18) நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை வணக்கஸ்தலமாக எடுத்துக் கொள்ளலாமா?

301

18) நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை வணக்கஸ்தலமாக எடுத்துக் கொள்ளலாமா?

 

📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَعْنَةُ اللَّهِ عَلَى الْيَهُودِ وَالنَّصَارَى اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ يُحَذِّرُ مَا صَنَعُوا

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். தங்கள் நபிமார்களின் கப்ருஸ்தானங்களை (மஸ்ஜித்) வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூத கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்’ எனக் கூறி அவர்களின் செய்கை பற்றி எச்சரித்தார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 436

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَاتَلَ اللَّهُ الْيَهُودَ اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். தங்கள் நபிமார்களின் கப்ஸ்தானங்களை (மஸ்ஜித்) வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூதர்களை அல்லாஹ் நாசமாக்குவானாக!.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 437. முஸ்லிம் 530, அபூ தாவூத் 3227, நஸாயி 2047

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ أُمَّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ذَكَرَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَنِيسَةً رَأَتْهَا بِأَرْضِ الْحَبَشَةِ يُقَالُ لَهَا مَارِيَةُ فَذَكَرَتْ لَهُ مَا رَأَتْ فِيهَا مِنَ الصُّوَرِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُولَئِكِ قَوْمٌ إِذَا مَاتَ فِيهِمُ الْعَبْدُ الصَّالِحُ أَوِ الرَّجُلُ الصَّالِحُ، بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا وَصَوَّرُوا فِيهِ تِلْكِ الصُّوَرَ، أُولَئِكِ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللَّهِ

 

உம்முஸலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அபீ ஸீனியாவில் தாம் கண்ட கோவிலைப் பற்றி இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தெரிவித்தார்கள். அது ‘மாரியா’ என்று சொல்லப்படுகிறது. அதில் கண்ட உருவங்களையும் உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் குறிப்பிட்டார்கள். அப்போது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ‘அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விட்டால் அவரின் கப்ருஸ்தானத்தை (மஸ்ஜித்) வணக்கத்தலாமாக அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவார்கள்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 434. 427, 1341, 3873, முஸ்லிம் 528, நஸாயி 704, அஹ்மது 24252

 

நபிமார்கள் நல்லடியார்களின் கப்ரு தர்ஹாக்களை (மஸ்ஜித்) வணக்கஸ்தலமாக எடுத்துக் கொண்ட யூத கிறிஸ்தவர்கள் பற்றிய செய்திகள் இன்னும் பல ஹதீஸ் கிரந்தங்களில் புஹாரி 435, 1330, 1390, 3453, 4441, 4443, 5815 முஸ்லிம் 529, 531, 532 நஸாயி 703, 2046, 1443 அஹ்மது 1691, 1884, 21604, 21625, 21774, 24060, 24513, 24895, 25129, 25916, 26149, 26178, 26350, 26353 இடம் பெற்றுள்ளது.

 

♦️நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை (மஸ்ஜித்) வணக்கஸ்தலமாக எடுத்துக் கொண்டனர். அவர்களை வணங்கி வழிபட்டனர். வணங்கும் நோக்கில் அதிக உயரமாக கப்ருஸ்தானங்களை கட்டியது மட்டுமின்றி அவர்களின் உருவ சிலைகளையும் அதில் வடிவமைத்த அத்தகைய யூத கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

குறிப்பு :- நபிமார்கள் நல்லடியார்கள் மரணித்த பின்பும் மறைந்த வன்னம் கப்ரு தர்ஹாக்களில் உயிருடன் இருக்கிறார்கள். அத்தகைய நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை (மஸ்ஜித்) வணக்கஸ்தலமாக எடுத்துக் கூடாது. அவர்கள் அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்ற அடியார்கள். அவர்கள் கடவுள் அல்ல. கடவுளின் குமாரர் மகனும் அல்ல. அவர்களுக்கு சுய ஆற்றலும் கிடையாது. அவன் நாடிய பிரகாரம் அவர்கள் செயல் படுவார்கள் என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.