2) நபி முஹம்மத் ﷺ அவர்களின் சிறுநீர்
நபி முஹம்மத் ﷺ அவர்களின் சிறுநீர்
عَنْ أُمِّ أَيْمَنَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآَلِهِ وَسَلَّمَ مِنَ اللَّيْلِ إِلَيَّ فَخَّارَةٍ مِنْ جَانِبِ الْبَيْتِ فَبَالَ فِيهَا فَقُمْتُ مِنَ اللَّيْلِ وَأَنَا عَطْشَى فَشَرِبْتُ مِنْ فِي الْفَخَّارَةِ وَأَنَا لا أَشْعُرُ فَلَمَّا أَصْبَحَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآَلِهِ وَسَلَّمَ قَالَ يَا أُمَّ أَيْمَنَ قَوْمِي إِلَى تِلْكَ الْفَخَّارَةِ فَأَهْرِيقِي مَا فِيهَا قُلْتُ قَدْ وَاللَّهِ شَرِبْتُ مَا فِيهَا قَالَ فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآَلِهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ ثُمَّ قَالَ أَمَا إِنَّكِ لا يَفْجَعُ بَطْنُكِ بَعْدَهُ أَبَدًا
உம்முல் ஐமன் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவில் எழுந்து வீட்டின் ஓரத்தில் இருந்த மண் பாத்திரத்தில் சிறுநீர் கழித்து விட்டு உறங்கி விட்டார்கள். எனக்கு தாகம் ஏற்பட்டதால் இரவில் எழுந்து அந்த மண் பாத்திரத்தில் இருந்ததைத் தெரியாமல் பருகிவிட்டேன். விடிந்தவுடன் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், உம்மு அய்மனே! எழுந்து அந்த மண் பாத்திரத்தில் உள்ளதைக் கீழே கொட்டிவிடு! என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அதில் இருந்ததை நான் பருகி விட்டேனே! என்று நான் கூறினேன். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடைவாய் பற்கள் தெரிகின்ற அளவுக்குச் சிரித்தார்கள். பிறகு, “இனி உனக்கு வயிற்று வலி ஒருபோதும் ஏற்படாது எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- உம்மு ஐமன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஹாகிம்” முஸ்தத்ரக் 4/70
عَنْ أُمِّهَا أُمَيْمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِِ وَسَلَّمَ قَدَحٌ من عِيدَانٍ يَبُولُ فيه وَيَضَعُهُ تَحْتَ سَرِيرِهِ فَقَامَ فَطَلَبَ فلم يَجِدْهُ فَسَأَلَ فقال أَيْنَ الْقَدَحُ؟ قالوا شَرِبَتْهُ بَرَّةُ خَادِمُ أُمِّ سَلَمَةَ التي قَدِمَتْ مَعَهَا من أَرْضِ الْحَبَشَةِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِِ وَسَلَّمَ لَقَدِ احْتَظَرَتْ مِنَ النَّارِ بِحِظَارٍ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மரத்தால் ஆன பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அவர்கள் சிறுநீர் கழித்து விட்டுத் தமது கட்டிலுக்கு அடியில் வைத்து விடுவார்கள். (ஒரு நாள்) அவர்கள் எழுந்து (அந்தப் பாத்திரத்தை) தேடினார்கள். அதை அவர்கள் காணவில்லை. பாத்திரம் எங்கே?என்று கேட்டார்கள். அபீசீனிய நாட்டிலிருந்து அன்னை உம்மு சலமாவுடன் வந்துள்ள அவர்களின் அடிமை பர்ரா அதைக் குடித்து விட்டார்கள்’ என்று மக்கள் கூறினர். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவர் நரகத்திலிருந்து காக்கும் திரையைக் கொண்டு அவர் தன்னைக் காத்துக் கொண்டார்’ எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- உமைமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் தபரானி” கபீர் 7/356
عَنْ ابْنِ جُرَيْجٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قال أُخْبِرْتُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَبُولُ فِي قَدَحٍ مِنْ عِيدَانٍ ثُمَّ يُوضَعُ تَحْتَ سَرِيرِهِ، فَجَاءَ فَإِذَا الْقَدَحُ لَيْسَ فِيهِ شَيْءٌ؟ فَقَالَ لِامْرَأَةٍ يُقَالُ لَهَا بَرَكَةُ كَانَتْ تَخْدُمُ أُمَّ حَبِيبَةَ جَاءَتْ مَعَهَا مِنْ أَرْضِ الْحَبَشَةِ أَيْنَ الْبَوْلُ الَّذِي كَانَ فِي الْقَدَحِ؟ قَالَتْ شَرِبْته قَالَ صِحَّةً يَا أُمَّ يُوسُفَ وَكَانَتْ تُكَنَّى أُمَّ يُوسُفَ، فَمَا مَرِضَتْ قَطُّ حَتَّى كَانَ مَرَضُهَا الَّذِي مَاتَتْ فِيهِ
இரவில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பாத்திரத்தில் சிறுநீர் கழித்துவிட்டு அப்பாத்திரத்தை கட்டிலுக்குக் கீழ் வைப்பது வழக்கம். விடிந்ததும் பாத்திரம் வெறுமையாக இருப்பதைப் பார்த்துவிட்டு உம்முல் முஃமினீன் அன்னை உம்மு ஹபீபாவுடன் ஹபஷாவிலிருந்து கூடவே வந்திருந்த பறக்கா என்ற பெண்ணிடம் பாத்திரத்திலிருந்த சிறுநீரை என்ன செய்தீர்கள் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். அதனைக் குடித்துவிட்டேன் என்று பறக்கா கூறினார்கள். உம்மு யூசுப் உமக்கு ஆரோக்கியம் கிடைத்து விட்டது என்று கூறினார்கள். இதன் பின் பறக்காவுக்கு மரண நோயைத் தவிர்த்து வேறு எந்த நோயும் அணுகவே இல்லை.
அறிவிப்பவர் :- இப்னு ஜுறைஜ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ரஸ்ஸாக், தல்கீஸ் அல் கபீர் 1/171
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்