19) நபி முஹம்மத் ﷺ அவர்களின் தலைமுடி
நபி முஹம்மத் ﷺ அவர்களின் தலைமுடி
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَرَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْسَهُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தலை(முடி)யை, (இரண்டு பக்கங்களிலும்) பிரித்துக் கொண்டார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3558, 3944
عَنْ قَتَادَةُ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قُلْتُ لِأَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ كَيْفَ كَانَ شَعَرُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ كَانَ شَعَرًا رَجِلًا لَيْسَ بِالْجَعْدِ وَلَا السَّبْطِ بَيْنَ أُذُنَيْهِ وَعَاتِقِهِ
நான் அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது தலைமுடி எப்படி இருந்தது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அவர்களது தலை முடி, அலையலையானதாக இருந்தது. சுருள் முடியாகவும் இல்லை; படிந்த முடியாகவும் இல்லை. அது அவர்களது காது மடல்களுக்கும் தோளுக்கும் இடையே தொங்கிக்கொண்டிருந்தது.
அறிவிப்பவர் :- கத்தாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2338 அஹ்மது 13106
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَضْرِبُ شَعَرُهُ مَنْكِبَيْهِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது தலைமுடி (சில வேளைகளில்) அவர்களின் தோள்களைத் தொட்டுக்கொண்டிருந்தது.
அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 5903 முஸ்லிம் 2338 அஹ்மது 13841
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ كَانَ شَعَرُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أَنْصَافِ أُذُنَيْهِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது தலைமுடி (சில வேளைகளில்) இரு காது மடல்களின் பாதிவரை இருந்தது.
அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2338 அபூதாவூத் 4185, 4186 நஸாயி 5053, 5061, 5234 அஹ்மது 12118, 12389
عَنْ جَابِرَ بْنَ سَمُرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، سُئِلَ عَنْ شَيْبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ كَانَ إِذَا دَهَنَ رَأْسَهُ لَمْ يُرَ مِنْهُ شَيْءٌ وَإِذَا لَمْ يَدْهُنْ رُئِيَ مِنْه
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எண்ணெய் தேய்த்திருந்தால் அவர்களுடைய தலையில் (உள்ள நரை முடிகள்) எதுவும் வெளியே தெரியாது. எண்ணெய் தேய்க்கவில்லை என்றால் வெளியே தெரியும்.
அறிவிப்பவர் :- ஜாபிர் இப்னு ஸமுரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2344 நஸாயி 5114
عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ….. قَالَ رَبِيعَةُ فَرَأَيْتُ شَعَرًا مِنْ شَعَرِهِ فَإِذَا هُوَ أَحْمَرُ فَسَأَلْتُ فَقِيلَ احْمَرَّ مِنَ الطِّيبِ
ரபீஆ ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கூறினார்கள். நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முடிகளில் ஒன்றை (அவர்களின் மறைவுக்குப் பின்) பார்த்தேன். அது சிவப்பாக இருந்தது. நான் (அது குறித்து, அவர்கள் மருதாணி பூசி இருந்தார்களா என்று) கேட்டேன். அதற்கு, (இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முடி) நறுமணப் பொருளின் காரணத்தால் அது சிவப்பாகிவிட்டது’ என்று பதிலளிக்கப்பட்டது.
அறிவிப்பவர் :- ரபீஆ இப்னு அபீ அப்திர் ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3547
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்