20) நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களில் தொழுவது பற்றிய தெளிவு
20) நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களில் தொழுவது பற்றிய தெளிவு
📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأَرْضُ كُلُّهَا مَسْجِدٌ إِلَّا الْمَقْبَرَةَ وَالْحَمَّامَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். பூமி முழுவதும் தொழுமிடமாகும். குளியலறையையும், கப்ருஸ்தானங்களையும் தவிர.
அறிவிப்பவர் :- அபூ ஸயீத் அல்குத்ரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 317 இப்னு மாஜா 745
عَنْ أَبِي مَرْثَدٍ الْغَنَوِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا تُصَلُّوا إِلَى الْقُبُورِ، وَلَا تَجْلِسُوا عَلَيْهَا
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். கப்ருஸ்தானங்களை நோக்கித் தொழாதீர்கள். அவற்றின் மீது உட்காராதீர்கள்.
அறிவிப்பவர் :- அபூமர்ஸத் அல்கனவீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 972 நஸாயி 760 அஹ்மது 17215
♦️கப்ருஸ்தானங்களின் மீது தொழாதீர்கள் அவற்றை முன் நோக்கியும் தொழாதீர்கள். அவற்றின் மீது உட்காராதீர்கள் என்ற கருத்துக்களை மேற்கூறிய இரு ஹதீஸ்களும் நமக்கு தெளிவு படுத்துகிறது.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ أَسْوَدَ رَجُلًا أَوِ امْرَأَةً كَانَ يَقُمُّ الْمَسْجِدَ فَمَاتَ وَلَمْ يَعْلَمِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَوْتِهِ فَذَكَرَهُ ذَاتَ يَوْمٍ فَقَالَ مَا فَعَلَ ذَلِكَ الْإِنْسَانُ قَالُوا مَاتَ يَا رَسُولَ اللَّهِ قَالَ أَفَلَا آذَنْتُمُونِي فَقَالُوا إِنَّهُ كَانَ كَذَا وَكَذَا قِصَّتُهُ قَالَ فَحَقَرُوا شَأْنَهُ قَالَ فَدُلُّونِي عَلَى قَبْرِهِ فَأَتَى قَبْرَهُ فَصَلَّى عَلَيْهِ
பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த கரு நிறமுடைய ஓர் ஆணோ பெண்ணோ மரணித்து விட்டார். அவர் மரணித்த செய்தி இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெரியாமலிருந்தது. ஒரு நாள் திடீரென்று அவர் பற்றி நினைவு வந்ததும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அவர் என்ன ஆனார்?’ எனக் கேட்டார்கள். அதற்கு (தோழர்கள்) ‘இறைத்தூதர் அவர்களே! அவர் மரணித்து விட்டார்!’ என்றதும் ‘எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா?’ எனக் கேட்டனர். தோழர்கள், அவரைப் பற்றி அந்தஸ்துக் குறைவாகக் கருதி, ‘அவர் இன்னின்னவாறெல்லாம் இருந்தார்’ எனக் கூறினார்கள். உடனே இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அவரின் கப்ரை எனக்குக் காட்டுங்கள்’ என்று கூறி, கப்ருக்குக் வந்து (கப்ரின் அருகில்) தொழுதார்கள்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1337. 458, முஸ்லிம் 956 அபூ தாவூத் 3203
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى قَبْرٍ
நிச்சயமாக இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ரின் அருகாமையில் தொழுதார்கள்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மது 9272
♦️இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ரை ஸியாரத் செய்ய சென்றது மட்டுமின்றி அந்த கப்ருஸ்தானங்களுக்கு அருகில் நின்று தொழுதும் இருக்கிறார்கள் என்ற கருத்தை மேற்கூறிய இரு ஹதீஸ்களும் தெளிவு படுத்துகிறது.
عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ فَاطِمَةَ بِنْتَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ، كَانَتْ تَزُورُ قَبْرَ عَمِّهَا حَمْزَةَ كُلَّ جُمُعَةٍ فَتُصَلِّي
நிச்சயமாக இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகள் பாத்திமா நாயகி ரலியல்லாஹுஅன்ஹா அவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கப்ரை ஸியாரத் செய்வது மட்டுமின்றி. (அதற்கு அருகில் நின்று) தொழுபவர்களாகவும் இருந்தார்கள்.
அறிவிப்பவர் :- அலி இப்னு ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஹாகிம் 1436, முஸ்னத் அப்துர் ரஸ்ஸாக் 3/572
♦️பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கப்ரை ஸியாரத் செய்வது மட்டுமின்றி அந்த கப்ருகளுக்கு அருகில் நின்று தொழுதும் இருக்கிறார்கள் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.
குறிப்பு :- இஸ்லாத்தின் பார்வையில் கப்ருஸ்தானங்களின் மீது தொழுவதும் அதனை முன்நோக்கி தொழுவதும் அதன் மீது உற்காருவதையும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை ஸியாரத் செய்ய செல்பவர்கள் அதற்கு அருகில் நின்று கிப்லாவை முன்னோக்கி தொழுவதை இஸ்லாம் தடை செய்யவில்லை அதற்கு பூரண அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்