19) சுத்தம்
சுத்தம்
சாந்தி சமாதானத்தின் தீர்க்கதரிசி நபி முஹம்மத் ﷺ அவர்கள் இவ்வுல மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்.
சுத்தமாக இருங்கள், உங்கள் சுற்றுச்சூழல்களையும் சுத்தமான வைத்திருங்கள்
عَنْ أَبِي مَالِكٍ الْحَارِثِ بْنِ عَاصِم الأشْعريِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم الطُّهُورُ شَطْرُ الإِيمَان
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். சுத்தம் ஈமானில் பாதியாகும்.
அறிவிப்பவர் :- . ஹாரிஸ் இப்னு ஆஸிம் அல் அஷ் அரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 223 தாரமீ 679 அஹ்மது 22902
கழிப்பறை சென்றவர்கள் தமது வலக் கரத்தால் சுத்தம் செய்ய வேண்டாம்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا شَرِبَ أَحَدُكُمْ فَلَا يَتَنَفَّسْ فِي الْإِنَاءِ وَإِذَا أَتَى الْخَلَاءَ فَلَا يَمَسَّ ذَكَرَهُ بِيَمِينِهِ وَلَا يَتَمَسَّحْ بِيَمِينِهِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ‘உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம். கழிப்பிடம் சென்றால் ஆண்குறியை தமது வலக் கரத்தால் தொடவோ சுத்தம் செய்யவோ வேண்டாம்.
அறிவிப்பவர் :- அபூ கதாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 153 நஸாயி 47 அஹ்மது 19419
கழிப்பறை சென்றால் இடது கரத்தால் சுத்தம் செய்து கொள்ளுங்கள்
عَنْ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَرَجَ لِحَاجَتِهِ أَجِيءُ أَنَا وَغُلَامٌ مَعَنَا إِدَاوَةٌ مِنْ مَاءٍ يَعْنِي يَسْتَنْجِي بِهِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் தேவைக்காக வெளியே சென்றால், (தாங்களின் இயற்கை கடனை நிறைவேற்ற கழிப்பறை சென்றால்) நானும் சிறுவன் ஒருவனும் தண்ணீர் நிரம்பிய சிறிய தோல் பாத்திரம் ஒன்றை எங்களுடன் கொண்டு செல்வோம். அந்தத் தண்ணீர் மூலம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுத்தம் செய்து கொள்வார்கள்.
அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 150 தாரமீ 703 அஹ்மது 13110
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்