22) நபி முஹம்மத் ﷺ அவர்களின் நிரம்

138

நபி முஹம்மத் ﷺ அவர்களின் நிரம்

 

عَنْ مَسْرُوقٍ قَالَ دَخَلْنَا عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو حِينَ قَدِمَ مَعَ مُعَاوِيَةَ إِلَى الْكُوفَةِ فَذَكَرَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَمْ يَكُنْ فَاحِشًا وَلَا مُتَفَحِّشًا، وَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ أَخْيَرِكُمْ أَحْسَنَكُمْ خُلُقًا

 

முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (இராக்கில் உள்ள) கூஃபாவுக்கு வந்தபோது நாங்கள் அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நினைவுகூர்ந்து, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை என்று கூறிவிட்டு, நற்குணங்கள் வாய்ந்தவரே உங்களில் மிகவும் சிறந்தவர் என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

 

அறிவிப்பவர் :- மஸ்ரூக் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். ஆதாரம் புஹாரி 6029 முஸ்லிம் 2321 திர்மிதி 1975 அஹ்மது 6504, 6818

 

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَهُ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلاَ بِالأَبْيَضِ الأَمْهَقِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். சுத்த வெள்ளை நிறம் உடையவர்களாக இருக்கவில்லை.

 

அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3548 திர்மிதி 3623 அஹ்மது 13519

 

عَنْ إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ قُلْتُ لِأَبِي جُحَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ صِفْهُ لِي قَالَ كَانَ أَبْيَضَ قَدْ شَمِطَ

 

நான் அபூ ஜுஹைஃபா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தன்மையை எனக்கு கூறுங்கள்’ என்று சொன்னேன். அதற்கு அவர்கள், இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொன்னிறமுடையவர்களாக, வெண்மை கலந்த கருநிற தலை முடியுடையவர்களாக இருந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- இஸ்மாயீல் இப்னு அபீ காலித் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். ஆதாரம் புஹாரி 3544

 

عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ كَانَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أُنْزِلَ عَلَيْهِ الْوَحْيُ كُرِبَ لِذَلِكَ وَتَرَبَّدَ وَجْهُهُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்பெறும் போது, அவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும்; அச்சமயம் அவர்களது முகம் சாம்பல் நிறத்திற்கு மாறிவிடும்.

 

அறிவிப்பவர் :- உபாதத் இப்னு அஸ்ஸாமித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2334 அஹ்மது 22780

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.