22) நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்
22) நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்
♦️பெயர் :- ஜகரிய்யா (செக்கரியா)
ஜகரிய்யா என்பது இப்ரானி சொல்லாகும். இதன் பொருள் அல்லாஹ்வை என்றும் தியானித்து வருபவர் என்பதாகும்.
♦️பிறப்பு :- கிமு. 0091
♦️தந்தை பெயர் :- லதுன் (பர்ஹிய்யா)
♦️மனைவியர் :- ஈசாவு (யூனானி” எலிசபெத்)
♦️சமூகம் :- பனீ இஸ்ரவேலர்கள்
♦️தொழில் :- மரவேலை, நச்சுத் தொழில்
♦️பிள்ளைகள் :- யஹ்யா
♦️தலைமுறை :- ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள். தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் 14ஆவது தலை முறையில் வந்தவர்கள்” மேலும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பின் 1800 வருடங்கள் கழித்து இவர்கள் தோன்றினார்கள்.
♦️ஆயுட்காலம் :- ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுமார் 207 அல்லது 300 வருடங்கள் வாழ்ந்தார்கள்.
♦️ஸஹீத் :- நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எதிரிகளால் கொல்லப்பட்டு ஸஹீதானார்கள்.
♦️மரணம் :- கிமு. 0031
♦️கப்ரு :- நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் பலஸ்தீன் நாட்டிலுள்ள வாஹதுஸ் ஸலாம் என்ற ஊரில் அமைந்துள்ளது.
♦️குர்ஆன் :- நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயர் குர்ஆனில் 8 இடங்களில் இடம் பெற்றுள்ளது.
WORLD ISLAM YSYR
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்