17) நபி முஹம்மத் ﷺ அவர்களின் பற்கள்
நபி முஹம்மத் ﷺ அவர்களின் பற்கள்
عَنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَقُول أَفْلَجَ الثَّنِيَّتَيْنِ إِذَا تَكَلَّمَ رُئِيَ كَالنُّورِ يَخْرُجُ مِنْ بَيْنِ ثَنَايَاهُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்பற்கள், இடைவெளிவிட்டதாகவும் அவர்கள் பேசினால் அப்பற்களுக்கு இடையிலிருந்து ஓர் ஒளி வெளிப்படுவது போன்றிருக்கும்.
அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தாரமீ 59
عَنْ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ عَنْ أَبِيهِ قَالَ سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْها قُلْتُ بِأَيِّ شَيْءٍ كَانَ يَبْدَأُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ بَيْتَهُ قَالَتْ بِالسِّوَاكِ
நான் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தால் அவர்கள் செய்யத் தொடங்கும் முதற்செயல் எது? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், பல் துலக்குவது என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் :- மிக்தாம் இப்னு ஷுரைஹ் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 253 அபூதாவூத் 51 இப்னு மாஜா 290
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்