19) நபி இல்யாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்
19) நபி இல்யாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்
♦️பெயர் :- இல்யாஸ் (எலியா)
♦️தலைமுறை :- பனீ இஸ்ரவேலர்கள் வமிசத்தில் ஹழ்ரத் அல் யஸஉ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரராக ஹழ்ரத் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூன்றாவது தலைமுறையில் ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தோன்றினார்கள்.
♦️பிறப்பு :- கிமு. 0910
♦️தந்தை பெயர் :- யாஸீன்
♦️அரசனின் பெயர் :- அஹப்
அரசன் சிரியா நகரின் ஓர் பகுதியை அஹப் என்ற ஆட்சி செய்து வந்தான். இவன் சிலை வணக்கத்தில் மக்களை ஊக்குவித்தான். மக்களும் அதில் மூழ்கி இருந்தார்கள்.
♦️மக்கள் :- சிரியா நாட்டு மக்களுக்கு நபியாக அனுப்பப்பட்டார்கள்.
♦️வேதம் :- நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தவ்ராத் வேதத்தையே பின்பற்றினார்கள்.
♦️தொழில் :- துணி வியாபாரம்
♦️அற்புதம் :- குழந்தையாக இருந்த யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மரணித்து விட அவர்களின் தாய் நபி இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை மலைப்பகுதிக்குள் தேடிக் கண்டுபிடித்து தமது வீட்டிற்கு வருமாறும் கூறி மரணித்து விட்ட குழந்தையை அல்லாஹ்விடம் துஆ செய்து மீண்டும் உயிர்ப்பெற்று வாழ உதவி செய்ய வேண்டுமென்றும் மன்றாடிக்கேட்ட அவ்வாறே அவர்கள் துஆ கேட்டார்கள். குழந்தையாக இருந்த யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உயிர் பெற்றார்கள். மேலும் நபி இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சிறுவனாக இருந்த யஸவு அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கடுமையான நோய் ஏட்பட்டிருந்த போது, அந்த நோயை இறைவனின் அனுமதி கொண்டு நீக்கினார்கள்.
♦️தொல்லை :- காஃபிர்களின் தொல்லை தாங்க முடியாமல் நபி இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பஃலபக் என்ற ஊரில் இருந்து வெளியேறி தொடர் மலைப்பகுதியில் சுமார் 7 வருடகாலம் வாழ்ந்தார்கள்.
♦️தண்டனை :- 3 வருடகாலம் அந்த மக்களுகங மழை இல்லாது செய்தான். இதனால் புற்பூண்டுகள் கருக ஆரம்பித்தன. பறவையினங்களும் விலங்கினங்களும் செத்தொழிய ஆரம்பித்தன. பல உயிர் சேதங்களும் ஏற்பட்டதன. இருப்பினும் அவர்கள் முழுமையாக திருந்தவில்லை.
♦️துஆ :- நபி இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மக்களின் அவலநிலையை முழுமையாக பார்த்து விட்டு இறைவனின் பக்கம் தன்மை அழைத்து கொள்ளுமாறு பிரார்த்தனை செய்தார்கள். அவ்வாறே அவர்கள் அழைக்கப்பட்டார்கள்.
♦️குறிப்பு :- உயிருடன் வாழும் நபிமார்களில் ஒருவராக நபி இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இருக்கிறார்கள் என்ற ஓர் கருத்து உள்ளது. (கீழ் சொல்) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.
♦️மரணம் :- கிமு. 0850
♦️கப்ரு :- நபி இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் துருக்கி நாட்டிலுள்ள ஹஸன்கியப் என்ற ஊரில் அமைந்துள்ளது.
♦️குர்ஆன் :- நபி இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயர் குர்ஆனில் 3 இடங்களில் இடம் பெற்றுள்ளது.
WORLD ISLAM YSYR
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்