2) நபி முஹம்மத் ﷺ அவர்களை குறித்து பேசிய மாற்று மத சில நவீன அறிஞர்கள்

72

2) நபி முஹம்மத் ﷺ அவர்களை குறித்து பேசிய மாற்று மத சில நவீன அறிஞர்கள்

 

வில்லியம் மூர் என்ற அறிஞ்சர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பற்றிக் கூறுகிறார்

 

சர்வ சக்தியும் படைத்த இறைவன் தனக்குத் துணையாக நிற்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நபிகள் நாயகம் அவர்களுக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதனைகளை அவர் சாதித்திருக்க முடியாது.

 

நூல் :- Life of Mohammed 1877

 

நோபல் பரிசு பெற்ற மிகச்சிறந்த சிந்தனையாளர் தாமஸ் கார்லைல் என்ற அறிஞர் மீண்டும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இவ்வாறு கூறினார்.

 

நம்மவர்கள் ரொம்ப உற்சாகமாக முஹம்மதைப் பற்றிச் சொன்ன பொய்களும் அவதூறுகளும் நம்மையே கேவலப்படுத்துவதாக உள்ளது. மேலும் கூறினார். சண்டையும் சச்சரவும் நிறைந்த குலம் கோத்திரங்களையும், நாடோடிகளையும் தமது முயற்சியால் இணைத்து ஒரு இருபது ஆண்டுக்குள்ளேயே நாகரிகம் மிகுந்த ஒரு பலம் பொருந்திய சமூகமாக எவ்வாறுதான் அவரால் உருவாக்க முடிந்ததோ!! “என்று ஆச்சரியம் அடைந்தார். மேலும் கூறினார் இவ்வுலகில் மக்களுக்குப் புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மையை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும்.

 

நூல் :- ON Heroes Hero Worship and the Heroic in History 24

 

அன்னி பெசன்ட் என்ற பெண் அறிஞசர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பற்றிக் கூறினாள்.

 

அரேபியாவின் முஹம்மது எனும் இந்தத் தூதருடைய வாழ்க்கையையும், ஒழுக்கப் பண்புகளையும், தூய நடத்தையையும் படிப்பவர்கள் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை அறிந்தவர்களுக்கு அவர் மீது மரியாதைத் தவிர வேறு எதுவும் ஏற்படாது. அந்த வல்லமை மிக்க மாபெரும் இறைத் தூதர்களில் ஒருவரான இறுதித் தூதரைக் குறித்து உயர்வான எண்ணமே ஏற்படும். எனது இந்த நூலில் நான் பலருக்கும் தெரிந்த பல விஷயங்களையே சொல்லி இருக்கிறேன் என்றாலும் நானே அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைத் திரும்பத் திரும்பப் படிக்கும் ஒவ்வொரு முறையும் ஆற்றல் மிக்க அந்த அரபு போதகரின் மீது புதிய ஒரு மதிப்பும், புதிய ஒரு மரியாதை உணர்வும் ஏற்படுவதை நான் உணர்கிறேன்.

 

நூல் :- The life and Teachings of Mohamed 4

 

குறிப்பு :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவு படுத்தியவர்கள் இவ்வுலகில் இகழப்பட்ட நிலையில் அழிந்து போனார்கள். அவர்களை புகழ்ந்து மக்கள் மத்தியில் உன்மையை வெளிப்படுத்திய யூத நஸாரா மற்றும் மாற்று மத அறிஞர்கள் அனைவரும் இவ்வுலகில் புகழப்பட்ட நிலையில் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்த நிலையில் இன்று வரை அவர்கள் பேசப்பட்டு வருகிறார்கள் என்பதை நம்மால் காணமுடிகிறது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.