2) கேள்வி :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் இறைதூதர் ﷺ அவர்களுடன் திருமண பந்தத்தில் எப்பொழுது இணைந்தார்கள்?
وَابْتَلُوا الْيَتٰمٰى حَتّٰىۤ اِذَا بَلَغُوا النِّكَاحَ
குர்ஆன் கூறுகிறது அன்றி, அநாதை(ச் சிறுவர்)களை (நல்லொழுக்கம், கல்வி, தொழில் திறமைகளை கற்பித்து)ச் சோதித்து வாருங்கள். அவர்கள் திருமண பருவத்தை அடைந்த பின்னர். (அவர்களுக்குரியதை கொடுங்கள்)
வேத நூல் :- திருக்குர்ஆன் 4:6
பெண் பிள்ளைகளாக இருந்தாலும் சரி ஆண் பிள்ளைகளாக இருந்தாலும் சரி அவர்கள் பருவம் அடைந்து விட்டால்! அவர்கள் திருமண வயதை அடைந்து விட்டனர் என்று திருக்குர்ஆன் பறைசாற்றுகிறது.
இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்றைய காலகட்டத்தின் நடைமுறை படி ஆறு அல்லது ஏழு வயதில் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை சிறுவயதிலேயே திருமணம் முடித்தார்கள். அதன் பின்னரே மேற்கூறிய இறைவசனம் சட்டமாக இறங்கியது. ஆக அன்றைய காலத்து நடைமுறை படி அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் அவர்கள் இருவரும் இறைவசனம் இறங்கிய பின்னர். இஸ்லாமிய சட்டப்படி ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பருவ வயதை எத்திய பின்னர் அதாவது ஒன்பதாவது வயதில் தான் அவர்களுடன் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமண பந்தத்தில் முதல் முதலில் ஒன்று சேர்ந்தார்கள் என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ إذا بلقت الجارية تشع. سنين فهي امرأة
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். ஒரு பெண்பிள்ளை ஒன்பது வயதை அடையும் போது அவள் பருவம் அடைந்த ஒரு பெண்ணாக ஆகிறாள்.
நூல் ஆதாரம் :- ஜாமிஉத் திர்மிதி 11/1109
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجَهَا وَهِيَ بِنْتُ سَبْعِ سِنِينَ وَزُفَّتْ إِلَيْهِ وَهِيَ بِنْتُ تِسْعِ سِنِينَ، وَلُعَبُهَا مَعَهَا
நான் ஏழு வயதுடையவளாக இருந்த போது, இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். நான் (பருவமடைந்து) ஒன்பது வயதுடையவளாக இருந்த போது, அவர்களிடம் அனுப்பிவைக்கப்பட்டேன். அப்போது விளையாட்டுப் பொம்மைகள் என்னுடன் இருந்தன.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1422
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் கூற்று பிரகாரம். அன்னை அவர்கள் ஒன்பது வயதில் பருவம் அடைந்துள்ளார்கள். அதன் பின்னரே இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் திருமண பந்தத்தில் ஒன்று சேர்ந்துள்ளார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
இதனை இந்துக்கள் மறுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்துக்களின் மனுஸ்மிருத சட்டத்தை ஒரு பக்கம் வைத்து விட்டு இந்துக்களின் கலாச்சார நிகழ்வுக்கு வருவோம். உதாரணமாக :- இந்து மத பெண் ஒன்பது வயதில் பருவ வயதை எத்தி விட்டால்! அவள் பூப்பெய்து விட்டால், பெரிய மனிசியாக மாறிவிட்டால் என்று கூறப்படும். இந்த விஷயத்தை அந்த வீட்டார்கள் அவர்களின் குடும்பத்தினர் அது அல்லாதவர்களுக்கு தெரியப்படுத்துவார்கள். அதன் பின்னர் சில சடங்கு சம்பிரதாயம் நடைபெறும். அதற்கு பிறகு அந்த பருவம் அடைந்த பெண்ணுக்காக வேண்டி இந்து சமய கலாச்சாரப்படி மஞ்சள் நீராட்டு விழா அல்லது பூப்புனித நீராட்டு விழா போன்ற அமைப்பில் சடங்குகள் நடைபெறும். இந்த விழாக்களின் முக்கிய நோக்கம் எங்கள் வீட்டில் திருமண வயதில் ஓர் கன்னிப் பெண் இருக்கிறாள் என்று மக்கள் மத்தியில் அறிவிப்பு செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.
குறிப்பு :- இந்துக்களின் நடைமுறை பிரகாரம் அது அல்லாத நடைமுறை பிரகாரம் பவரு வயதை அடைந்த பெண் திருமண பந்தத்தில் இணைய தகுதியுள்ளவள் என்றே இந்து மதமும் அது அல்லாத மதங்களும் அறிவிப்பு செய்கிறது. எனவே ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பருவ வயதை எத்திய பின்னர் தான் அவர்களுடன் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்கள் என்ற கருத்தை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்