21) நபிமார்கள் நல்லடியார்கள் இருக்கும் இடத்தில் ரஹ்மத்து இறங்குமா?
21) நபிமார்கள் நல்லடியார்கள் இருக்கும் இடத்தில் ரஹ்மத்து இறங்குமா?
📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَۙ وَجَدَ عِنْدَهَا رِزْقًا قَالَ يٰمَرْيَمُ اَنّٰى لَـكِ هٰذَا قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ اِنَّ اللّٰهَ يَرْزُقُ مَنْ يَّشَآءُ بِغَيْرِ حِسَابٍ
குர்ஆன் கூறுகிறது ஜகரிய்யா அப்பிள்ளை இருந்த இடத்திற்குள் நுழையும் போதெல்லாம், அவளிடத்தில் (ஏதேனும்) உணவுப் பொருள் இருப்பதைக் கண்டு மர்யமே! இது உனக்கு ஏது? (எங்கிருந்து வந்தது?)” என்று கேட்பார். அதற்கவள் “இது அல்லாஹ் விடமிருந்துதான் (வருகின்றது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்கு அளவின்றியே உணவளிக்கின்றான் என்று கூறுவாள்.
சூரா ஆல இம்ரான் ஆயத் 37
هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهٗ قَالَ رَبِّ هَبْ لِىْ مِنْ لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً اِنَّكَ سَمِيْعُ الدُّعَآءِ
குர்ஆன் கூறுகிறது (அப்பொழுது) ஜகரிய்யா, அவ்விடத்தில் (தனக்காகத்) தன் இறைவனிடம் பிரார்த்தித்து “என் இறைவனே! உன் புறத்திலிருந்து எனக்கொரு நல்ல சந்ததியை அளிப்பாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனைகளை செவியேற்பவனாக இருக்கின்றாய் என்று கூறினார்.
சூரா ஆல் இம்ரான் ஆயத் 38
فَنَادَتْهُ الْمَلٰٓٮِٕكَةُ وَهُوَ قَآٮِٕمٌ يُّصَلِّىْ فِى الْمِحْرَابِۙ اَنَّ اللّٰهَ يُبَشِّرُكَ بِيَحْيٰى مُصَدِّقًا بِكَلِمَةٍ مِّنَ اللّٰهِ وَسَيِّدًا وَّحَصُوْرًا وَّنَبِيًّا مِّنَ الصّٰلِحِيْنَ
குர்ஆன் கூறுகிறது ஆகவே அவர் இடத்தில் (“மிஹ்ராப்”) நின்று தொழுது கொண்டிருந்த சமயத்தில் (அவரை நோக்கி) மலக்குகள் சப்தமிட்டுக் கூறினார்கள்: (ஜகரிய்யாவே!) நிச்சயமாக அல்லாஹ் “யஹ்யா” (என்ற ஒரு மக)வை உங்களுக்கு அளிப்பதாக நற்செய்தி கூறுகின்றான். அவர் அல்லாஹ்வின் ஒரு வாக்கியத்தை (முன்னறிக்கையை) உண்மைப்படுத்தி வைப்பார். (மனிதர்களுக்குத்) தலைவராகவும், (பெண்கள்) இன்பத்தைத் துறந்தவராகவும், நபியாகவும், நல்லொழுக்கம் உடையவராகவும் இருப்பார்.
சூரா ஆல இம்ரான் ஆயத் 39
♦️நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயான மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் இறைநேசச் செல்வியாகும். அவர்கள் இருக்கும் இடத்தில் உணவுப் பொருட்கள் பழவகைகள் ரஹ்மத்தின் மூலம் இறங்கிக் கொண்டிருந்தது. இதை பார்த்து நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூட ஆச்சரியப்பட்டார்கள். மேலும் அவர்கள் அந்த இடத்தில் இருந்து கொண்ட துஆ கேட்க அல்லாஹ் அந்த துஆவை அங்கிகரித்து அருள் புரிந்துள்ளான் என்ற கருத்தை மேற்கூறிய இறைவசனங்கள் தெளிவு படுத்துகிறது.
குறிப்பு :- நபிமார்கள் நல்லடியார்கள் வணங்கி வழிபடும் இடங்களில் அல்லாஹ்வின் ரஹ்மத்து இறங்கிக் கொண்டே இருக்கின்றன. அத்தகைய இடங்களில் வைத்து நம்முடைய தேவைகளை இறைவனிடம் கேட்டால் அது உடனடியாக அங்கிகரிக்கப்படும் என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்