22) நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களில் ரஹ்மத்து இறங்குமா?

266

22) நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களில் ரஹ்மத்து இறங்குமா?

 

📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ

 

குர்ஆன் கூறுகிறது மஸ்ஜிதுல் அக்ஸா சுற்றுப்புறங்களுக்கு அவன் பரகத்து செய்துள்ளான்.

 

சூரா பனீ இஸ்ராயீல் ஆயத் 1

 

மஸ்ஜிதுல் அக்ஸா சுற்றுப்புறங்களுக்கு அவன் பரகத்து செய்துள்ளான் என்ற கருத்தை மூலாதாரமாக வைத்துப் பார்க்கும்போது மஸ்ஜிதுல் அக்ஸா சுற்றுச் சூழலில் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள முக்கிய நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஷ்தானங்கள் அதிகளவில் அமைந்துள்ளதை நம்மால் காண முடிகிறது.

 

சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு

இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு

ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு

தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு

யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு

ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு

மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு

ஸாரா நாயகி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு

ஹாஜரா நாயகி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு

 

♦️இன்னும் பல நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஷ்தானங்கள் மஸ்ஜிதுல் அக்ஸா சுற்றுப் பகுதிகளில் பலஸ்தீன மண்ணில் அமைந்துள்ளது. எனவே மஸ்ஜிதுல் அக்ஸா சுற்றுப்புறங்களுக்கு அல்லாஹ் பரகத்து செய்துள்ளான் என்பதன் அர்த்தம் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஷ்தானங்களையே குறிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

 

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَمَّا مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحِجْرِ قَالَ لَا تَدْخُلُوا مَسَاكِنَ الَّذِينَ ظَلَمُوا أَنْفُسَهُمْ أَنْ يُصِيبَكُمْ مَا أَصَابَهُمْ إِلَّا أَنْ تَكُونُوا بَاكِينَ ثُمَّ قَنَّعَ رَأْسَهُ وَأَسْرَعَ السَّيْرَ حَتَّى أَجَازَ الْوَادِيَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ஹிஜ்ர்’ பிரதேசத்தைக் கடந்து சென்றபோது, ‘தமக்குத்தாமே அநீதியிழைத்துக் கொண்டவர்களின் வசிப்பிடங்களில் நுழையும்போது (இறைத் தண்டனையாக) அவர்களைத் தீண்டிய வேதனை, நம்மையும் தீண்டிவிடுமோ எனும் அச்சத்துடன் அழுதுகொண்டு நுழைவதைத் தவிர வேறு விதமாக நுழையாதீர்கள்’ என்று கூறினார்கள். பிறகு, தம் தலையை (தம் மேலங்கியால்) மறைத்துக்கொண்டு அந்தப் பள்ளத்தாக்கைக் கடக்கும் வரை வேக வேகமாகப் பயணித்தார்கள்.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 4419

 

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَدْخُلُوا مَسَاكِنَ الَّذِينَ ظَلَمُوا أَنْفُسَهُمْ إِلَّا أَنْ تَكُونُوا بَاكِينَ أَنْ يُصِيبَكُمْ مِثْلُ مَا أَصَابَهُمْ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். தமக்குத்தாமே அநீதியிழைத்தவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்குக் கிடைத்ததைப் போன்ற தண்டனை உங்களுக்கும் கிடைத்துவிடுமோ என்றஞ்சி அழுதபடியே தவிர (வேறு எந்தவிதமாகவும்) நுழையாதீர்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3381

 

♦️நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சமூத் கூட்டத்தினர் வாழ்ந்த ஹிஜ்ர் எனும் பகுதியானது மிகமிக ஆபத்தான பகுதியாகும். அங்கு வாழ்ந்த சமூது கூட்டம் அல்லாஹ்வின் சோதனை காரணமாக அழிக்கப்பட்டார்கள். அந்த பகுதியில் இன்னுமும் சோதனை இறங்கி கொண்டே இருக்கிறது என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்களை வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

 

وَلَا تَقُوْلُوْا لِمَنْ يُّقْتَلُ فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتٌ بَلْ اَحْيَآءٌ وَّلٰـكِنْ لَّا تَشْعُرُوْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிந்து (எதிரி களால்) வெட்டப்பட்டவர்களை மரணித்தவர்கள் எனக் கூறாதீர்கள். மாறாக, (அவர்கள்) உயிரோடு இருக்கிறார்கள். ஆனால் (அதை) நீங்கள் உணர்ந்துகொள்ள மாட்டீர்கள்.

 

சூரா பகரா ஆயத் 154

 

عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ فَنَبِيُّ اللَّهِ حَيٌّ يُرْزَقُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நபிமார்கள் கப்ரிலில் (மறைந்த வன்னம்) உயிருடன் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய உடம்பை மண் தின்னாது. அவர்கள் கப்ரில் (சுவர்க்க) உணவுகள் வழங்கப்படுகிறது என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ தர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 1637

 

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الأَنْبِيَاءُ أَحْيَاءٌ فِي قُبُورِهِمْ يُصَلُّونَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நபிமார்கள் தாங்களின் கப்ருஸ்தானங்களில் தொழுது கொண்டிருக்கிறார்கள்.

 

அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பஸ்ஸார் 256, பத்ஹுல் பாரி 6/561 ஜாமிஉஸ் ஸகீர் 3089

 

♦️நபிமார்கள் நல்லடியார்கள் கப்ரிலில் மறைந்த வன்னம் உயிருடன் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய உடம்பை மண் தின்னாது. அவர்களுக்கு சுவர்க்க உணவுகள் வழங்கப்படுகிறது. அவர்களின் கப்ருஸ்தானங்களில் அவர்கள் தொழுது வருகிறார்கள் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

குறிப்பு :- அல்லாஹ்வின் சோதனை காரணமாக அழிக்கப்பட்ட வழிகேடர்களின் கப்ருஸ்தானங்களில் இன்னுமும் சோதனை இறங்கி கொண்டே இருக்கின்றது. அதேபோல் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்ற நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களில் இன்னுமும் ரஹ்மத்து இறங்கிக் கொண்டே இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. காரணம் அவர்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்ற நிலையில் வீரமரணம் அடைந்தவர்கள். அவர்கள் மறைந்த வன்னம் உயிருடன் இருக்கிறார்கள். அவர்களுடைய உடலை மண் தீண்டாது. அவர்கள் தங்களது கப்ருஸ்தானங்களில் அல்லாஹ்வை தொழுது வணங்கி வழிபட்டு வருகின்றார்கள். அத்தகைய நபிமார்கள் நல்லடியார்கள் மரணித்து அடக்கம் செய்யப்பட்ட இடங்களில் இன்னுமும் ரஹ்மத்து இறங்கிக் கொண்டே இருக்கிறது என்ற கருத்தை மேற்கூறிய திருக்குர்ஆன் ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.