2) அல்லாஹ்விற்கு அழகிய முகம் உள்ளதா?
அல்லாஹ்விற்கு அழகிய முகம் உள்ளதா?
📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ :- وَّيَبْقٰى وَجْهُ رَبِّكَ ذُوالْجَلٰلِ وَالْاِكْرَامِ
குர்ஆன் கூறுகிறது எல்லா வஸ்துக்களும் அழிந்து போகக்கூடியது. மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.
சூரா ரஹ்மான் ஆயத் 26, 27
எல்லா வஸ்துக்களும் அழிந்து விடும் அல்லாஹ்வுடைய முகம் மட்டுமே மிஞ்சும் என்பதாக குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் முகம் என்பதற்கு நேரடி அர்த்தம் கொடுத்தால் வானம் பூமி அதிலுள்ளவைகள், அல்லாஹ்வின் சிம்மாசனம் அர்ஷ், அவனுடைய கை கரம், கால் பாதம் இவையெல்லாம் அழிந்து விடும். அவனின் முகம் மட்டுமே மிஞ்சும். ஆகவே உருவ வணங்கிகள் போன்று நாமும் அல்லாஹ்வின் முகம் என்று நேரடி அர்த்தம் கொடுத்தால் அல்லாஹ்விற்கும் அழிவு உண்டு என்பதாக அர்த்தமாகிவிடும். இவ்வாறு அர்த்தம் செய்வது முற்றிலும் தவறாகும். அதற்கு மாற்றமாக மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும். அதாவது அல்லாஹ்வின் முகம் என்பதற்கு அல்லாஹ்வின் உள்ளமை என வழிந்துரை அர்த்தம் கொடுப்பது அவசியமாகும்.
♦️எனவே மேற்கூறிய ஆயத்திற்கு சரியான அர்த்தம் :- எல்லா வஸ்துக்களும் அழிந்து போகக்கூடியது. மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் உள்ளமையும் (அவன் நாடியதும்) நிலைத்திருக்கும் என்று மாற்றுப் பொருள் வழிந்துரை அர்த்தம் செய்ய வேண்டும்.
وَلِلّٰهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ فَاَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللّٰهِ اِنَّ اللّٰهَ وَاسِعٌ عَلِيْمٌ
குர்ஆன் கூறுகிறது கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்); நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; எல்லாம் அறிந்தவன்.
சூரா பகரா ஆயத் 115
கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்); நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது என்பதாக குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் முகம் என்று நேரடி பொருள் அர்த்தம் செய்தால். நாம் திரும்பும் இடமெல்லாம் படைப்புக்கள் தான் உள்ளது. ஆகவே ஒவ்வொரு படைப்புகளும் அல்லாஹ்வின் முகம் என்று அர்த்தமாகிவிடும். இவ்வாறு நாமும் உருவ வணங்கிகள் போன்று அர்த்தம் செய்வது முற்றிலும் தவறாகும். அதற்கு மாற்றமாக மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும். அதாவது அல்லாஹ்வின் முகம் என்பதற்கு அல்லாஹ்வின் திசை என வழிந்துரை அர்த்தம் கொடுப்பது அவசியமாகும்.
♦️எனவே மேற்கூறிய ஆயத்திற்கு சரியான அர்த்தம் :- கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்); நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் திசைதான் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; எல்லாம் அறிந்தவன். என்று மாற்றுப் பொருள் வழிந்துரை அர்த்தம் செய்ய வேண்டும்.
فَاٰتِ ذَا الْقُرْبٰى حَقَّهٗ وَ الْمِسْكِيْنَ وَابْنَ السَّبِيْلِ ذٰلِكَ خَيْرٌ لِّلَّذِيْنَ يُرِيْدُوْنَ وَجْهَ اللّٰهِ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ
குர்ஆன் கூறுகிறது ஆகவே, உறவினர்களுக்கு அவர்கள் பாத்தியதையைக் கொடுத்து வருவீராக. அவ்வாறே ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (அவரவர்க்குரியதை கொடுத்து வருவீராக); எவர்கள் அல்லாஹ்வின் முகத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இது மிக்க நன்மையுடையதாகும்; அவர்கள்தாம் (அவ்வாறு கொடுத்து வருபவர் தாம்) வெற்றியாளர்களாவார்கள்.
சூரா ரூம் ஆயத் 38
எவர்கள் அல்லாஹ்வின் முகத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இது மிக்க நன்மையுடையதாகும். என்று குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் முகம் என்று நேரடி பொருள் அர்த்தம் செய்தால். அவனுக்கு முகம் என்ற உருவ அமைப்பு இல்லாத போது அவனின் முகத்தை நாம் எப்படி நாடுவது என்ற கேள்வி எழும். இவ்வாறான கேள்விகள் திர்குர்ஆன் ஆயத்துக்களில் சந்தேகம் ஏற்படும் வகையில் அமைந்துள்ளது. ஆகவே அல்லாஹ்விற்கு முகம் உள்ளது என்று உருவ வணங்கிகள் போன்று அர்த்தம் செய்வது முற்றிலும் தவறாகும். அதற்கு மாற்றமாக மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும். அதாவது அல்லாஹ்வின் முகம் என்பதற்கு அல்லாஹ்வின் திருபொருத்தம் என்று வழிந்துரை அர்த்தம் கொடுப்பது அவசியமாகும்.
♦️எனவே மேற்கூறிய ஆயத்திற்கு சரியான அர்த்தம் :- உறவினர்களுக்கு அவர்கள் பாத்தியதையைக் கொடுத்து வருவீராக. அவ்வாறே ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (அவரவர்க்குரியதை கொடுத்து வருவீராக); எவர்கள் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இது மிக்க நன்மையுடையதாகும்; அவர்கள்தாம் (அவ்வாறு கொடுத்து வருபவர் தாம்) வெற்றியாளர்களாவார்கள். என்று மாற்றுப் பொருள் வழிந்துரை அர்த்தம் செய்ய வேண்டும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்