21) நபி முஹம்மத் ﷺ அவர்களின் திருமுகம்

166

நபி முஹம்மத் ﷺ அவர்களின் திருமுகம்

 

عَنْ أَبِيهِ عَنْ أَبِي إِسْحَاقَ قَالَ سَمِعْتُ البَرَاءَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْسَنَ النَّاسِ وَجْهًا وَأَحْسَنَهُ خَلْقًا

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களிலேயே அழகிய முகம் உடையவர்களாகவும் அழகிய உருவ அமைப்பு உடையவர்களாகவும் இருந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- பராஉ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3549

 

عَنِ الْجُرَيْرِيِّ عَنْ أَبِي الطُّفَيْلِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قُلْتُ لَهُ أَرَأَيْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَعَمْ كَانَ أَبْيَضَ مَلِيحَ الْوَجْهِ

 

நான் அபுத்துஃபைல் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம், நீங்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம் அவர்கள் வெண்ணிறம் கொண்டவர்களாகவும் களையான முகமுடையவராகவும் இருந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- ஸயித் இப்னு இயாஸ் அல்ஜுரைரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2340

 

عَنِ الْجُرَيْرِيِّ عَنْ أَبِي الطُّفَيْلِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا عَلَى وَجْهِ الْأَرْضِ رَجُلٌ رَآهُ غَيْرِي قَالَ فَقُلْتُ لَهُ فَكَيْفَ رَأَيْتَهُ؟ قَالَ كَانَ أَبْيَضَ مَلِيحًا مُقَصَّدًا

 

(நபித்தோழர்களில் இறுதியாக உயிர் வாழ்ந்த) அபுத்துஃபைல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நான் பார்த்திருக்கிறேன்; இந்தப் பூமியின் மீது அவர்களைப் பார்த்தவர் என்னைத் தவிர வேறெந்த மனிதரும் (இப்போது உயிருடன்) இல்லை என்று கூறினார்கள். அச்சமயம்
அவர்களிடம் நான், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எவ்வாறு கண்டீர்கள்? என்று கேட்டேன். அதற்கு, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெண்ணிறம் கொண்டவர்களாகவும் கலையான தோற்றமுடையவராகவும் நடுத்தரமான உடல்வாகு கொண்டவராகவும் இருந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- சயீத் இப்னு இயாஸ் அல்ஜுரைரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2340 அஹ்மது 23797

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.