18) நபி முஹம்மத் ﷺ அவர்களின் வாய்

137

நபி முஹம்மத் ﷺ அவர்களின் வாய்

 

عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَلِيعَ الْفَمِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாய் விசாலமான வாயாக இருந்தது.

 

قَالَ : قُلْتُ لِسِمَاكٍ مَا ضَلِيعُ الْفَمِ؟ قَالَ عَظِيمُ الْفَمِ

 

நான் சிமாக் ரஹ்மத்துல்லாஹ் அவர்களிடம், விசாலமான வாய் (ளலீஉல் ஃபம்) என்றால் என்ன? என்று கேட்டேன். அவர்கள் (ஓர் அளவான) பெரிய வாய் என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- ஜாபிர் இப்னு ஸம்ரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2339 திர்மிதி 3646, 3647 அஹ்மது 20912, 20986

 

عَنْ ‏حُذَيْفَةَ ‏‏رَضِيَ اللَّهُ عَنْه أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏كَانَ ‏إِذَا قَامَ مِنْ اللَّيْلِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவில் (உறங்கி) எழுந்ததும் பல் துலக்கும் குச்சியால் தம் வாயைத் தேய்த்து (சுத்தம் செய்து) கொள்வார்கள்.

 

அறிவிப்பாளர் :- ஹுதைஃபா இப்னு அல்யமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 255, அபூதாவூத் 55 நஸாயி 1621

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.