20) புறம் பேசுவதும் குறை கூறுவதும் சந்தேகம் கொள்வதும்

76

புறம் பேசுவதும் குறை கூறுவதும் சந்தேகம் கொள்வதும்

 

சாந்தி சமாதானத்தின் தீர்க்கதரிசி நபி முஹம்மத் ﷺ அவர்கள் இவ்வுல மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்.

 

ஆதாரமின்றி சந்தேகம் கொள்ளாதீர்கள், பிறரின் குறையைத் துருவித் துருவி ஆராயாதீர்கள்

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِيَّاكُمْ وَالظَّنَّ فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ وَلَا تَجَسَّسُوا وَلَا تَحَسَّسُوا

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது பெரும் பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புகாரி 5143 அபூதாவூத் 4917

 

புறம் பேசாதீர்கள்

 

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحَائِطٍ مِنْ حِيطَانِ الْمَدِينَةِ أَوْ مَكَّةَ فَسَمِعَ صَوْتَ إِنْسَانَيْنِ يُعَذَّبَانِ فِي قُبُورِهِمَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ ثُمَّ قَالَ بَلَى كَانَ أَحَدُهُمَا لَا يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ وَكَانَ الْآخَرُ يَمْشِي بِالنَّمِيمَةِ ثُمَّ دَعَا بِجَرِيدَةٍ فَكَسَرَهَا كِسْرَتَيْنِ فَوَضَعَ عَلَى كُلِّ قَبْرٍ مِنْهُمَا كِسْرَةً فَقِيلَ لَهُ يَا رَسُولَ اللَّهِ لِمَ فَعَلْتَ هَذَا قَالَ لَعَلَّهُ أَنْ يُخَفَّفَ عَنْهُمَا مَا لَمْ تَيْبَسَا أَوْ إِلَى أَنْ يَيْبَسَا

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தபோது, கப்ரில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது, ‘இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை’ என்று சொல்லிவிட்டு, ‘இருப்பினும் (அது பெரிய விஷயம்தான்) அவ்விருவரில் ஒருவர், தாம் சிறு நீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்’ என்று கூறிவிட்டு ஒரு பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ‘நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?’ என்று கேட்கப்பட்டதற்கு, ‘அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 216 முஸ்லிம் 292 நஸாயி 2068

 

மற்ற மனிதர்களைப் பற்றி புறம் பேசாதீர்கள், ஒட்டுக் கேட்காதீர்கள், கோபம் கொள்ளாதீர்கள், ஒன்று பட்டு வாழுங்கள்

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِيَّاكُمْ وَالظَّنَّ فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ وَلَا تَحَسَّسُوا وَلَا تَجَسَّسُوا وَلَا تَنَافَسُوا وَلَا تَحَاسَدُوا وَلَا تَبَاغَضُوا وَلَا تَدَابَرُوا وَكُونُوا عِبَادَ اللهِ إِخْوَانًا

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (வீண்) எண்ணத்தை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன். ஏனெனில் நிச்சயமாக (வீண்) எண்ணம் மிக பொய்யான செய்தியாகும். ஒட்டுக்கேட்காதீர்கள்! பிறர் குறைகளை துருவி ஆராயாதீர்கள்! ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்ளாதீர்கள்! சண்டையிட்டு பிணங்கிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வின் அடியார்களே! சகோதரர்களாக மாறிவிடுங்கள்! எனக் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 6724 முஸ்லிம் 2563

 

தீர விசாரிக்காமல் எந்த செய்திகளையும் பிறர்களிடம் கூறாதீர்கள்

 

عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ رَضِيَ اللَّهُ عَنْهَُ قَالَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَفَي بِالْمَرْءِ كَذِبًا اَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஒருவன் தான் கேட்ட செய்திகள் அனைத்தையும் (தீர விசாரிக்காமல்) பிறருக்குச் சொல்வது ஒன்றே அவன் பொய்யன்” பாவம் செய்பவன் என்பதற்குப் போதுமானதாகும்.

 

அறிவிப்பவர் :- ஹப்ஸ் இப்னு ஆஸிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 5 அபூ தாவூத் 4992

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.