2) ஜலாலுதீன் ரூமி (ரஹ்) அவர்களின் தத்துவக் கவிதைகள்

77

கண்களால் காதலிப்பவர்களுக்குத் தான் பிரிவு நேரும், ஆன்மா, உள்ளத்தால் நேசிப்பவர்கள் ஒரு போதும் பிரிவதில்லை

சிறைக் குள்ளே நீ ஏன் தங்கியுள்ளாய் அறைக் கதவு முழுவதும் திறந்துள்ள போது? முக்கோணப் பயத்தில் முடங்காது நீ வெளிச் செல் சிந்தித்து மௌனமாய் வாழ்ந்திடு

நீ உடைத்த இதயத்தை அல்லாஹ் விரும்பி விட மாட்டானா?!

அல்லாஹ்விடமிருந்து மனிதனுக்கு வரும் அழகுமிக்க சமிக்ஞையே! பலவீனம் பிரார்த்தனை நேரம் நெருங்கி விட்டது என்று அது உணர்த்துகிறது

பெண் அல்லாஹ்வின் ஒளியால் ஆனவள் வெறும் பிரியத்திற்குரியவளோ அல்லது படைப்பினமோ அல்ல. மாறாக படைப்பாற்றல் மிக்கவள்

நான் உனக்குச் சொந்தம் என்னை என்னிடம் திருப்பி அனுப்பி விடாதே.

வார்த்தைகளை நிறுத்தி வை இப்போது நெஞ்சின் நடுவில் ஜன்னலைத் திற உள்ளும் வெளியும் உயிர்கள் பறந்து திரியட்டும்..

பித்துநிலையின் விளிம்பில் வாழ்ந்து வந்துள்ளேன் நான், காரணங்களைத் தேடியபடி கதவைத் தட்டியபடி,, அது திறக்கிறது. ஓ. உள்ளுக்குள் இருந்து கொண்டே தட்டிக் கொண்டிருந்திருக்கிறேன்.”

இங்கே அங்கே இனம் தேசம் மதம் புறப்படுமிடம் சேருமிடம் அபத்தமான பிரிவுகளை மறந்து விடு

நீ ஆன்மா நீ காதல் ஜின் அல்ல. வானவர் அல்ல மனிதனும் அல்ல நீ

ஏமாற்றத்தின் பிறகு பல நம்பிக்கைகள் செழிக்கின்றன. இருளுக்குப் பின் ஆயிரம் சூரியன்கள் திறந்துகொண்டு பிரகாசிப்பது போல் ஆளவும் மாற்றவும். வந்துள்ளது காதல் விழித்திரு. என் நெஞ்சே! விழித்திரு

நல்ல மனிதன் வலிகளை, வேதனைகளை, நாடிப் பெறுகிறான். தன் வலி தீர்க்கப்படும் என்பது, அவனுக்கு தெரியும். எங்கே “வறுமை” உண்டோ. அங்கே. நிவாரணமும் உண்டு. தண்ணீர் வேண்டுமென்று கேட்காதீர்கள். தாகத்தை வெளிக்காட்டுங்கள், உங்களை சுற்றிலும் நீரூற்றுகள், பொங்கிட பீறிட காண்பீர்கள். இறைவன் அறிவான். உங்கள் தாகத்தையும், உங்களுக்கு எது தகுதியானது என்பதையும்….

1.தாராளத்திலும் பிறருக்கு உதவுவதிலும் நதியைப் போல் இரு

2.கருணையிலும் இரக்கத்திலும் சூரியனைப் போல் இரு

3.பிறரின் குறைகளை மறைப்பதில் இரவைப் போல் இரு

4.கோபத்திலும் சீற்றத்திலும் பிணத்தைப் போல் இரு.

5.பணிவிலும் அடக்கத்திலும் பூமியைப் போல் இரு

6.தாங்கிக்கொள்வதில் கடலினைப் போல் இரு.

7.என்னவாக இருக்கிறாயோ அதுவாகவே தோன்று அல்லது எப்படித் தோன்றுகிறாயோ அதுவாகவே இரு.

உன் ஒளியில் கற்கிறேன் காதலிக்கும் கலை

உன் அழகில் கற்கிறேன் கவிதைகள் எழுத

யாருமே உன்னைப் பார்க்காத என் நெஞ்சினுள் ஆடுகிறாய் நீ

சில நேரம் பார்க்கிறேன் நான். அந்தப் பார்வைதான் இந்தக் கவிதை ஆகிறது.

ஜலாலுதீன் ரூமி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்

தொடர்….

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.