21) சூது விழையாடுவதும் மது அருந்துவதும்

74

சூது விழையாடுவதும் மது அருந்துவதும்

 

சாந்தி சமாதானத்தின் தீர்க்கதரிசி நபி முஹம்மத் ﷺ அவர்கள் இவ்வுல மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்.

 

சூது விளையாடாதீர்கள், போதை தரக்கூடிய பானங்களை குடிக்காதீர்கள்

 

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْكُمْ الْخَمْرَ وَالْمَيْسِرَ وَالْكُوبَةَ وَقَالَ كُلُّ مُسْكِرٍ حَرَامٌ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக அல்லாஹ் மது (அருந்துவதையும்) சூது (விழையாடுவதையும்)| மற்றும் அல் கூபாவையும் தடை செய்துள்ளான். மேலும் ஒவ்வொரு போதை தரக்கூடிய பானங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மத் 2625, 3274

 

சூது விளையாடுவதற்கு பதிலாக தர்மம் செய்யுங்கள்

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ حَلَفَ فَقَالَ فِي حَلِفِهِ وَاللَّاتِ وَالْعُزَّى فَلْيَقُلْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَمَنْ قَالَ لِصَاحِبِهِ تَعَالَ أُقَامِرْكَ فَلْيَتَصَدَّقْ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யார் சத்தியம் செய்யும் போது “லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக!’ என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) “லாஇலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லட்டும்! எவர் தம் நண்பரிடம், “வா சூது விளையாடுவோம்” என்று கூறுவாரோ அவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 4860 அபூதாவூத் 3247 அஹ்மது 8087

 

மது அருந்தாதீர்கள், அதற்கு உடந்தையாக முன் நிற்காதீர்கள்

 

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَعَنَ اللَّهُ الْخَمْرَ وَشَارِبَهَا وَسَاقِيَهَا وَبَائِعَهَا وَمُبْتَاعَهَا وَعَاصِرَهَا وَمُعْتَصِرَهَا وَحَامِلَهَا وَالْمَحْمُولَةَ إِلَيْهِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மது சம்பந்தப்பட்ட சிலர்களை சபித்தார்கள், மதுவைக் தயாரிப்பவரை” தயாரிக்க உதவுபவரை” அதைக் குடிப்பவரை” அதனை ஊற்றிக் கொடுப்பவரை” அதனைச் சுமந்து செல்பவரை” அதற்கு துணை போனவரை” அதனை விற்பவரை” அதனை வாங்குபவரை.

 

அறிவிப்பவர் :- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூ தாவூத் 3674 இப்னு மாஜா 3380

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.