2) நபி முஹம்மத் ﷺ அவர்கள் முன்னிலையில் வைத்து வரவேற்பு மௌலிது கவி பாடல்கள்

270

2) நபி முஹம்மத் ﷺ அவர்கள் முன்னிலையில் வைத்து வரவேற்பு மௌலிது கவி பாடல்கள்

 

عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ امْرَأَةً أَتَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي نَذَرْتُ أَنْ أَضْرِبَ عَلَى رَأْسِكَ بِالدُّفِّ ((أوفى بنذرك))

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து ஒரு பெண், யா ரஸூலல்லாஹ்! தாங்களின் வருகையின் போது, உங்கள் முன்னிலையில் தப் ரபான் அடித்து (வரவேற்பதாக) நேர்ச்சை செய்துள்ளேன் என்று கூறினாள். அதற்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், உனது நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள் எனக் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- அமர் இப்னு சுஹைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூ தாவூது 3312 அஹ்மது 23011

 

عَنْ عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ أَبِي بُرَيْدَةَ يَقُولُ خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ مَغَازِيهِ فَلَمَّا انْصَرَفَ جَاءَتْ جَارِيَةٌ سَوْدَاءُ، فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ نَذَرْتُ إِنْ رَدَّكَ اللَّهُ سَالِمًا أَنْ أَضْرِبَ بَيْنَ يَدَيْكَ بِالدُّفِّ وَأَتَغَنَّى، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ كُنْتِ نَذَرْتِ ؛ فَاضْرِبِي، وَإِلَّا فَلَا فَجَعَلَتْ تَضْرِبُ، فَدَخَلَ أَبُو بَكْرٍ وَهِيَ تَضْرِبُ ثُمَّ دَخَلَ عَلِيٌّ وَهِيَ تَضْرِبُ ثُمَّ دَخَلَ عُثْمَانُ وَهِيَ تَضْرِبُ ثُمَّ دَخَلَ عُمَرُ، فَأَلْقَتِ الدُّفَّ تَحْتَ اسْتِهَا ثُمَّ قَعَدَتْ عَلَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الشَّيْطَانَ لَيَخَافُ مِنْكَ يَا عُمَرُ، إِنِّي كُنْتُ جَالِسًا وَهِيَ تَضْرِبُ فَدَخَلَ أَبُو بَكْرٍ وَهِيَ تَضْرِبُ ثُمَّ دَخَلَ عَلِيٌّ وَهِيَ تَضْرِبُ ثُمَّ دَخَلَ عُثْمَانُ وَهِيَ تَضْرِبُ فَلَمَّا دَخَلْتَ أَنْتَ يَا عُمَرُ أَلْقَتِ الدُّفَّ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு போரிலிருந்து திரும்பி வந்தார்கள். அப்போது கறுப்பு நிறமுடைய பெண் வந்து யா ரஸூலல்லாஹ்! அல்லாஹ் உங்களை நல்லபடியாகத் திருப்பிக் கொண்டு வந்து சேர்த்தால் உங்கள் முன்னால் தப் ரபான் அடித்து பாட்டுப் பாடுவதாக நேர்ச்சை செய்துள்ளேன்’ எனக் கூறிய போது. அதற்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘நீ நேர்ச்சை செய்திருந்தால் அவ்வாறு செய்! இல்லாவிட்டால் செய்ய வேண்டாம்’ எனக் கூறினார்கள். உடனே அப்பெண் தப் ரபான் அடிக்கலானார். அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹு வந்தார்கள். அப்போதும் அடித்துக் கொண்டிருந்தார். பின்னர் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்தார்கள். அப்போதும் அவர் அடித்துக் கொண்டிருந்தார். பின்னர் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்தார்கள். அப்போதும் அவர் அடித்துக் கொண்டிருந்தார். பின்னர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்தார்கள். உடனே அவர் தப் ரபானை கீழே போட்டு விட்டார்.

 

அறிவிப்பவர் :- புரைதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 3690 அஹ்மது 22989, 23011

 

عَن النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا قَدِمَ الْمَدِينَةَ فِي الْهِجْرَةِ خَرَجَتْ بَنَاتُ النَّجَّارِ بِالدُّفُوفِ وَهُنَّ يَقُلْنَ طَلَعَ البَدْرُ عَلَيْنَا مِنَ ثَنِيَّاتِ الوَدَاع وَجَبَ الشُّكْرُ عَلَيْنَا مَا دَعَى لِلَّهِ دَاع

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத்து செய்து மதீனாவிற்கு வந்த போது (பெண்களும்) பனு நஜ்ஜார் சிறுவர்களும் தப் ரபான் அடித்து பின்வருமாறு பாடினார்கள். தலஅல் பத்ரு அலைனா மின் தனிய்யாதில் வதாயீ வஜபஷ்ஷுக்ரு அலினா மாதஆ லில்லாஹி தாயீ

 

ஆதாரம் :- தபரி” மீஸான், 1/38 பைஹகி தலாயிலுன் நுபுவ்வா 5/267

 

♦️வரவேற்கும் நோக்கில் தப் ரபான் கருவிகளை கொண்டு அடிப்பதும் அதை இசைப்பதும் இஸ்லாத்திற்கு நேரான முறையில் அமைந்துள்ள மௌலிது கவிதைப் பாடல்களை பாடுவதும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஓர் விடயம் என்பதை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது. தற்போது அரபு நாடுகளிலும் குறிப்பாக ஷவூதி அரேபியாவில் ஹஜ்ஜிக்கு வரும் ஆரம்ப ஹாஜிகளை அழைக்கு போது தப் ரபான் அடித்து பாடல் பாடி வரவேற்பது இன்றும் நடைமுறையில் உள்ளது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

 

குறிப்பு :- மௌலிது என்பது பிறப்பை குறிக்கும், கவி நடையில் நபிமார்கள் நல்லடியார்களை புகழ்ந்து பாடுவதற்கு அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவ முஸ்லிம்கள் மௌலிது என்ற வார்த்தையை பயன் படுத்துகின்றனர். அல்லாஹ் யாவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.