18) நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்
18) நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்
♦️பெயர் :- சுலைமான் (சாலமோன்)
நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஜம்ஷீதூன் என்னும் பெயரும் உண்டு.
♦️பிறப்பு :- கிமு. 0989
♦️தந்தை பெயர் :- தாவூத்
♦️தாய் பெயர் :- மீகால்
♦️மனைவியர் :- ஸபா, நகரத்து அரசி, பல்கீஸ், ராணி, ஷம்ஷாத்
பல்கிஸ் ராணி நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் இருவரும் சுமார் 27 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். அதன்பிறகு, பல்கீஸ் ராணி அவர்கள் ஸிரியா நாட்டிலுள்ள ததத்மூர் என்ற ஊரில் மறைந்து, நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
♦️தொழில் :- அரசாட்சி
நபி தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனாகப் பிறந்த இவர்கள் தனது பதின்மூன்றாவது வயதில் அரியைண ஏறும் பேறு பெற்றவர்கள்.
♦️யுத்தம் :- நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைமறுப்பாளானாகிய பவுனவகு என்ற தீவின் அரசனோடு யுத்தம் செய்து அவனை கொன்று வெற்றி மாலை சூடினார்கள்.
♦️பிள்ளைகள் :- ருஜஹீம், அமீனா
♦️அதிகாரம் :- நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மனிதர்களை கட்டுப்படுத்தக் கூடியவர்களாகவும். ஜின்களையும் பறவைகளையும் கட்டுப்படுத்தக் கூடியவர்களாவும். பறவைகளின் மொழியை அறிந்து கொள்பவர்களாகவும். மேலும் காற்றை அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. அந்தக் காற்று அவர்களைச் சுமந்து அவர்கள் விரும்பும் இடத்திற்கு கொண்டு செல்லும். மேலும் கட்டிடங்களை கட்டும் ஜின்களையும் முத்துக் குளிக்கும் ஜின்களையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. உலகத்தை ஆட்சி செய்த மாபெரும் ஆற்சியாலர்.
குறிப்பு :- நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எப்போதும் மூஸா நபியின் கைத்தடியை தம்முடன் வைத்திருந்தார்கள். தனது வெண்ணிற மேனிக்கு ஏற்றது போல எப்போதும் வெள்ளை நிற ஆடையையே அணிந்திருப்பார்கள்.
♦️பைத்துல் முகத்திஸ் :- அரியணை ஏறி நான்காண்டுகள் கழித்து, தமது தந்தை தாவூது நபி அவர்கள் ஆரம்பித்து வைத்த பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலை நிர்மாணிக்கத் தொடங்கினார்கள்.
♦️பணி :- பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலை கட்ட ஆரம்பித்தார்கள். இதில் ஏழாயிரம்பேர் ஈடுபடுத்தப்பட்டனர். ஏழு வருட காலம் பணி தொடர்ந்து நடந்து வந்தது. பைத்துல் முகத்தஸ் கட்டி முடிய ஒரு வருடத்திற்கு முன் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ்வின் அழைப்பு வந்து விட்டது. சஜ்தைவில் இருந்த படியே அவர்கள் மறைந்தார்கள்.
♦️ஆயுட்காலம் :- நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் 180 ஆண்டுகள் வாழ்ந்து வந்தார்கள்.
♦️மரணம் :- கிமு. 0931
♦️கப்ரு :- நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் பலஸ்தீன் நாட்டிலுள்ள கரக் என்ற ஊரில் அமைந்துள்ளது.
குறிப்பு :- இன்னும் சில அறிஞர்கள் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலிலுள்ள குப்பதுஸ் ஸஹ்றா என்னுமிடத்தில் அமைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
♦️குர்ஆன் :- நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயர் குர்ஆனில் 17 இடங்களில் இடம் பெற்றுள்ளது.
WORLD ISLAM YSYR
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்