21) நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்

116

21) நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்

 

♦️பெயர் :- யூனுஸ் (யோனா)

 

♦️பிறப்பு :- கிமு. 0820

 

♦️தந்தை பெயர் :- மத்தா

 

♦️தாய் பெயர் :- பதூரா

 

♦️வசிப்பிடம் :- ஈராக் நாட்டிலுள்ள நைனுவா என்ற ஊரில் வாழ்ந்து வந்தார்கள்.

 

♦️அரசனின் பெயர் :- முல்யிப் இப்னுல் இர்ஷா

 

♦️மீன் :- யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீன் வயிற்றில் சுமார் 40 நாள்கள் இருந்துள்ளார்கள், அதற்குள் 7 கடல்களையும் முழுமையாக அவர்கள் சுற்றி வந்தார்கள், அந்த மீனின் வயிறு கண்ணாடி கூடம் போன்றிருந்தது. அங்கிருந்தவாறே கடலுக்குள் அல்லாஹ்வின் படைப்பினங்கள் அனைத்தையும் கண்டு வியந்தவாறு தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தார்கள்.

 

♦️மீனின் பெயர் :- தவ்ராத் வேதத்தில் ரகா என்றும். ஜபூர் வேதத்தில் மாலூயா என்றும். இன்ஜீல் வேதத்தில் மூகினா என்றும். திருக்குர்ஆனில் நூன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

♦️ஆயுட்காலம் :- நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுமார் 60 வருடங்கள் வாழ்ந்துள்ளார்கள்.

 

♦️மரணம் :- கிமு. 0750

 

♦️கப்ரு :- நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் ஈராக் நாட்டிலுள்ள மோசுல் கலீல் என்ற ஊரில் அமைந்துள்ளது.

 

♦️குர்ஆன் :- நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயர் குர்ஆனில் 6 இடங்களில் இடம் பெற்றுள்ளது.

 

WORLD ISLAM YSYR
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.