா

 

♦️தலைமுறை :- நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பின் 569 ஆண்டுகள் கழித்து பிறந்தவர்கள். மேலும் அவர்கள் யகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் 9 ஆவது தலைமுறையில் வந்தவர்கள்.

 

♦️தொழில் :- இரும்பு தொழில், தையல் தொழில், ஆடு மேய்த்தல்

 

♦️நல்ல அரசன் :- நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நல்ல அரசனாக தாலூத் என்பவர் தலைமை தாங்கினார்.

 

♦️கொடிய அரசன் :- நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் கெட்ட அரசனாக ஜாலூத் என்பவன் தலைமை தாங்கினான்.

 

♦️கொலை :- நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூன்று கற்களைக் கொண்டு ஜாலூத் என்பவனை கொண்டார்கள்.

 

♦️மனைவியர் :- மீகால், மஅகத், மஜீசுன், அபீதாலு, அபீஜாபிலு, கர்மாலியது

 

♦️பிள்ளைகள் :- சுலைமான், தானியால், மற்றும் பலர்

 

♦️மாமனார் :- தாலூத்

 

♦️ஆட்சி :- அரசர் தாலூத் அவர்களின் மரணத்திற்கு பின்னர். தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முழு இராஜ்ஜியத்திற்கும் அதிபதியாக மாறினார்கள், மேலும் இஸ்ரவேலர்களின் தலைவரானார்கள். பனீ இஸ்ரவேலர்களில் ஒரே சமயத்தில் யாரும் அரசராகவும், நபியாகவும் இருந்ததில்லை.

 

♦️வேதம் :- ஜபூர்

 

♦️வழிபாடு தினம் :- நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் பனீ இஸ்ரவேலர்களுக்கு வெள்ளிக்கிழமையை வணங்கி வழிபடக்கூடிய தினமாக ஆக்கப்பட்டிருந்தது.

 

♦️அத்துமீறல் :- பனீ இஸ்ரவேலர்கள் வெள்ளிக்கிழமையை விட்டு விட்டு சனிக்கிழமையைத் தங்கள் வணக்கத்தினமாக மாற்றிக் கொண்டனர். சனிக்கிழமைகளில் மீன் பிடிப்பதையும், உலக சம்பந்தமான காரியங்களில் ஈடுபடுவதையும் அல்லாஹ் அவர்களுக்கு தடுத்திருந்தான். அதனையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.

 

♦️தன்டனை :- ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை மீன் பிடிக்க முதலாம் வகையை சார்ந்தவர்கள் வராது போகவே, அவர்களை பார்க்க சென்ற மற்றப் பிரிவினர் அவர்களில் வயதானவர்களை பன்றிகளாகவும் வாலிபர்களை குரங்குகளாகவும் மாறியிருக்க கண்டனர். இவ்வாறு இவர்கள் மூன்று தினங்கள் இருந்து மரணித்து விட்டனர். இது சுமார் 70000 பேர்கள் என்று சரித்திரம் கூறுகிறது.

 

♦️ஆயுட்காலம் :- தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுமார் 170 அல்லது 202 வருடங்கள் வாழ்ந்தார்கள்.

 

♦️மரணம் :- கிமு. 0971

 

♦️கப்ரு :- நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் பலஸ்தீனம் என்ற நாட்டிலுள்ள ஜெருசலேம் சீயோன் மலை பகுதியில் அமைந்துள்ளது.

 

♦️குர்ஆன் :- நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயர் குர்ஆனில் 16 இடங்களில் இடம் பெற்றுள்ளது.

 

WORLD ISLAM YSYR
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.