2) கப்ருஸ்தானங்கள் எல்லாம் ஒன்றா? அல்லது அந்தஸ்தில் வெவ்வேறா?

571

 2) கப்ருஸ்தானங்கள் எல்லாம் ஒன்றா? அல்லது அந்தஸ்தில் வெவ்வேறா?

 

📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

وَلَا تُصَلِّ عَلٰٓى اَحَدٍ مِّنْهُمْ مَّاتَ اَبَدًا وَّلَا تَقُمْ عَلٰى قَبْرِهٖ اِنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَمَاتُوْا وَهُمْ فٰسِقُوْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது அன்றி, அவர்களில் எவர் மரணித்து விட்டாலும் அவர்கள் மீது ஒருபோதும் (ஜனாஸா) தொழுகையும் தொழாதீர்கள். அவர்களுடைய கப்ரில் (ஸியாரத்து செய்யும் நோக்கில்) நிற்காதீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்துவிட்டதுடன் பாவிகளாகவே மரணித்தும் இருக்கின்றனர்.

 

சூரா தவ்பா ஆயத் 84

 

♦️இறைவசனத்தின் பிரகாரம் காஃபிர்களாக மரணித்து விட்டால்! அவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்துவதும் அவர்களின் கப்ருகளை ஸியாரத்து செய்ய நிற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களாக மரணித்து விட்டால்! அவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்துவதும் அவர்களின் கப்ருகளை ஸியாரத் செய்ய முன் நிற்பதும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆக கப்ருஸ்தானங்கள் எல்லாம் ஒன்றாக இருப்பினும் இஸ்லாத்தின் பார்வையில் அவையெல்லாம் அந்தஸ்தில் வெவ்வேறு என்ற கருத்தை மேற்கூறிய இறைவசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

♦️கப்ருஸ்தானங்கள் என்று பொதுவாகக் கூறும்போது அதில் முஸ்லிம்களுடைய கப்ருஸ்தானங்கள் முஸ்லிம் அல்லாத மாற்று மதத்தினர்களுடைய கப்ருஸ்தானங்களை பொதுவாகக் குறிக்கும். இங்கு கவணிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், மாற்று மதத்தவர்களின் கப்ருஸ்தானங்களுக்கு ஸியாரத் செய்ய செல்வதை இஸ்லாம் தடை செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் கப்ருஸ்தானங்களை ஸியாரத்து செய்வதை இஸ்லாம் வழியுருத்திக் கூறியுள்ளது.

 

♦️எனவே மாற்று மதத்தவர்களின் கப்ருஸ்தானங்களுக்கும் முஸ்லிம்களின் கப்ருஸ்தானங்களுக்கு மத்தியில் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. அதுபோல முஸ்லீம் பொதுமக்களின் கப்ருஸ்தானங்களாக இருந்தால் அவர்களின் உடல்கள் மண்ணாகி விட்டபோதிலும் அங்கு சென்று ஸியாரத் செய்வதன் மூலம் மரண சிந்தனை ஏற்படுகிறது என்ற கருத்தை இஸ்லாம் பறைசாற்றுகிறது. நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களாக இருந்தால் மரண சிந்தனை அல்லாஹ்வை பற்றிய சிந்தனை ஏற்படுவது மட்டுமின்றி அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை கண்ணியப்படுத்திய நற்கூலி கிடைக்கப்பெறும். மேலும் இது போன்ற இடங்களில் ரஹ்மத்தும் இறங்கிக் கொண்டே இருக்கிறது. மேலும் நபிமார்கள் நல்லடியார்களின் உடலை மண் தீண்டாது அவர்கள் மறைந்த வன்னம் தங்களுடைய கப்ருஸ்தானங்களில் உயிருடன் இருப்பது மட்டுமின்றி தொழுதும் வருகிறார்கள் என்ற கருத்தை இஸ்லாம் பறைசாற்றுகிறது. அடுத்தடுத்த தலைப்புகளில் திருக்குர்ஆன் ஹதீஸ்கள் அடிப்படையில் இது சம்பந்தமாக பார்க்கலாம்.

 

முஸ்லிம் பொது மக்களின் கப்ருஸ்தானங்களுக்கும் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களுக்கு மத்தியிலுள்ள வித்தியாசங்களை சுருக்கமாக பார்க்கலாம்

 

முஸ்லிம் கப்ருஸ்தானங்களை ஸியாரத் செய்வதன் மூலம் ஏற்படும் பலன்கள் 

 

 فَإِنَّهَا تُذَكِّرُ الْآخِرَةَ

 

அவை உங்களுக்கு மறுமை (வாழ்க்கையை) நினைவூட்டும். நபிமொழி ஆதாரம் திர்மிதி 1054

 

فَإِنَّهَا تُزَهِّدُ فِي الدُّنْيَا

 

அவை இவ்வுலகத்தில் பற்றற்ற நிலையை உண்டாக்கும். நபிமொழி ஆதாரம் இப்னு மாஜா 1571

 

فَإِنَّهَا تُذَكِّرُكُمُ الْمَوْتَ

 

அவை உங்களுக்கு மரணத்தை நினைவூட்டும். நபிமொழி ஆதாரம் இப்னு மாஜ 1572

 

நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை ஸியாரத் செய்வதன் மூலம் ஏற்படும் பலன்கள்

 

ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ شَعَآٮِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ‏

 

 

குர்ஆன் கூறுகிறது எவர் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை கண்ணியப்படுத்துகின்றாரோ அது அவருடைய உள்ளத்தின் இறை அச்சத்தை அறிவிக்கிறது. சூரா ஹஜ் ஆயத் 32
அவைகளின் மூலம் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை கண்ணியப்படுத்திய நற்கூலி கிடைக்கப்பெறும்.

فَإِنَّهَا تُذَكِّرُ الْآخِرَةَ

 

அவை உங்களுக்கு மறுமை (வாழ்க்கையை) நினைவூட்டும். நபிமொழி ஆதாரம் திர்மிதி 1054

 

فَإِنَّهَا تُزَهِّدُ فِي الدُّنْيَا

 

அவை இவ்வுலகத்தில் பற்றற்ற நிலையை உண்டாக்கும். நபிமொழி ஆதாரம் இப்னு மாஜா 1571

 

فَإِنَّهَا تُذَكِّرُكُمُ الْمَوْتَ

 

அவை உங்களுக்கு மரணத்தை நினைவூட்டும். நபிமொழி ஆதாரம் இப்னு மாஜா 1572

 

إِذَا رُؤُوا ذُكِرَ اللَّهُ

 

நபிமொழி ஆதாரம் தப்ரானி 10325

 

في نُزُول الرحمة

 

அதில் ரஹ்மத்து இறங்குகிறது. இது சம்பந்தமாக தனி தலைப்பு பின்னர் பதிவிடும்.

 

குறிப்பு :- காஃபிர்களுடைய கப்ருஸ்தானங்களை விட முஸ்லிம்களின் கப்ருஸ்தானங்களுக்கு அந்தஸ்து உள்ளது. அதுபோல முஸ்லீம் பொதுமக்களின் கப்ருஸ்தானங்களை விட நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களுக்கு அதிகளவில் அந்தஸ்துக்கள் உள்ளது என்ற கருத்தை மேற்கூறிய திருக்குர்ஆன் ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது. இதனை காரணமாக வைத்து தான் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலும் அது அல்லாத பல நாடுகளிலும் அடையாளப் பெயராக தர்ஹா என்ற சொல் பயன் படுத்தப்படுகிறது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.