19) நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களுக்கு அருகில் மஸ்ஜித் அமைக்கலாமா?

253

19) நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களுக்கு அருகில் மஸ்ஜித் அமைக்கலாமா?

 

📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَأَمَرَ بِبِنَاءِ الْمَسْجِدِ فَقَالَ يَا بَنِي النَّجَّارِ ثَامِنُونِي فَقَالُوا لَا نَطْلُبُ ثَمَنَهُ إِلَّا إِلَى اللَّهِ فَأَمَرَ بِقُبُورِ الْمُشْرِكِينَ فَنُبِشَتْ ثُمَّ بِالْخِرَبِ فَسُوِّيَتْ وَبِالنَّخْلِ فَقُطِعَ فَصَفُّوا النَّخْلَ قِبْلَةَ الْمَسْجِدِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு வந்த போது பள்ளிவாசல் கட்டுமாறு கட்டளையிட்டார்கள்; “பனூ நஜ்ஜார் குலத்தினரே! (உங்கள் இடத்தை) என்னிடம் விலை கூறுங்கள்!” என்று கேட்டார்கள். பனூ நஜ்ஜார் குலத்தினர் “இதற்குரிய விலையை அல்லாஹ்விடமே நாங்கள் எதிர்பார்க்கிறோம்!” என்றனர். (அவ்விடத்திலிருந்த) இணை வைப்பவர்களின் சவக்குழிகளைத் தோண்டுமாறு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள்; அவ்வாறே அவை தோண்டப்பட்டன. அவர்களின் கட்டளைப்படியே பாழடைந்த இடங்கள் சீர் செய்யப்பட்டன; பேரீச்சை மரங்கள் வெட்டப்பட்டன; (வெட்டப்பட்ட) பேரீச்ச மரங்களை பள்ளிவாசலின் கிப்லா திசையில் வரிசையாக நட்டப்பட்டன.

 

அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1868

 

♦️கப்ருஸ்தாணங்களுக்கு மேல் மஸ்ஜித் பள்ளிவாசல்கள் அமைப்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது. அவ்வாறு அமைப்பதாக இருந்தால் கப்ருகளிலுள்ள சடலங்களை அப்புறப்படுத்தி விட்டு மஸ்ஜித் பள்ளிவாசல்கள் அமைக்க வேண்டும் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

فَقَالُوا ابْنُوْا عَلَيْهِمْ بُنْيَانًـا رَبُّهُمْ اَعْلَمُ بِهِمْ قَالَ الَّذِيْنَ غَلَبُوْا عَلٰٓى اَمْرِهِمْ لَـنَـتَّخِذَنَّ عَلَيْهِمْ مَّسْجِدًا‏

 

குர்ஆன் கூறுகிறது இவர்கள் யார் என்பதைப் பற்றித் (தங்களுக்குள்) தர்க்கித்துக் கொண்டு, இவர்களை இறைவன்தான் நன்கறிவான் என்றும், இவர்கள் இருக்கும் இடத்தில் (உயர்ந்த) ஒரு கோபுரத்தை (ஞாபகார்த்தமாக) எழுப்புங்கள் என்றும் கூறினார்கள். இ(வ்விவாதத்)தில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்: “நிச்சயமாக அவர்களுடைய அதாவது (குகைவாசிகளான நல்லடியார்களின் கப்ருகளுக்கு அருகில்) ஒரு மஸ்ஜிதை அமைப்போம் என்று (நல்லோர்கள்) கூறினார்கள்.

 

சூரா கஹ்ப் ஆயத் 21

 

وفي تفسير الكشاف للزمخشري” إن الذين غلبوا على أمرهم من المسلمين وملكهم وكانوا أولى بهم وبالبناء عليهم لنتخذن على باب الكهف مسجدا يصلى فيه المسلمون ويتبركون بمكانهم” ونحو ذلك المعنى في تفسير الجلالين للإمامين جلال الدين السيوطي وجلال الدين المحلى. وقال البغوي في تفسيره ” (إِذْ يَتَنَازَعُونَ بَيْنَهُمْ أَمْرَهُمْ ) قال ابن عباس يتنازعون في البنيان فقال المسلمون نبني عليهم مسجدا يصلى فيه الناس وقال ابن الجوزي في ( زاد المسير ) قوله تعالى ( قَالَ الَّذِينَ غَلَبُوا عَلَى أَمْرِهِمْ ) قال المفسرون هم الملك وأصحابه المؤمنون اتخذوا عليهم مسجدا وقال الشوكاني في فتح القدير ( قَالَ الَّذِينَ غَلَبُوا عَلَى أَمْرِهِمْ لَنَتَّخِذَنَّ عَلَيْهِمْ مَّسْجِدًا ) ذكر اتخاذ المسجد يشعر بأن هؤلاء الذين غلبوا على أمرهم هم المسلمون

 

18:21 குகைவாசிகள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களுக்கு அருகில் மஸ்ஜித் பள்ளிவாசலை அமைக்கச் சொன்னவர்கள் முஸ்லிம்கள் முஃமீன்களே அன்றி வேறில்லை. மேலும் அப்பள்ளிவாசலில் மக்கள் தொழுவதற்காகவும் அந்த இடத்தைக் கொண்டு பறகத் பெறுவதற்காகவும் அந்த இடத்தில் மஸ்ஜித் பள்ளிவாசல்களை அமைப்போம் என்று முஃமின்கள் நல்லெண்ணம் கொண்டார்கள் என்ற கருத்துக்களை மேற்கூறிய திருக்குர்ஆன் விளக்கவுரைகள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

♦️நபிமார்கள் நல்லடியார்கள் மரணம் அடைந்து விட்டாள் அவர்களை நல்லடக்கம் செய்துவிட்டு அவர்களின் கப்ருஸ்தானங்களுக்கு அருகாமையில் மஸ்ஜித் பள்ளிவாசல்களை எழுப்புவது முஃமின்கள் நடைமுறையில் இருந்தது என்ற கருத்தை மேற்கூறிய இறைவசனமும் அதன் விளக்கவுரை தப்ஸீர்களும் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ الْمَازِنِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். என்னுடைய வீட்டிற்கும் என்னுடைய மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதி சுவர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும்.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு ஜைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1195 முஸ்லிம் 1190

 

♦️இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் இரு தோழர்களின் கப்ருஸ்தானம் இருக்கும் வீட்டிற்கும் மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசல் மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதியானது சுவர்க்கத்தின் பூங்கா என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

♦️தெளிவு :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னுடைய வீடு என்று கூறியது ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டை குறிக்கும். இங்குதான் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அங்குதான் அவர்களை நல்லடக்கம் செய்யப்பட்டது மட்டுமின்றி அவர்களின் இரு தோழர்களையும் அதே வீட்டில் தான் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த வீட்டை ஒட்டியபடி மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசல் அமைந்துள்ளது. பின்னர் மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலின் கட்டுமானம் விசாலமாகும் போது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நல்லடக்கம் செய்த அந்த வீட்டை மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசல் அடைவளைத்துக் கொண்டது. என்ற கருத்தை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

குறிப்பு :- நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களுக்கு அருகில் மஸ்ஜித் பள்ளிவாசல்கள் அமைப்பதை இஸ்லாம் வழியுருத்திக் கூறியுள்ளது. இதன் காரணம் கப்ருஸ்தானங்களை ஸியாரத் செய்ய வருபவர்கள். குறிப்பிட்ட நேரத்தில் தொழுகையை நிறைவேற்ற வேண்டும், அல்லாஹ்வை வணங்கி வழிபட வேண்டும் என்ற நோக்கில் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களுக்கு அருகில் மஸ்ஜித் பள்ளிவாசல்கள் அமைப்பதை இஸ்லாம் வரவேற்கிறது. இதன் மூலம் கப்ருஸ்தானங்கள் மீது மஸ்ஜித் பள்ளிவாசல்கள் அமைக்கும் யூத கிறிஸ்தவர்களின் செயலுக்கு மாற்றம் செய்யப்படுகிறது என்ற கருத்தை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.